articles

img

வீர காவியம் படைத்த டாக்டர் அசோக் தாவ்லே

டாக்டர் அசோக் தாவ்லே. விவசாயிகள் மகா எழுச்சியின் களமெங்கும் இடைவிடாமல் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பெயர். இன்றைய மகா எழுச்சிக்கு, மகாராஷ்டிராவில் விவசாயிகளைத் திரட்டி நாசிக் முதல் மும்பை வரை மிகப் பிரம்மாண்டமான நீண்ட நடைபயண போராட்டத்தை நடத்திக் காட்டி வழிகாட்டியவர். மும்பையில் இருப்பார். அடுத்த நாள் முசாபர் நகரில் இருப்பார். அடுத்த நாள் சிங்கு எல்லையில் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பார். அடுத்த நாள் பீகாரில் ஒரு குக்கிராமத்தில் நான்கு விவசாயிகளுடன் பேசிக் கொண்டிருப்பார். வட இந்தியா முழுவதும் சுற்றிச் சூழன்று கொண்டே இருந்தன இவரது கால்கள். விவசாயிகளின் மகா எழுச்சி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால் அதை இயக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் டாக்டர் அசோக் தாவ்லே. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) அகில இந்தியத் தலைவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர். பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு அதன் அரசியல் பின்னணி என்ன என்பதையும் விவசாயிகள் எழுச்சியின் வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் விரிவாக விளக்குகிறார். அவரது சிறப்பு நேர்காணல்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்ததா அல்லது ஏற்கனவே இது தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வந்ததா?  இது குறித்த சில முன்மொழிவுகளோடு இடைத்தரகர்கள் மூலம் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவை அமரிந்தர் சிங் தொடர்பு கொண்டதாக வதந்திகள் குறிப்பிடுகின்றனவே?

பிரதமர் தனது வழக்கமான பாணியில் மூன்று கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெறுவது பற்றி  தன்னிச்சையாக அறிவித்தார்.  அவரது இத்தகைய அறிவிப்புக்கு முன் எஸ்கேஎம்மின் தலைவர்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டதா என்று  கூட எங்களுக்குத் தெரியாது.  திடீரென வந்த அறிவிப்பு எதிர்பாராத ஒன்றாகும். எனினும், ஒன்றிய அரசு அதி களவில் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டு வருவது கடந்த மூன்று மாதங்களாக தெளிவாகி வந்தது.  இது ஐந்து பிரதான காரணிகளின் விளைவாகும்.  செப்டம்பர் 5 அன்று முசாபர்நகரில் 10 லட்சம் விவசாயிகளின் பங்கேற்போடு வலுவாக நடைபெற்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் மகா பஞ்சாயத்து முதல் காரணியாகும். இதில் பங்கேற்ற விவசாயிகள், தொழிலாளர்களில் பெரும்பாலான வர்கள் உத்தரப்பிரதேசத்தை சார்ந்தவர்கள் என்ற போதும், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநி லங்களிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்ற னர். 2013ஆம் ஆண்டில் முசாபர்நகரில் ஆர்எஸ்எஸ்  - பாஜக -விஎச்பி பரிவாரங்களால் சீர்குலைக்கப்பட்ட மதச்சார்பற்ற ஒற்றுமையை மீண்டும் கட்டுவதில் பெற்ற வெற்றி இந்த இயக்கத்தின் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த அம்சமாகும். 

செப்டம்பர் 27 அன்று தேசம் தழுவிய முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) எஸ்கேஎம் விடுத்த அறை கூவல், இதற்கு முன் எப்போதும் இருந்திராத அள விற்கு வெற்றி பெற்றது இரண்டாவது அம்சமாகும். கடந்த ஓராண்டு காலத்தில் நடைபெற்ற மூன்றாவது பாரத் பந்த் இது என்பதோடு, இவற்றில் மிக வெற்றி கரமாக நடைபெற்ற ஒன்றாகும்.  இந்த முழு அடைப்பை  மாபெரும் வெற்றியாக்கிட,    சாதி, மத, பிராந்திய, மொழி வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதிலு மிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், தொழி லாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஊழியர்கள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தெருக்களில் இறங்கி பங்கேற்றனர்.   உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் போராட்டத்தின் வீச்சு அதிகரித்தது மூன்றாவது அம்சமாகும்.  பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டமானது நடை முறையில் அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டை யும் சென்றடைந்தது.  ஹரியானா மாநிலத்தில் ஆட்சி யதிகாரத்தில் உள்ள பாஜக-ஜேஜேபி அரசின் இடை விடாத அடக்குமுறையும், அதனை எதிர்த்த விவசாயி களின் வீரஞ்செறிந்த, வெற்றிகரமான போராட்டமும் ஒரு வீரகாவியமாகும்.  உத்தரப்பிரதேசத்திலும் போராட்ட இயக்கம் பரவியது.

பாஜகவின் மத்திய உள்துறை அமைச்சர் அஜய்  மிஸ்ரா டெனியின் உத்தரவின் பேரில் லக்கிம்பூர் கெரி யில் திகைப்பூட்டும் வகையில், கொடூரமாக 4 விவசாயி களும், பத்திரிகையாளர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டது நான்காவது காரணியாகும். இத்துடன், குற்றவாளிகளுக்கு பிரதமரும், உபி மாநில  முதல்வரும் பாதுகாப்பளித்தனர். இது நாடு முழுவது முள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தசரா தினமான அக்டோபர் 15 அன்று, நாடு முழு வதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளாலும், தொழிலாளர்களாலும் பாஜகவின் உயர்மட்ட தலை வர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.  அக்டோபர் 18 அன்று நூற்றுக்கணக்கான மையங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப் பட்டன.  லக்கிம்பூர் கெரி தியாகிகளின் அஸ்தி கலச யாத்திரை நாடு முழுவதும் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற  தேர்தல்கள் நிச்சயமாக ஐந்தாவது காரணமாகும்.  இத்தேர்தல்களில் தாங்கள் எதிர்கொள்ளவுள்ள கடுமையான ஆபத்து குறித்து பிரதமரும், ஆர்எஸ்எஸ்-பாஜகவும் தாமதமாகவே உணர்ந்தன

ஒரு வருட கால வீரகாவியமான விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தோடு, மேற்கூறப்பட்ட ஐந்து உடனடிக் காரணிகளின் ஒட்டுமொத்த விளை வாகவே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியானது. இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும்.  இவ்வெற்றி வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும்.  மோடியின் கடந்த ஏழாண்டு ஆட்சிக் காலத்தில், பின் வாங்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ளது.  இதற்கு முன் 2015ல், நிலம் கையகப்படுத்தல் சட்டத்திருத்த அவசரச் சட்டத்தை  திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.  அதுவும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தின் விளைவாகவே நிகழ்ந்தது. 

பிரதமரின் அறிவிப்பை பொருட்படுத்தாது போராட்டம் தொடர்கிறது.  குறைந்தபட்ச ஆதார விலை ஏன் அவ்வளவு முக்கியமாகிறது?  எந்தெந்த மாநிலங்களுக்கு இது இன்னமும் கூடுதலாகத் தேவைப்படுகிறது?

மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதோடு, விவசாயிகள் விளைவிக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் ஆகும் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவின் ஒன்றரை  மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) உத்தரவாதம் செய்கிற மத்தியச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு முக்கியமான கோரிக்கை யாகும்.  இது டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை யில் நியமிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் அளித்த அடிப்படை பரிந்துரையாகும்.       

1995 முதல் 2020 வரையிலான கடந்த 25 ஆண்டு களில் நவீனதாராளவாத கொள்கை அமலாக்கத்தின் விளைவாக கடன் வலையில் சிக்கி இந்தியாவில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மோடி  அரசின் கடந்த ஏழாண்டு ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இது இந்தியா வில் நிலவும் விவசாய நெருக்கடியின் முக்கியமான வெளிப்பாடாகும். 

மேற்கூறப்பட்ட விகிதத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை தான் ஏற்கனவே செயல்படுத்திவிட்டதாக மோடி அரசு சொல்வது பச்சைப் பொய்யாகும்.  விவ சாயிகள் தங்களது விளைச்சலுக்காக செலவிட்ட தொகையோடு, அறுவடை செய்யும் வேலையில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கப்படாத கூலியை இணைத்து குறைந்தபட்ச ஆதார விலையை  மதிப்பிடும் A2 + FL எனும் சூத்திரத்தையே அரசு பயன்படுத்துகிறது.  இது விவசாயி தனது பயிர் விளைச்சலுக்கு செய்த மொத்த செலவுத் தொகையோடு 50% கூடுதலாக அளிக்கும் C2+50% என்ற சூத்திரத்தின்படி வரும் தொகையைவிட மிகக் குறைவானதாகும்.  இவ்வாறாக, மோடி அரசு விவசாயிகளை வஞ்சிக்க முயன்றது.  2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக ஏழாண்டுகளுக்கு முன் அரசு படாடோபமாக அறிவித்தது.  ஆனால், 2022ஆம் ஆண்டை நெருங்கி வரும் வேளையில், உண்மையில் விவசாயிகளின் வருமானம் முதல் முறையாக வீழ்ச்சியடைந்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (என்எஸ்எஸ்ஓ) சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 

23 வகையான குறுவை மற்றும் சம்பா சாகுபடி பயிர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை என்பது நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அர்த்தமற்றதாக உள்ளது.  ஏனெனில், பெரும்பாலான மாநிலங்களில் அரசு கொள்முதல் நடைபெறுவதில்லை.  எனவே, குறைந்த பட்ச ஆதார விலையை விட மிகக் குறைவான விலைக்கே விவசாயிகளிடமிருந்து விளைவித்த பொருட்களை  வர்த்தகர்கள் வாங்கி வருகின்றனர்.  பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கூட, அரிசி மற்றும் கோதுமை மட்டுமே பிரதானமாக அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.  எனவே, இது நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளால் எழுப்பப்படும் முக்கியமான கோரிக்கையாகும். 

அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசுகள் செயல் படுத்திய நவீனதாராளவாத கொள்கைகள் காரண மாக கடந்த 30 ஆண்டுகளில் விவசாய உற்பத்திக் கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.  உரம் போன்ற விவசாய இடுபொருட்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை குறைத்தது உற்பத்திச் செலவு அதிகரிப்பிற்கு ஒரு காரணமாகும். விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி ஆகிய வற்றின் உற்பத்தியில் லாப வெறி பிடித்த கார்ப்பரேட்டு களை ஊக்குவித்தது இரண்டாவது காரணமாகும். 

டீசல், பெட்ரோல், மின்சாரம் மற்றும் பாசனத்திற் கான விலை பெருமளவில் அதிகரித்தது மூன்றாவது காரணமாகும்.  எனினும், விவசாய உற்பத்திச் செலவு அதிகரித்த அதே விகிதத்தில் விவசாயியின் விளைச்ச லுக்கான விலை ஒருபோதும் அதிகரிக்கவில்லை.  இதுவே விவசாய நெருக்கடிக்கும், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் கடன் சுமைக்கும் அடிப்படைக் காரணமாகும்.  இதன் காரண மாக விவசாயிகள் தற்கொலை ஒருபுறம் நிகழ்ந்தது என்றால், விளை நிலங்களை வேறு பயன்பாடு களுக்காக விற்பனை செய்வது மறுபுறம் நிகழ்ந்தது. 

முழுமையான பயிர் காப்பீடு இல்லாத நிலையில், கடும் வறட்சி, வெள்ளம், புயற்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை, பருவம் தவறிய மழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் விவசாய நெருக்கடி மேலும் மோசமானது.  விவசாயிகளை பலி கொடுத்து கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்துக்களை அதிகரிக்கச் செய்யும் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா ஒரு கேலிக்கூத்து என்பது நிரூபணமாகியுள்ளது.  பெருமளவிலான தொகை கார்ப்பரேட்டுகளுக்கு கடனாக வழங்கப்படுவதால், விவசாயத் துறையில் – குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு - கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் ஆணையின்படி செயல்படுத்தப்பட்ட விவசாய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளும், தாராள வர்த்தக ஒப்பந்தங்களும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளன.   

மேற்கூறப்பட்ட எல்லா காரணங்களாலும் தான், குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்வதோடு, விவசாய உற்பத்திக்கு ஆகும் செலவுத் தொகையில் ஒன்றரை மடங்கு என்ற விலையில் கொள்முதல் செய்யவும் உத்தரவாதம் செய்யும் ஓர் சட்டத்தை விவசாயிகளின் போராட்டம் கோரியது.  எந்தவிதமான மனஉறுத்த லும் இன்றி விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கை யிலான தனது அன்பிற்குரிய கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக் கான கோடி ரூபாய்களை கடன் தள்ளு படியாகவும், வரிச் சலுகையாகவும் அளித்து வரும் ஒன்றிய அரசு, விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியையும் செய்திட விவசாயிகளின் இயக்கம் கோரியது. 

 

;