articles

img

வெண்மணி பூமி அழைக்கிறது வாரீர்! - பெ.சண்முகம்

சூரியனைக் கைகளால் மறைக்க முடியுமா?

மனித உரிமைச் சட்டம், வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டரீதியான பாதுகாப்பு எதுவும் இல்லாத காலத்தில் மக்கள் சக்தியை திரட்டி, போராட்டத்தின் மூலம், பண்ணையடிமைகளை விடு தலை செய்திட்ட அந்த சாதனை செங்கொடியால் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதை ஒப் பிட்டுப் பார்த்தால் தான் அதன் வீரியம் புரியும். இதைச் சொன் னால், செய்ததை சொல்லிக் காட்டு கிறார்கள் என்கிறார்கள். நீங்களும் சொல்லமாட்டீர்கள். நாங்களும் சொல்லக்கூடாது என்றால், அந்த மகத்தான வரலாற்றை மூடி மறை த்து விட வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம்! தலித் தாக இருந்தால் தான் அவர்களின் வலிகளை உணர முடியும் என்ற வாதத்தை பலரும் முன்வைக்கின் றனர். அந்த வலியை முதலில் உணர்ந்தவரும் அதற்கான மருந் தைக் கண்டுபிடித்து வலியை போக்கியவரும் தலித் அல்லாத சமுதாயத்திலே பிறந்த தோழர். பி.எஸ்.ஆர் என்பதை எவரால் மறுக்க முடியும்! பண்ணையடி மையாக பிறந்த பி.எஸ்.தனுஷ் கோடி அந்தக் கொடுமைகளை அனுபவித்திருந்தார்; என்ன செய்வதென்று திசை தெரியாமல் அவர் தவித்த போது வழிகாட்டும் திசைகாட்டியாக விளங்கியவர் தோழர்.பி.சீனிவாசராவ். பிறகு பி.எஸ்.தனுஷ்கோடி மாபெரும் தலைவராக, இடஒதுக்கீடு இல் லாத காலத்திலேயே ஒன்றிய பெருந் தலைவராக, சட்டமன்ற உறுப்பி னராக மலர்ந்தது தனிக்காவியம். 

எனவே, இன்றைக்கு பொது வெளியிலும் சரி, திரைப்படங்களி லும் சரி - செங்கொடி இயக்கத் தின் வரலாற்றை மறைக்க முயலு வது சூரியனை கையால் மறைக்க முயற்சிக்கும் குழந்தைத்தனமான செயலாகவே இருக்கிறது. பொரு ளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தையும், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை யும் இணைத்து வெற்றி கண்டது தான் கீழத் தஞ்சையில் கம்யூனி ஸ்ட் கட்சியின் சாதனையாகும். வர்க்க அடிப்படையில் ஒன்று திரண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட முடியும் என்பதை நடைமுறை சாத்தியமாக்கி கண் முன் காட்டினாலும் பார்க்காமல், கண்ணை மூடிக் கொண்டு சாதி யாக திரண்டால் தான்; சாதிய அடையாளத்தின் மூலம் தான் ஒடுக்குமுறையை எதிர்க்க முடி யும் என்று சத்தியம் செய்பவர்க ளை கண்டு பரிதாபம் தான் பட முடியும்.

இன்றைக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான, தீண்டா மை கொடுமைக்கெதிரான போராட் டத்தை கம்யூனிஸ்ட்கள் எடுப்ப தற்கும், சாதிய சக்திகள் எடுப்ப தற்குமுள்ள வித்தியாசத்தை நிதா னமாக ஆராய்ந்து பார்த்தால் வேறு பாட்டைக் காண முடியும். அதற்கு காரணம், எந்த சாதியில் பிறந்தி ருந்தாலும் “கம்யூனிஸ்ட்” என்ற  முறையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் தான் தீண்டாமை யை கடைப்பிடிக்கிற, ஒடுக்குமுறை யை நடைமுறைப்படுத்துகிற ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள் பின்வாங்குகிற நிலைமை ஏற்படு கிறது. பிறந்த சாதியின் ஆதிக் கத்திற்கு எதிராக களம் கண்ட நாய கர்கள் எத்தனையோ தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உண்டு. தஞ்சை தியாகி என்.வெங்கடா சலம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரி மைக்காக உறுதியாக நிற்கிறார் என்பதனாலேயே தனது சொந்த சாதிக்காரர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். வெண்மணியி லாவது எரிந்த எலும்புதுண்டுக ளும், சாம்பலும் மிஞ்சியது. தோழர். வெங்கடாசலத்தின் சுண்டுவிரல் கூட எரிக்கக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில், சாதிய ஒடுக்கமுறையும், தீண்டா மைக் கொடுமையும் மிக மிக குறைவாக உள்ளது கீழத்தஞ்சை மாவட்டத்தில்தான் என்பதை, நியாயமாக ஆராய்பவர்கள் கண் டறிய முடியும். அதற்கு காரணம் செங்கொடி இயக்கம் நடத்திய வீரம் செறிந்த சமரசமற்ற போராட் டமே. அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30வது மாநில மாநாடு செப்டம்பர் 17,18,19 ஆகிய மூன்று நாட்கள் நாகப்பட்டினம் நகரில் நடை பெறவுள்ளது. 1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவாரூர் மாவட்டம் தென்பரை கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துவங்கப்பட்டது. எண்ப தாவது ஆண்டு இப்போது துவங்கியிருக்கிறது. இந்த நெடிய வரலாற்றில் முதன்முறையாக நாகப்பட்டி னத்தில் மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  கீழத்தஞ்சை மாவட்டம் என்பது இன்றைய திரு வாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங் களை உள்ளடக்கிய பகுதி. தென்பரை கிராமம் உத்திராபதி மடத்துக்கு சொந்தமாக இருந்தது. மடத்தில் குத்தகை விவசாயிகளாக இருந்தவர்களைத் தான் சங்கம் திரட்டியது. புலியை அதன் குகைக்குள்ளே யே சென்று சந்திப்பதைப் போல, மிகமிக அதிக குத் தகை வசூலித்து விவசாயிகளை சுரண்டிக்கொண்டி ருந்த உத்திராபதி மடத்துக்கு எதிராக அதற்கு சொந்த மான கிராமத்திலேயே சங்கம் துவங்கப்பட்டது. அதன் கிளைச் செயலாளர் தோழர்.வீராச்சாமி. 

10 லட்சம் உறுப்பினர்கள்

அன்று போடப்பட்ட விதைதான் இன்று ஆலமர மாக செழித்து வளர்ந்து 10 லட்சத்துக்கு மேற்பட்ட விவ சாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அமைப்பாக வளர்ந்தி ருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆனால், இந்த வளர்ச்சியை எட்டுவதற்குச்  செய்த தியாகம் ஈடு இணையற்றது. வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிட முடியாதது. தலைவர்களின் தலைக்கு விலை, சங்கத்தி ற்கு தடை, ஒன்றுகூட விடாமல் தடுக்க எத்தனையோ 144 தடை உத்தரவுகள், காவல்துறையை ஏவி கொடூரமான அடக்குமுறை, சிறை, நிலப்பிரபுக்களின் குண்டர் படை யால் எத்தனையோ தாக்குதல்கள், உயிர்ப்பலிகள், அதன் உச்சகட்டமாக வெண்மணியில் ஆண்டைக ளால் வைக்கப்பட்ட தீயில் வெந்து மடிந்த கண்மணி கள் என எப்போது நினைத்தாலும் பெருமிதமும், நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் மேலும் வீரியமுடன் நம்மை ஈடு படுத்திக் கொள்வதற்கான ஊக்கமருந்தாகவும் அவ் வரலாறு இருந்து வருகிறது. 

குத்தகை விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்களையும், பண்ணைய டிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்களையும், நிலப்பிரபுக்களுக்கெதிராக வர்க்க அடிப்படையில் அணி  திரட்டி நிறுத்தி வெற்றி கண்டது தான் செங்கொடி இயக்கத்தின் மகத்தான சாதனை. விலங்கினும் கீழாக நடத்தப்பட்ட பண்ணை யடிமைகளை விடுதலை செய்து தனது உழைப்பை தான் விரும்பியவருக்கு விற்கும் “விவசாயத் தொழி லாளி” என்ற ரசாயன மாற்றத்தை கீழத்தஞ்சை மாவட் டத்தில் ஏற்படுத்தியது அந்த பேரெழுச்சி. அன்றைக்கு நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகத்தான் குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலனுக்கான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தியதில் முதன்மையான பங்கு செங்கொடி இயக்கத்திற்கே உண்டு. அதன் போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர் தோழர். பி.சீனிவாசராவ் அவர்கள். 

கிராமப்புற மாறுதல்கள்

இப்போது கிராமப்புறங்களில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் பசுமைப்புரட்சி காலம், இயந்திரமயம், உலகமயம், தாராளமயம் போன்றவை இம்மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. இயந்திரமயத்தின் விளைவாக உற்பத்தி செலவு அதி கரித்துள்ளது. இந்த நிலத்தையே நம்பியிருந்த விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தில் வேலை கிடைக்கா மல் கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்யும் தொழிலாளர்களாக மாறிவிட்டார்கள். விவசாயத்தில் கிடைக்கும் வேலையை மட்டும் நம்பி பிழைக்க முடி யாது என்பது தான் எதார்த்தமான நிலை. வேளாண்  விளை பொருட்களுக்கு அரசு விலை தீர்மானித்தா லும், அதை அரசு கொள்முதல் செய்யாத காரணத் தால் அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. அதனால் வியாபாரிகள் கேட்கும் விலைக்குத்தான் விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் இருக்கிறார் கள். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் தீர்மானிப்பதுடன் அது உத்தரவாதமாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் மத்திய சட்டம் இயற்ற வேண்டு மென்ற கோரிக்கை முன்னுக்கு வந்திருக்கிறது. உற்பத்தி செய்த பொருளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்வதன் மூலம் தான் விவசாயிகளை வாழ வைக்க முடியும். வரலாற்றில் முத்திரை பதிக்கத் தக்க, உலகின் கவனத்தை ஈர்த்த விவசாயிகளின் தில்லி போராட்டத்தை தொய்வின்றி நடத்திச் சென்ற தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்திற்கும் முக்கிய பங்குண்டு. அந்த ஒற்றுமையை தொடர்ந்து வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்படுவோம். 

93 சதவீதம் சிறு, குறு விவசாயிகள்

தமிழ்நாட்டில் 79.38 லட்சம் விவசாயிகள் 59.71 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம் செய்து வரு கின்றனர். இது இந்திய அரசின் 10வது வேளாண்மை கணக்கெடுப்பின்படியான கணக்கு. மொத்த விவ சாயிகளில் 93 சதவீதம் பேர் சிறு- குறு விவசாயிகள். நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகள் 7 சதவீதம். 38 சதவீத நிலம், 7 சதவீதமாக உள்ள நடுத்தர மற்றும் பெரும் பணக்கார விவசாயிகளிடம் உள்ளது. விவசா யப் பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. விவசாயம் லாபகரமாக இல்லாததால் விவசாயிகளே வேறு பயன்பாடுகளுக்கு நிலத்தை விற்பனை செய் கின்றனர். தனியார் கம்பெனிகள், கல்வி நிலை யங்கள், மருத்துவமனைகள், வீட்டுமனை போன்ற வற்றிற்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாக நிலம் வாங்கப்படுகிறது. மற்றொருபுறம், அரசு பல்வேறு திட்டங்களுக்காக விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக, கட்டாயப்படுத்தி நிலத்தைப் பறிக்கிறது. இதனால் வேளாண் உற்பத்தியில் தொடர் சரிவு ஏற்பட்டு வருகிறது. காலப்போக்கில் உணவு தானிய உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, தமிழ்நாடு அரசு, இருக்கிற நல்ல விளை நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதை தடுக்கும் விதமாக சட்டமியற்ற வேண்டும். சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் வகையில் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றி சாகுபடிக்கு கொண்டு வருவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்” என்பதற்கொப்ப உணவு, தானிய உற்பத்தியை பெருக்குவதில் தனி அக்கறை செலுத்துவது அவசியம். 

கால நிலை மாற்றம் 

காலநிலை மாற்றம் அதனால் ஏற்படும் விளைவு கள் குறித்து உலகம் கவலை கொண்டிருக்கிறது. விவ சாயத்தில் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும். அபரிமிதமான மழை, கடும் வறட்சி, புதிய வகையிலான நோய்கள், பூச்சி தாக்குதல்கள், மகசூல் குறைவு, இயற்கை பேரிடர்க ளால் விவசாயம் பாதிப்பு, இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள், இத்தகைய பிரச்சனைகளில் ஒன்றிய - மாநில ஆட்சியாளர்களின் அணுகுமுறை, வலியுறுத்த வேண்டிய கோரிக்கைகள், நமது ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் குறித்து அக்கறையுடன் இம்மாநாடு விவாதிக்கவுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தவும், பாதிப்புகளிலி ருந்து மீளவும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பால் மனித குலத்திற்கு ஏற்படும் தீங்குகள் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தங்க ளின் கொள்ளை லாபம், தங்கள் நாட்டு நலன் என்ப தைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படு வது, வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடானு கோடி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு கள் குறித்து கவலைப்படாமல் இருப்பது, உலக அமைப்புகள் பல்வேறு தீர்மானங்களை எடுத்தாலும் அதற்கு வளர்ந்த நாடுகள் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் உதாசீனப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்தும் இம்மாநாடு கவனம் செலுத்த இருக்கிறது.

இயற்கை வேளாண்மை, அதனை விரிவுபடுத்து வது, லாபகரமாக மாற்றுவது, அரசின் உதவிகள், இதன் மூலம் மட்டுமே இந்தியாவின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியுமா; ஒட்டுமொத்தமாக இயற்கை வேளாண்மைக்கு மாறுவது சாத்தியமா; இலங்கையின் சமீபத்திய கசப்பான அனுபவம் போன்ற இது தொடர் பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.  மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ் எனும் மதவெறி அமைப்பால் வழி நடத்தப்படுகிறது. ஆட்சியை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் தேவையான அனைத்தையும் சட்டப்பூர்வமாக அது செய்து வருகிறது. மக்களுக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களை ஏவி பொய் வழக்கு, சிறை, சித்ரவதை என தாக்குதல் தொடுக்கிறது. இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள  அடிப்படை உரிமைகளைப் பறித்து எதேச்சதிகரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மத உணர்வுகளை பயன்படுத்தி மக்களிடையே பேதங்களை உருவாக்கு வது, மோதலை ஏற்படுத்துவது, சாதிய ரீதியாக மக்களை பிளவுபடுத்தி மோதவிடுவது போன்ற மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்ற சகல நட வடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  உழைப்பாளி மக்களின் நலன்களை காவு கொடுக்கும் நவதாராளமயக் கொள்கையை வேகமாக அமல்படுத்துகிறது. இதனால் வேலையின்மை, வறுமை, நில உரிமை பறிப்பு, வரி என்ற பெயரில் மக்களை மேலும் மேலும் சித்ரவதைக்குள்ளாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த ஆட்சி தொடர்ந்தால் பட்டினிச்சாவுகள் அதிக ரிக்கும், தற்கொலைகள் அதிகரிக்கும், வேளாண் பொருளாதாரம் என்பது முடங்கி கிராமப்புற மக்களின் வாழ்க்கை சூறையாடப்படும். இனி ஒரு நிமிடம் கூட இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற அளவுக்கு மக்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கான போராட்டத்தில் இதர ஜனநாயக, மதச்சார்பற்ற சக்தி களுடன் வேளாண் சமூகம் இணைந்து நிற்கவும், அதற் கான வழிமுறைகள் குறித்தும் இம்மாநாடு திட்டமிட உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் கடந்துவிட்டது. 505 வாக்குறுதிகளை கொடுத்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்று அது ஆட்சியை கைப்பற்றியது. கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள். ஆனால், ஒரு சில வாக்குறுதி களே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்ற ஆதங் கம் உள்ளதை அரசுக்கு உணர்த்த வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

விவசாய வளர்ச்சி, விவசாயிகள் முன்னேற்றம் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து விவா தித்து தீர்வுகாண, திட்டமிட கூடுகிறது மாநில மாநாடு. பெருமைமிகு வரலாற்றையும், தியாகப் பாரம் பரியத்தையும் கொண்ட, தமிழக விவசாயிகளின் ரத்தத்தோடு கலத்திருக்கிற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை மேலும் வலுமிக்க அமைப்பாக மாற்று வோம். நாகப்பட்டினம் நகரம் ஏற்கனவே, நமது இயக்க வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது.  செங்கொடி காக்க தன்னுயிர் தந்த வெண்மணித்  தியாகிகள் அழைக்கிறார்கள், வாருங்கள் புதிய வரலாறு படைப்போம்!. 

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.


 


 

;