articles

img

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் எச்சரிக்கை மணி - டி.கே.ராஜலட்சுமி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை சமீபத்தில் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தை கடுமையாக விமர்சித்துள்ளது ; திட்டம் குறித்து விமர்சனப் பூர்வமான மதிப்பீட்டை செய்துள்ளது.

விமர்சனங்களும் , பரிந்துரைகளும்

ம.கா.தே.ஊ. வே. உ. திட்டத்தில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும்; தொழிலாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்; குடும்பத்திற்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை என்பதை 150 நாட்க ளாக உயர்த்த வேண்டும் போன்ற 33 பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்ச கத்தின் அணுகுமுறையை கடுமையாகச் சாடி யுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் மாநில அரசுகளின் தவறுகளை மட்டுமே பெரிதுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டாட்சி அமைப்பில் மக்கள் நலத் திட்டத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுகள் இந்த நேரத்திற்கான தேவையல்ல. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொதுவான லட்சியமே இந்த காலத்திற்கான தேவை.  பீகாரில் ரூ.198, உ.பி.யில் ரூ.204, ஜார்க்கண்டில் ரூ.198, மேற்கு வங்கத்தில் ரூ.204 என்று மிகவும் குறைவான அளவில்  விவசாயத் தொழிலாளர்க ளுக்கான ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு  வழங்க வேண்டிய  ஊதிய நிலுவைத் தொகை

நவம்பர் 2021 வரை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொழிலாளர்களுக்கான நிலுவை ஊதியத்தொகை ரூ.2,76,378.22 லட்சங்கள் ஆகும்.இது மிகவும் கவலையளிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு ம.கா.தே.ஊ. வே. உ. திட்டத்தில் கிடைக்கும் ஊதியம்   கிராமப்புற தொழிலா ளர்களுக்கு மிகவும் ஒத்தாசையாக உள்ளது. அவர்களின் கண்ணியமான பொருளாதார மேம்பாட்டுக்கு இதுவே கடைசி நம்பிக்கையாக உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது கிராமப்புற தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்கவேண்டிய ஊதிய தொகையை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதற்கு யாதொரு நியாய மான காரணமும் இல்லை. திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நிலைக்குழு அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது. நிலுவை ஊதியம்  வழங்கப்படாததற்கு தொழிலா ளர்களுக்கு  மின்னணு பரிமாற்றத்தின் மூலம்  ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளே காரணம் என்று ஒன்றிய அமைச்சர கம் கூறுகிறது.

குறைக்கப்பட்ட திட்ட ஒதுக்கீடு

கொரோனா பெருந்தொற்று  காலத்தின் போதும், அதற்கு முந்தைய காலத்திலும் கிராமப்புறங்களில் நிலவும் கடுமையான வேலையின்மையைக் கணக்கில் கொள்ளாமல் ஒன்றிய அரசானது திட்டத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதாக நிலைக்குழு குற்றம்  சாட்டியுள்ளது. கடந்த ஐந்துஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்ட திருத்திய மதிப்பீட்டில் வேலைக்கான தேவை அதிகரித்தே வந்துள்ளது. ஆனால் 2021 - 22 -க்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.73,000 கோடியாக குறைக் கப்பட்டு இருப்பது வியப்பளிப்பதாக நிலைக் குழு தெரிவித்துள்ளது. இத்தனைக்கும் முந்தைய நிதி யாண்டில் திட்ட நிதி ஒதுக்கீடு ரூ. 1,11,170.86 கோடி ஆகும். 2020-21 இல் புலம்பெயர்  தொழிலாளர்கள் தங்க ளின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதன் காரண மாக ம‌.கா.தே.வே.உ. திட்டத்தில் வேலை கோருவோர் எண்ணிக்கை கடுமையாக  அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்திற்கான அதிகரித்து வரும் செலவினங்களை  மனதில் கொண்டு ஒன்றிய  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் தனது பட்ஜெட் ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். ம.கா.தே.ஊ. வேலை உறுதிச் சட்டம் அடிப்படை யில் மக்கள் வேலை கோருவதின் அடிப்படையில் அமைந்த திட்டம் (demand driven scheme). ஆனால் ஒன்றிய அரசு 2021-22 க்கான வரவு செலவுத் திட்டத்தில் திட்ட ஒதுக்கீட்டை குறைத்துள்ளது சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

பாதுகாப்பு வளையம் மட்டுமே

ம.கா.தே.ஊ.வே.உ. திட்டம் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வாகாது; திட்டம் ஒரு பாதுகாப்பு வளையம் மட்டுமே என்று ஒன்றிய அரசு தனது முடிவுக ளுக்கு நியாயம் கற்பிக்கிறது. தற்போதைய பட்ஜெட்டில் புதிதாக வேலை வாய்ப்புகளை(!?) உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், எனவே ம.கா.தே.ஊ.வே. உ. திட்டத்தை சார்ந்திருப்பது குறைக்கப்பட்டுள்ளதா கவும் ஒன்றிய அரசு கூறிக் கொள்கிறது. 2020-21 க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டது. எனினும் அந்த திருத்திய மதிப்பீடு தொகை யும் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை. 2021 செப்டம்பர் வரையில் விடுவிக்கப்பட்ட நிதி 2017 - 18 வழங்கப்பட்ட தொகையைவிட மிகவும் குறைவாக உள்ளது.

சட்டத்தின்படி  வழங்கப்படாத முழு வேலை நாட்களும்- ஊதியமும்

ம.கா.தே.ஊ. வேலை உறுதிச் சட்டம்,  2005-ன்படி, உடல் உழைப்பு நல்கக் கூடிய திறன் சாராத தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை அளிக்கும் வேலை உத்தரவா தம் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், 2021-22 இல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 51.52 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 இல் 755.36  லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,72 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே முழுமையான நூறு நாட்கள் வேலை அளிக்கப்பட்டுள்ளது.

கேரளம் ,மேகா லயா, மிசோரம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரி யை விட தொடர்ச்சியாக அதிகமான நாட்களுக்கு வேலை வழங்கியுள்ளன. தொழிலாளருக்கு வழங்கப்பட்ட சராசரி சம்பள விகிதம் 2020-21 இல் ரூ. 200.72 ஆகவும், 2021-22 இல் ரூ.206.39ஆகவும் இருந்தது. சட்ட விதிகளின்படி ஒன்றிய அரசு மட்டுமே தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகையை முழுமையாக  வழங்க வேண்டும். கட்டுமான பொ ருட்கள் மற்றும் திட்ட நிர்வாக செலவினங்களுக்கான தொகையில் ஒன்றிய அரசு நான்கில் மூன்று பங்கும் மாநில அரசுகள் நான்கில் ஒரு பங்குத் தொகையை யும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் இத்து டன் விவசாய தொழிலாளர்கள் வேலை கோரி விண்ணப்பித்த 15 நாட்களில் வேலை வழங்கவில்லை எனில் வேலையில்லா காலத்திற்கான நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டியுள்ளது. மேலும் தாமதமாக வழங்கப்படும் ஊதியத்திற்கும் மாநில அரசுகளே வேலையில்லாகாலப் படி வழங்க வேண்டும். 2020 - 21இல் 705.36 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 72 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்கள் முழுவதுமாக வேலை அளிக் கப்பட்டுள்ளது. தேசிய சராசரியைவிட கேரளம் மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்கள் தொடர்ச்சி யாக அதிகப்படியான வேலை நாட்களை வழங்கி யுள்ளன. 

நிலவும் குறைந்தபட்ச  ஊதிய வேறுபாடு

மாநிலங்களுக்கிடையில் ஊதிய விகிதத்தில் பெருத்த வேறுபாடு நிலவுகிறது. சிக்கிம் மாநிலத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 313 வரை உள்ளது.கேரளம் கோவா போன்ற மாநிலங்களில் ஊதியம் ரூ. 290 ஆக உள்ளது.

மாநிலங்கள் மீது பொறுப்பை சுமத்தும் ஒன்றிய அரசு

வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டமேதும் பரிசீலனையில் உள்ளதா என்று நிலைக்குழுவின் கேள்விக்கு ஒன்றிய அரசு இயற்கை பேரிடர்களின் போது மட்டுமே கூடுதலாக 50 நாட்கள் வழங்க முடியும் என்று பதில் அளித்துள்ளது. மாநிலங்கள் கூடுதலாக 50 வேலை நாட்கள் வழங்க வேண்டும் என்று விரும்பினால் மாநிலங்களின் நிதி யிலிருந்து கூடுதலாக 50 நாட்களுக்கான ஊதியத்தை வழங்கலாம் என்று மாநிலங்களின் மீது பொறுப்பை தள்ளிவிடுகிறது ஒன்றிய அரசு. இதுவரை எந்த மாநி லத்திற்கும் 100 நாட்களுக்கு மேலாக அதிகப்படி யான வேலை நாட்களுக்குரிய  ஊதியம் வழங்கப்பட வில்லை என ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. வரலாறு காணாத அளவில் அசாதாரணமான பொருளாதார நெருக்கடியை  கிராமப்புற ஏழைகள் சந்தித்து வருகின்றனர். ஆனால் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்தை அதிகரிப்பது  அல்லது வேலை நாட்களை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசிடம் திட்டம் ஏதுமில்லை. 2018 முதலான தரவுகளின் படி திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களில் 54 சதவீதம் பெண்களா வர். 2018-19 முதல்  அதிகரித்துவரும் விவசாயத் தொழி லாளர்களின் வேலை அடையாள அட்டைகள் (job cards)  கிராமப்புற வேலையின்மை நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. 2021-22 இல் 1532.99 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 755.32 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.

குடிபெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் மக்கள்

பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்கள் விலை வாசி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்து வரும்  நிலைமையில்- விளிம்புநிலை சமூக மக்களே பெரும்பகுதி பயனாளர்கள் உள்ள இத்திட்டத்தில் ஊதியம் வெறும் பெயரளவுக்கு உள்ள நிலை குறித்து நிலைக்குழு பெரிதும் கவலை அடைந்துள்ளது. இதனால் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் நகர்ப் புறங்களுக்கு  குடிபெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படு வார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளது. 2021-22 இல் (ஆக.31 வரை) வேலையட்டை வழங்கப் பட்ட 537.78 லட்சம் குடும்பங்களில்   7.76 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே முழுமையாக 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வாழ்க்கைச் செலவுகளுக்கு நிகராக விவசாயத் தொழிலாளர்க ளுக்கான குறைந்தபட்ச ஊதியத் தொகையை உயர்த்த  வேண்டும் என்று  நிலைக்குழு வலியுறுத்தியும் ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை. மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ. 193 இல் இருந்து ரூ.318 வரை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு நியாய மல்ல.  ஊதிய வேறுபாட்டை சரி செய்தால் தான் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நல னுக்கு உகந்ததாக, திட்டத்தின் நோக்கத்தை நிறை வேற்றுவதாக இருக்கும். வேலையில்லா கால நிவாரணம் வழங்கும் பொறுப்பையும் மாநிலங்கள் மீது சுமத்துவது சரியல்ல.

குறைதீர் அலுவலர்கள்...

சட்டத்தின்படி குறை குறைதீர்க்கும் அலுவலர்கள் (ombudsman) முழுமையான அளவில் நியமனம் செய்யப்படாததற்கு நிலைக்குழு கண்டனம் தெரி வித்துள்ளது. நாடு முழுவதும் 715  குறைதீர்க்கும் அலு வலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலையில் வெறும் 263 குறைதீர்க்கும் அலுவலர்கள் மட்டுமே நிய மனம் செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலம்  நியமனம் செய்யப்படாததை  நியாயப்படுத்தவே முடியாது. சந்தைத் தேவையை உருவாக்க மக்கள் கையில் பணம் வழங்க வேண்டும் என்று புகழ்பெற்ற பொரு ளாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொரு ளாதார மீட்சி அடைவதில் பெரும் தேக்க நிலை நிலவி வருகிறது. இச்சூழ்நிலையில் கிராமப்புற/ நகர்ப்புற ஊதிய விகிதம் உயர்த்தப்பட வேண்டும்; வேலை  நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும்; நகர்ப்புறங்க ளுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்; நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்குழு பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.  நிலைக்குழுவின் அறிக்கை அரசைக் கட்டுப் படுத்தாது என்றபோதிலும் இந்த அறிக்கை கிராமப்புற வறுமையின் எதார்த்த  நிலையை கணக்கில் கொண்டு ம.கா.தே.வே.உ. திட்டத்தின் மூலமாக மக்க ளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கான அறிவுரை களை வழங்கியுள்ளது.

ஃப்ரண்ட்லைன், மார்ச் 11, 2022. 
தமிழில் : ம.கதிரேசன்