கடவுளின் பெயரால் நிலமும் ஏழைகளின் கண்ணீரும்
தமிழ்நாட்டில் சைவ, வைணவ, சமண சம யங்கள் அனைத்தும் இந்து சமய நிறுவ னங்கள் என அழைக்கப்படுகின்றன. இஸ்லா மிய சொத்துக்கள் வக்பு வாரியத்தின் கீழும், கிறிஸ்துவ சொத்துக்கள் மறை மாவட்டங்களின் கீழும் செயல்படுகின்றன. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவில்களுக்கு ஆரம்பத்தில் மக்கள் தங்கள் வேண்டுதல்களின் பேரில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை தானமாக வழங்கி வந்தனர். பல்லவர் காலத்தில் தானமாக வழங்கப் பட்ட ஆடு, மாடுகளை “சாவா மூவா பேராடுகள்” என குறிப்பிட்டனர். சில இறந்துவிட்டாலோ, வயதாகி விட்டாலோ அவற்றிற்கு ஈடாக உடனே புதிய ஆடு, மாடுகளை வாங்கி எண்ணிக்கை குறையாமல் எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்பதே “சாவாமூவா” என்பதாகும்.
சோழர்கள் காலத்தில்
சோழர்கள் ஆட்சிக்காலத்தில்தான் கோவில்க ளுக்கு நிலங்கள் குவியத் தொடங்கின. அப்போது மன்னர்களின் ஞானகுருக்களாக செயல்பட்ட பிராம ணர்கள் கிராமம் கிராமமாக நிலங்களை வைத்தி ருந்தனர். கோவில் நிர்வாகங்களும் பெரும்பகுதி இவர்களின் பொறுப்பில்தான் இருந்துள்ளது. சோழர் கள் காலத்தில் கோவில்களுக்கு தேவதானம், தர்ம தாயம், திருவிளையாட்டம், பன்னசந்தம், மடப்புதம், பிரம்மதேயம், சோத்திரியம், கைகெட்டி, ஜீவிதம் போன்ற பெயர்களால் நிலங்கள் ஒதுக்கப்பட்டு எந்த வரியும் விதிக்காமல் இனாமாக வழங்கப்பட்டன. இவற்றைத் தவிர நம் முன்னோர்கள் பல்வேறு வேண்டுதல்களின் பேரில் தங்கள் நிலங்களில் ஒரு பகுதியை கோவில்களுக்கு தானமாக வழங்கினர். மேலும் மன்னர்கள் காலத்தில் நிலவரி கட்டத் தவறிய விவசாயிகளிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக பறித்து கோவில்கள் பெயரில் எழுதி வைத்தனர். இதற்கான கல்வெட்டு சான்றுகள் கி.பி.1033, 1117, 1138 திருமணஞ்சேரி கோவில் கல்வெட்டுகளில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர் சாதியினர் ஆதிக்கம்
கோவில் சொத்துக்களை நிர்வகிப்பதில் உயர் சாதியினர் ஆதிக்கம் மன்னர்கள் காலம் தொட்டு நீடித்து வந்தது. இவர்கள் கோவில் சொத்துக்களை தங்கள் சொத்துக்களாகவே கருதி பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டனர். குடிமக்கள் புகார்க ளை எழுப்பிய நிலையில் 1817-ல் முதல்முறை யாக மதராஸ் நிலக்கொடைகள் சட்டம் உரு வாக்கப்பட்டது. 1849 வரை 21 மாவட்டங்களில் 8,292 கோவில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக் கள் நீக்கப்பட்டனர். மூடிக்கிடந்த கோவில்கள் வழி பாட்டிற்கு திறக்கப்பட்டன. 1858-ல் பிரிட்டிஷ் மகாராணி ஆட்சிக்கு வந்த பின் மதவிவகாரங்களில் தலையிடாது என்ற நிலை பாட்டை எடுத்தார். இதன் விளைவாக மீண்டும் கோ வில்களும் அதன் சொத்துகளும் ஏற்கனவே யார் வசம் இருந்ததோ அவர்களிடமே சென்றது. மீண்டும் கோவில்களின் சொத்துக்கள் சூறையாடப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 1920-ல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின், பனகல் அரசர் முதலமைச்சராக பொறுப்பேற்று கோவில் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். உயர்சாதியினரின் கடும் எதிர்ப் பையும் 800 திருத்தங்களையும் மீறி 1925-ல் இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. 1959-ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது இப் போது நடைமுறையில் உள்ள இந்து சமய அறநிலைய சட்டம் இயற்றப்பட்டு 1960-ல் அமலுக்கு வந்தது.
இன்றைய பிரம்மாண்ட சொத்துகளும் பயனாளிகளின் அவலமும்
இத்துறையின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கோவி லின் மொத்த வருவாயில் 14 சதவீதம் அரசுக்கு வழங்கப்பட்டு அதன் மூலமாகத்தான் இத்துறையி னர் அனைத்துமட்ட ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மீதிப்பணம் வங்கிக ளில் டெபாசிட் செய்யப்படுகிறது. 2024-25ம் ஆண்டு நிதி அறிக்கையின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 46,257 நிறுவனங்கள் உள்ளன: J திருக்கோவில்கள்: 43,728 J சமணக் கோவில்கள்: 22 J மடங்கள்: 45 J திருமடத்துடன் கூடிய கோவில்கள்: 69 J அறக்கட்டளைகள்: 2,393 இவற்றின் பெயரில் உள்ள நிலங்கள்: J கோவில் பெயரில்: நன்செய் 1.83 லட்சம் ஏக்கர், புன் செய் 2.18 லட்சம் ஏக்கர், மானாவாரி 21,000 ஏக்கர் J மடங்கள் பெயரில்: நன்செய் 21,000 ஏக்கர், புன்செய் 35,000 ஏக்கர் J மொத்தம்: 4,78,000 ஏக்கர் J கட்டடங்கள்: 23,056 J மனைகள்: 76,472 பல தலைமுறைகளாக காடுகளாக இருந்த இடங்களை சமன்படுத்தி மக்கள் வாழக்கூடிய, கோ வில்கள் கட்டக்கூடிய இடங்களாக மாற்றிய சாதாரண உழைப்பாளி மக்கள் பல தலைமுறைகளாக இந்த நிலங்களை சாகுபடி செய்தும், குடியிருந்தும் வரு கிறார்கள். ஏற்கனவே கோவில் நிர்வாகங்கள் தீர்மா னித்த குத்தகை, பகுதி, வாடகை தொகையை தொ டர்ந்து செலுத்தி வந்துள்ளனர்.
பயனாளிகளின் பிரச்சனைகள்
வாடகை உயர்வு : 1998, 1999, 2007 அரசாணைகளின் படி வாடகை அரசின் வழிகாட்டு மதிப்பு அல்லது சந்தை மதிப்பின் அடிப்படையில் சதுரடி கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக் கும் 15% உயர்த்தப்படுகிறது. பழைய வாடகையை முன்தேதியிட்டு வசூலிக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் குத்தகை உரிமை பறிப்பு : பல தலைமுறைகளாக குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலங்களை அளவீடு செய்து பொது ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய 75:25 குத்தகை முறைக்கு பதிலாக சில நிர்வாகங்கள் பழைய 60:40 முறையைப் பின்பற்று கின்றன. பட்டா வழங்கல் முயற்சி : 2019-ல் அரசாணை 318-ன்படி 5 ஆண்டுகளாக குடியிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 600 ஏக்கரில் 19,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் முடிவு எடுக் கப்பட்டது. இதற்கு எதிராக இந்துத்துவா அமைப்பு கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளன. வக்பு நிலங்களின் பிரச்சனை : இஸ்லாமிய வக்பு வாரியமும் இதே போன்ற பிரச்சனைகளை உருவாக் குகிறது. நீண்டகாலமாக பயன்படுத்தும் ஏழை மக்களின் தரைவாடகை, குத்தகையை பலமடங்கு உயர்த்தி வசதிபடைத்தவர்களுக்கு வழங்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தீர்வுகளும் கோரிக்கைகளும்
வரலாற்று ஆதரவு : அறிஞர் அண்ணா 1960-ல் கூறியது: “எதற்காக கோவில்களுக்கும் மடங்களுக் கும் சொத்து இருக்க வேண்டும்? விபூதி மாடத்தில் விபூதி இருக்காதா? வில்வமரம் வளராதா?” முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் 1980-ல் கூறியது: “கோவில் நிலங்களை சாகுபடியாளர்க ளுக்கே சொந்தமாக்கிட வேண்டும். நட்ட ஈடுகளை வங்கியில் நிரந்தர வைப்பாக வைத்து வட்டியில் கோவில் காரியங்களை நடத்தலாம்.” சட்டப்பிரிவு 34-இன் பயன்பாடு : அறநிலைய சட்டப்பிரிவு 34-ன்படி கோவில் இடங்களை தேவைக் கேற்ப விற்பனை செய்யலாம். 1980 வரை 6,000 ஏக்கர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. “உள்ளம் பெரும் கோவில்” என்ற திருமூலர் தத்துவப்படி ஏழைகளுக்கு நிலம் வழங்கினால் எந்த கடவுளும் கோபிக்க மாட்டார்.
முக்கியக் கோரிக்கைகள்
J வாடகை நிர்ணயம்: குடியிருப்புக்கு: 0.10-க்கு பதில் 0.05 Jசிறு கடைகளுக்கு: 0.30-க்கு பதில் 0.15 Jநடுத்தர கடைகளுக்கு: 0.30-க்கு பதில் 0.20 எனச் செய்யலாம். விவசாயிகளுக்கான உரிமைகள் : - குத்தகை உரிமை பதிவுச் சட்டம் 1969 செயல்படுத்தல், - 75:25 விகித குத்தகை வசூல், - அரசின் கொள்முதல் விலை யின் அடிப்படையில் மட்டும் கணக்கீடு, - மேல் கட்டுமானங்களை விற்கும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
நிரந்தரத் தீர்வு
பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்க ளுக்கு நியாயமான விலையில் நிலங்களை விற்பனை செய்ய தமிழக அரசு உறுதியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.