articles

img

இயற்கையைப் பாரீர் - பொன்னையன்

இயற்கையைப் பாரீர் - பொன்னையன்

கல்வி கற்றிடும்   கண்ணே வாராய் -இயற்கைக்   காட்டி வியந்திடும்   அழகினைப் பாராய்!  உள்ளம் கவர்ந்திடும்   கதிரவன் தோற்றம் -வானில் ஒளியினை வேறெது   பாரெனக் காட்டும்?  வானில் விரிந்திடும்   கருமுகில் கூட்டம் -அது மனத்தில் பதிந்திடும்   ஓவியம் காட்டும்!  புரண்டே அலைந்திடும்.   கடலின் காட்சி -கண்ணில் புகுந்தே நெஞ்சில்  நிறைந்திடும் மாட்சி  மிரண்டே நண்டுகள்   ஓடிடும் கூடி -கரு விழிகள் கண்டவை  வாழ்த்திடும் பாடி!