“டிரம்ப்பின் 20 அம்சத் திட்டம் ஏமாற்றுத் திட்டம் - விடுதலை இயக்கங்களை ஆதரிப்போம்!”
வரலாற்றுப் புகழ்வாய்ந்த இயக்கத்தை சிபிஎம் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்ற நிர்பந்திக்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் முகத்தை மோடி சிதைக்கிறார். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது. அதேநேரத்தில் அந்த நாட்டின் விடுதலையை மறுக்கக் கூடாது. பாலஸ்தீன விடுதலைக்காக யாசர் அராபத் ஆயுதம் ஏந்திப் போராடினார். ஒரே மண்ணில் இரண்டு தேசம் அமைந்துவிட்டது, எங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்றார் யாசர் அராபத். யூதர்கள் அரேபியர்களின் புனித மண்ணான பாலஸ்தீனத்தைப் பாதுகாக்க வேண்டும். விடுதலை இயக்கம் எங்கு நடந்தாலும் அதைக் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரிப்போம். டிரம்ப் முன்மொழிந்துள்ள 20 அம்சத் திட்டம் ஏமாற்றுத் திட்டம்.