articles

img

இசைபட வாழ்ந்த இலட்சிய மனிதர்!

இசைபட வாழ்ந்த இலட்சிய மனிதர்!

ஒரு பாடகனின் மரணத்துக்காக அசாம் அழுது புரண்டது. மூன்று நாள்களாக அந்த மாநிலத்தில் வாழ்க்கை நிலைகுத்திக் கிடந்தது. கடைகள் திறக்கப்படவில்லை. மக்கள் வீதிகளில் அவரது பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். 

ஜுபீன் கார்க், பிறப்பால் பார்ப்பனர். ஆனால்,  தனக்கு சாதியில்லை, மதமில்லை, கடவுள் இல்லை என்று அறிவித்துக்கொண்டவர். பூணூலை அகற்றிக்கொண்டவர். எளிய மக்க ளோடு தன்னை இணைத்துக் கொண்ட கலை ஞர். அதிகாரத்துக்கு எதிராகப் பேசத் தயங்கா தவர்.  நடிகர், இசையமைப்பாளர், கொடையாளர் என்று பல தளங்களிலும் செயல்பட்டவர். பல்வேறு விதமான கருவிகளை இசைக்கத் தெரிந்தவர். கோவிட் பெருந்தொற்றின்போது குவஹாத்தியில் உள்ள தனது இரண்டடுக்கு வீட்டை, மருத்துவ மையமாக்கத் திறந்து விட்டவர்.  40 மொழிகளில் 38 ஆயிரம் பாடல்கள் பாடி யவர். தமிழில் குத்து படத்தில் அசானே அசானே  என்ற பாடலும் ‘கண்கள் என் கண்களோ’ என்ற உற்சாகம் படத்தில் பாடலும் பாடியுள்ளார்.  பாலிவுட்டிலும் சிறிதுகாலம் செயல்பட்டா லும், மீண்டும் அசாமி மொழிக்கே திரும்பிவந்த வர். அப்போது அவர் கூறியது: பாலிவுட்டில் காட்டும் ஆட்டிடியூட் ரொம்ப அதிகம். அசாமில்  நான் அரசனைப் போல வாழ்வேன். என்பாடல் வேண்டுமென்றால், அசாமுக்கு வாருங்கள்.  உல்ஃபா தீவிரவாதிகள் செல்வாக்கு மிகுந்தி ருந்த காலத்தில் இந்தி, வங்க மொழிகளில் பாடுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இந்த உத்தரவுகளை அவர் துணிந்து  எதிர்த்தார்.  பண்பாட்டுப் பயணமாக சிங்கப்பூர் சென்றி ருந்தவர், கடலில் ஸ்கூபா முக்குளிப்பு செய்த போது சிக்கல் ஏற்பட்டு இறந்துவிட்டார். 52 வய தில் இந்த எதிர்பாராத மரணம் நேர்ந்திருக்கக் கூடாது. ஆனால், அவர் தன்வாழ்வை நன்றாக  வாழ்ந்திருக்கிறார்.  கிருஷ்ணர் கடவுள் அல்ல; ஒரு மனிதர் என்று  கூறினார். இத்தகைய சுதந்திர சிந்தனையாளர் களுக்கே உரியமுறையில் பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஒவ்வொன்றை யும் ஆராய்ந்து எடைபோடும் அளவுக்கு நமக்கு  விவரம் தெரியாது. ஆனால், ஒரு கலைஞனுக்காக ஒரு மாநிலமே  அழுகிறது எனில் இந்தக் குறள்தான் நினைவுக்கு  வருகிறது: “உள்ளத்தால் பொய்யாதொழுகின் உல கத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்”. அவரது மரணம் பற்றிய ஒரு செய்தியை,  ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இப்படி முடித்திருக்கி றது: “அவர் வெறும் சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல, அசாமின் ஆன்மாவும், குரலும் மனச்சான்றும் ஆவார்”. அசாமில் நடந்த சிஏஏ (குடியுரிமை திருத்தச்  சட்டம்) எதிர்ப்புப் போராட்டத்தில் முன்நின்ற வர். கஞ்சன்ஜங்கா எனும் அவரது திரைப்படத் தில் வேலை நியமனத்தில் நடக்கும் ஊழல் பிரச்ச னையைப் பற்றி பேசியிருந்தார். ஜூபின் கார்க் வெறும் பாடகல் அல்லர். இசை யமைப்பாளர். நடிகர், இயக்குநர், வசன கர்த்தா,  தயாரிப்பாளர் என முன்முகத் திறமையாளர். 12 இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர். 

அவர் ஒரு மனிதாபிமானி; மதச்சார்பற்றவர் - மகத்தான மனிதர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியின் புகழஞ்சலி அசாமின் கலாச்சார சின்னமாகவும், இந்தியா முழுவதும் அன்பைப் பெற்றவராகவும் இருந்த ஜூபீன் கார்க்கின் அகால மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மொழிகள் மற்றும் சமூகங்களைக் கடந்து, அவரது மாயாஜால இசை, 3 தசாப்தங்களுக்கும் மேலாக நமது கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தியது. ஜூபீன் ஒரு அசாதாரண பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் மட்டுமல்ல, சாதி, மதம் மற்றும் இனத்தின் தடைகளைத் தாண்டி உயர்ந்த ஒரு பெரிய இதயம் கொண்ட நபராகவும் இருந்தார்.