articles

img

AI பயிற்சி அளிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் - லிஃபி தாமஸ்

AI  பயிற்சி அளிக்கும் கார்ப்பரேட்  நிறுவனங்கள்

செயற்கை நுண்ணறிவு என்பது ஒவ்வொரு அறையிலும் இருக்கும் யானையைப் போன்றது. இன்றைக்கு அது தவிர்க்க முடியாத / தப்பிக்க முடியாத ஒன்றாக உருவாகி இருக்கிறது. அறை பெரிதாகவும், பங்குகள் பெரிதாகவும் இருந்தால், நம் பணிகளோடு செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் அதிகமாகவும் அவசரமாகவும் இருக்கும். செயற்கை நுண்ணறிவின் அழைப்பிற்கு ஏற்ற வகையில், கார்ப்பரேட் நிறுவனங்களும் பதில் அளிக்கின்றன.

இஒய் (EY) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஜென்ஏஐ (GenAI) குறித்து பயிற்றுவிக்கும் முயற்சி யாக, இந்தாண்டு ஜூலை மாதம் ஏஐ பயிற்சி வகுப்பு  ஒன்றை தொடங்கியது. தற்போது, அந்நிறுவனம் ஆரம்பக் கட்ட எதிர்பார்ப்புகளை கடந்து முன்னேறி யுள்ளது. தன் நிறுவனத்தின் 44 ஆயிரம் ஊழியர்கள்  ஏஐ திறன் பெற்றிருக்கிற நிலையில், இந்தியாவில்  உள்ள இஒய் நிறுவனம், அதன் ஏஐ பயிற்சி நிபுணத்து வத்தை தொலைத்தொடர்பு, உள்கட்டமைப்பு, வங்கி கள், ஐ.டி. மற்றும் ஐ.டி-யுடன் இணைந்த நிறுவ னங்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் (FMCG - Fast-Moving Consumer Goods)  நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு நன்கு திட்ட மிடப்பட்ட செயல்பாடுகள் மற்றும் துறைசார்ந்த பயன்பாடுகளுக்கான ஏஐ திறன்களை அமைப்ப தற்கு, உதவுவதாக அந்நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, அனுபவக் கற்றல் தொழில்நுட்ப நிறுவனமான நால்ஸ்கேப் (KNOLSKAPE) ஏஐ  பயிற்சி வகுப்பை தொடங்கியிருக்கிறது. இது, இந்தி யாவில் உள்ள பணியாளர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவை சரளமாக உருவாக்கு வதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பங்கு சார்ந்த, ஊக்கப்படுத்தும் வகையிலான கற்றல் தளமாகும். இஒய் நிறுவனம் வழங்கும் ஜென்ஏஐ (GenAI)  படிப்புகள், வணிகத் தேவைகளுக்கு ஏற்ப அடிப்ப டைக் கற்றலை நடைமுறை பயன்பாடுகளுடன் இணைக்கின்றன. இது செயல்பாட்டுக் குழுக்கள் முதல் இறுதி முடிவெடுக்கும் உயர்நிலை வரை அனைத்து நிலைகளிலும் உள்ள ஊழியர்களை ஆதரித்து, அவர்கள் தங்கள் அன்றாடப் பணி களில் ஏஐ-யைப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், பயன்படுத்தவும் உதவுகிறது. வணிகத்தில் ஏற்படும் தாக்கம், வருவாய் வளர்ச்சி, செலவுத் திறன், மேம்பட்ட வாடிக்கை யாளர் அனுபவம் அல்லது இடர் குறைப்பு போன்ற வற்றை அடையாளம் கண்டு செயல்படுத்தும் வகை யில், ஏஐ பயன்பாட்டு பயிற்சி தொகுதிகள் வடி வமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் கால அளவு, நிறுவனத் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு நாள் பயிற்சி பட்டறைகள் முதல் தரவு விஞ்ஞானிகள், தரவு பொறியாளர்கள் மற்றும் GenAI பொறியாளர்கள் போன்ற தொழில்நுட்பப் பணிகளில் இருப்பவர்களை இலக்காகக் கொண்ட நீண்ட பயிற்சி பட்டறைகள் வரை இருக்கும். நால்ஸ்கேப் நிறுவனத்தின் ஏஐ அகாடமி தனி நபர்கள் மேலாளர்கள், மூத்த அதிகாரிகளுக்கான படிப்புகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டமும்  அதிவேக உருவகப்படுத்துதல்கள் மற்றும் பங்கு சார்ந்த பயிற்சியைப் பயன்படுத்தி நேரடி கற்றல் மூலம் இயக்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்பும் நிறுவனங்கள், தங்கள் தேவைக்கு ஏற்ப மென்பொருள் தொகுப்புகள் அல்லது பயிற்சிமுறைகளை தேர்வு செய்யலாம். இவை அனைத்தும் நிகழ்நேர பகுப்பாய்வு (ஒரு  நிகழ்வின் அல்லது செயல்முறையின் போது உடனடி யாக நடப்பதைக் குறிக்கும்) மற்றும் வசதிகளுடன் செயல்படுகின்றன என்றும் நால்ஸ்கேப் நிறுவனம் கூறுகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம்,  சிம்பிள்லேர்ன் நிறுவனத்துடன் இணைந்து, ஏஐ சார்ந்த தயாரிப்பு மேம்பாடு மற்றும் புதுமைகளில் ஒரு தொழில்முறை சான்றிதழ் திட்டத்தை நடத்தி  வருகிறது. இது, தங்கள் நிறுவனங்களில் ஏஐ  சார்ந்த புதுமை மற்றும் மாற்றத்தை வழிநடத்த விரும்பும் நடுத்தர முதல் உயர்நிலை நிபுணர்களை இலக்காகக் கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு ஒரு மில்லி யன் ஏஐ நிபுணர்கள் தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், தற்சமயம் 4,16,000 நிபு ணர்கள் மட்டுமே உள்ளனர் என்கிறது மின்னணு வியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம். பல நிறுவனங்கள ஏஐ-யை பரிசோதித்து வரு கின்றன. ஆனால் அதை அளவிட உள் தயார்நிலை  இல்லை என்று நால்ஸ்கேப்இன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜீவ் ஜெயராமன் கூறுகிறார். உண்மையான சவால் என்பது வெறும் கருவி களை அணுகுவது மட்டுமல்ல, தலைமைத்துவ சீரமைப்பு, முடிவெடுப்பதில் நம்பிக்கை மற்றும் விளைவுகளை இயக்கும் திறனை உருவாக்குவது பற்றியது. ஏஐ அகாடமி உள்ளடக்கத்துடன் மட்டுமல்லாமல், ஆழமான, அணுகுமுறை சார்ந்த கற்றலுடன் நிறுவனங்களில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழில்: நித்யா நன்றி: தி இந்து ஆங்கிலம் (24.9.2025)