articles

img

தூய்மையாகும் சென்னை நகரில் தூய்மைப் பணியாளர் நிலை - ஸ்ருதி.எம்.டி.

சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வா கத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணி, பெருமளவில் தனியார் நிறுவனங்க ளிடம் ஒப்படைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினைத் தலைமையிட மாகக் கொண்ட, உர்பேசர் நிறுவனம் மற்றும் இந்தி யாவை சேர்ந்த சுமீத் குழுமம் இணைந்து, உர்பேசர் சுமீத் என்ற பெயரில், 2020 அக்டோபர் முதல், சென் னையில் திடக்கழிவு மேலாண்மை பணியை மேற்  கொண்டுவருகிறது. இதற்கான ஒப்பந்தம் எட்டு ஆண்டு கள் அமலில் இருக்கும். பெருநகர மாநகராட்சி, 9 முதல் 15 வரையுள்ள மண்டலங்களில் இந்த நிறுவனம் பணியை மேற்கொள்கிறது.

இது தவிர, நான்கு மண்டலங்களில் பணி ஒப்பந்தம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினி யர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இத்தனை மண் டலங்களை ஒப்படைப்பது இதுவே முதல் முறை. உலகெங்கும் பல நகரங்களில் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகிறது சர்வதேச நிறுவனமான உர்பசேர். இதில், 50,000 தொழிலாளர்கள் பணி செய் கின்றனர். ஏறத்தாழ, 480 மில்லியன் யூரோ மதிப்புள் ளது சென்னை பெருநகர துப்புரவுப் பணி ஒப்பந்தம். இதுவே அந்த நிறுவனத்துக்கு உலக அளவில் கிடைத் துள்ள மிகப் பெரிய பணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சார்பில் துப்புரவுப் பணி, 92 வார்டுகளுக்கு உட்பட்ட, 16,621 தெருக்களில் நடக்கிறது. கிட்டத்தட்ட, 3.7 மில்லியனுக்கும் அதிக மக்கள் வசிக் கும், 207 சதுர கி.மீ., பரப்பை உள்ளடக்கியுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் துப்புரவுப் பணியை தனியார்மயமாக்கும் நடவடிக்கையால், ஒரே நேரத்தில் 2,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதில் இளம் வயது தொழிலாளர்களில் பலர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். ஆனால், 15 ஆண்டுக்கும் மேலாக பெருநகர மாநகராட்சியில் பணி புரிந்தவர்கள், வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியில் ஈடு பட்டுள்ளவர்கள், ‘வருமானம் குறைந்துவிட்டது; வேலையிலும் பாதுகாப்பின்மைதான் நிலவுகி றது....’ என அதிருப்தியுடன் கூறுகின்றனர். தனியார் நிறு வனத்திடம் பணி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதால் நிரந்தர வேலைவாய்ப்புக்கான நீண்டகாலப் போராட்டம் சுக்குநூறாகிவிட்டதாக குமுறுகின்றனர். சென்னை பெருநகர மாநகராட்சியில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், ஒவ்வொரு பகு திக்கும் ஒரு மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வை யாளர்களை பணியமர்த்தி உள்ளது. சாலையைப் பெருக்கும் பணியாளர்கள், பேட்டரி வாகனத்தில் வீடு வீடாக கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள், சேகரித்த குப்பையை எடுத்துச் செல்லும் இலகுரக மோட்டார் வாகனத் தொழிலாளர் என பணிப் பிரிவை, மூன்றாக வகுத்துள்ளது.

பெருநகர மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர் சம்பளமாக நாள் ஒன்றுக்கு 391 ரூபாயாக நிர்ணயிக் கப்பட்டிருந்தது. அதன்படி, 30 நாட்களுக்கு 11,730 ரூபாய் சம்பளம் பெற்றுவந்தனர். தனியார் நிறுவனத்தில், மாதந்தோறும் 9,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக் கிறது. ஆனால், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ ஈட்டுத் தொகை பிடிக்கப்படுகிறது. அவை சரியாக கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என தெரியவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் வாங்கும் சம்பளம், அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்கின்றனர். இது ஒப்பீட்டளவில் சம்பளம் குறைந்துள்ளது என்ற மன நிலையை உருவாக்கியுள்ளது.

தினமும் துப்புரவுப் பணி காலை 6:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை, பிற்பகல் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை, இரவு 10:00 முதல் காலை 6:00 மணி வரை என மூன்று ஷிப்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை யால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வெளியில் சாப்பிடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, 50 ரூபாய் வரை செலவிட வேண்டும். இது பெரும் சுமை என்கின்ற னர் தொழிலாளர்கள். இரவுப் பணிக்கு கூடுதல் ஊதியம் எதுவும் இல்லை. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதி அருகே பணி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் நீண்ட துாரம் பணியிடத்துக்கு வந்து செல்ல நேரமும் பணமும் விரயமாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பணிக்கு அரை மணி நேரம் முன்னதாக அலுவலகத்தில் அட்டெண்டன்ஸ் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே பணியிடத்திற்குச் செல்ல முடியும். தாமதம் ஏற்பட்டால், அதிகாரிகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டியிருக்கும். எட்டு மணி நேரம் வேலை என்றாலும், பயணம் உட்பட 10 மணி நேரத்தை தினமும் செலவிட வேண்டியி ருப்பதாகத் தெரிவிக்கின்றனர். தாமதமாகச் சென்றால் ஊதியம் பாதிக்கப்படும். இதுகுறித்து, செங்கொடி தூய்மைப் பணியாளர் சங்க செயலாளர் பி.சீனிவாசலு கூறியதாவது:

தனியார் நிறுவன துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் நான்கு நாட்கள் விடுமுறை இருந்தாலும், ஆள் பற்றாக்குறையை காரணம் காட்டுவதால், அந்த நாட்க ளிலும் பணிபுரிய வேண்டியுள்ளது. விடுப்பு தேவைப் படும் போது ஈட்டிய விடுப்புகளை ஈடுகட்டாமல் ஊதி யத்தில் பிடித்தம் செய்கின்றனர். வாங்கும் சம்பளத்தை விட அதிக நாட்கள் வேலை செய்வதால் இந்த நிலை. உர்பேசர் சுமீத் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள குப்பை சேகரிப்பு வாகனம், பணிகளை எளிதாக்கியது. அதே நேரத்தில் பணியை வேகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தொழிலா ளர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது; பலரும் வேலை இழக்க நேரிட்டது. திடக்கழிவை வீட்டிலேயே பிரித்து வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது, உர்பேசர் சுமீத் நிறு வனத்தின் பணி செயல்முறை திட்டம். ஆனால், குடி யிருப்புவாசிகளுக்கு போதிய பயிற்சி இன்மையால், இந்த வேலை குப்பை சேகரிக்கும் பணியாளர் மீதே விழு கிறது. கழிவுகளை வெறும் கைகளால் பிரிக்கும் அவல நிலையும் உள்ளது. பணி ஒப்பந்தத்தில் இது பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

தினமும் 250 கிலோ மக்கும் குப்பையை ஒரு பணி யாளர் சேகரிக்க வேண்டும். காய்கறிக் கடைகள், பணி எல்லைக்குள் இருந்தால் இந்த இலக்கை எளிதாக அடைய முடியும். இல்லையெனில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். இலக்கை எட்டா விட்டால் ஊதியத்தில் வெட்டு விழும். பணி இடத்தை புகைப்படம் எடுத்து செயலியில் பதி வேற்ற வேண்டியதும் குப்பை சேகரிக்கும் தொழிலா ளர் பொறுப்பாக உள்ளது. இதற்கு இணைய வசதியு டன் அலைபேசி சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அந்தச் செலவையும் தொழிலாளர்களே ஏற்க வேண்டி யுள்ளது. பெருங்குடி மண்டலத்தில், கடந்த ஆண்டு அக்டோ பரில் ஒரு பெண் துப்புரவுத் தொழிலாளி, மேற்பார்வை யாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட் டார். புகார் அளிக்க முயன்றபோது, மிரட்டப்பட்டார். வேலையை இழக்க நேரிடும் என பயந்து கணவருடன் தற்கொலைக்கு முயன்றார்.  

இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மிகக் குறைவான புகாரே பதிவாகின்றன. இந்த பணி யில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக பெண் தொழிலாளர் களே உள்ளனர். பாலியல் வன்முறைக்கு எதிரான குழு எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பாலியல் புகார்களை பெற குழுக்கள் இருந்தாலும், அவற்றில் தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் உள்ளதா என எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. வேலை இடங்களில் கழிப்பறை வசதிகள் இல்லை. வேலை இழப்புக்கு பயந்து தொழிற்சங்க உதவியை பெறத்  தயங்குகின்றனர். சென்னை பெருநகர மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றியோர், நிரந்தர வேலை கோரி வந்தனர். அது சிறிது சிறிதாக நிறை வேற்றப்பட்டது. ஆனால் தனியார்மய நடவடிக்கை அந்தப் போராட்டத்தை முற்றிலும் சிதைத்துள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 16 ஆண்டுகள் பணிபுரிந்து நிரந்தர வேலைக்காக காத்தி ருந்த பெண் தொழிலாளி, உர்பசேர் சுமீத் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு சரியான இழப்பீடு கிடைக்க வில்லை.

பெருநகர மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மையில் தலையிட்டு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதையும், தொழிலாளர்களுக்கு முறையான சலுகையையும் உறுதிப்படுத்த வேண்டும். தனியாரி டம் பணியை ஒப்படைத்துவிட்டோம். இனி நாங்கள் பொ றுப்பேற்க முடியாது என அரசு கைகழுவிவிடக்கூடாது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உட்பட 15,700 ரூபாய் சம்பள மாக கிடைக்கிறது, அதுவே போதுமானதாக இல்லை. இவ்வாறு சீனிவாசலு தெரிவித்தார்.