articles

img

நூலா? வேலா? - வல்லம் தாஜூபால்

நூலா? வேலா? 

ருப்பரங் குன்றத்தில் ஏற்றும் சூடமே சிக்கந்தர் தர்ஹாவில் ஊதுபத்தி! சிக்கந்தர் தர்ஹாவில் சொல்லும் ஆமீன்தான் செந்தில் வேலனின் ஓம்ஆகும்  கந்த ருக்கும் சிக்கந்த ருக்கும் கனவிலும் பகையே இல்லை சீறாப் புராணமும் கந்த புராணமும் போரிடல் முறையே இல்லை  நல்லிணக் கத்தின் சின்னம் இம்மலை – இது நாசம் ஆவது பெரும்பிழை இன்னொரு அயோத்தியாய் இதனை மாற்றப் பின்னு கிறார்கள் சதிவலை  மாட்டு ஆட்டுக்கறி கூடா தென்பார்! வேட்டுவரும் கோழிக் கறிக்கும்! ’அவரவர் உணவு அவரவர் உரிமை’ - எனும் பண்பு எப்படி பிழைக்கும்?  இடது சாரிகள் விரும்புவார் இங்கே எல்லோர் கையிலும் நூல்கொடுக்க! நாக்பூர் சீடர் நாட்டில் அலைவதோ எல்லோர் கையிலும் வேல்கொடுக்க  தீர்ப்பதற் குள்ள சிக்கல்கள் ஆயிரம்! - அதன் திசையை மாற்றவே மதவெறி! தோப்பைத் தனிமரம் ஆக்கும் முயற்சி தோற்றிடச் செய்யும் அறநெறி!  உறவைக் கெடுத்துப் பிளவை வளர்க்க வெறியர் முயல்வதைத் தடுப்போம்! நரியார் எவர்க்கும் பலியா காமல் நமது கைகளை இணைப்போம்!