மலையாளத் திரைப்படம் ஹ்ருதய பூர்வம்
நடிகர்கள்: மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீதா சங்கீத் பிரதாப்|திரைக்கதை: அகில் சத்யன் இசை: ஜஸ்டின் பிரபாகரன் இயக்கம்: சத்யன் அந்திக்காடு மலையாள திரைப்படைப்பாளிகளை பார்த்தால் சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது. திரை யாக்கம் செய்யும் அவர்களது கதைகள் யாவும் வித்தியாசமாகவும் புதிது, புதிதாகவும் இருக்கின்றது. ஆகவே ரசிக்க முடிகின்றது, மனம் ஒன்றி படம் பார்க்க முடிகிறது.அந்த வகையில் மிகச் சமீபத்தில் வந்திருக்கும் படம் மோகன்லால் நடித்த ஹிருதய பூர்வம் திரைப்படம். மோகன்லால் சமையல் கலைஞராக தொழில் நடத்தி வருகிறார். அவருக்கு இதயப் பிரச்சனை. மாற்று இருதயம் பொருத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். புனேயில் இருந்து மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இருதயம் பொருத்தப்படுகிறது. உயிர் பிழைத்து நலமாகி தனது தொழிலை பரிவாரங்களு டன் கலகலப்பாக நடத்திச் செல்கிறார். திடீரென அவரைப் பார்க்க இதய தானம் செய்தவரின் மகள் வருகிறார். தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்றும் நீங்கள் வந்து ஆசிர்வதித்தால் எனது தந்தை ஆசிர்வதித்தது போலிருக்கும் என்று அழைக்கின்றார். தொழிலை காரணம் காட்டி முதலில் மறுக்கின்றார். உடன் வேலை பார்க்கும் இளைஞன், போக மறுப்பது நன்றி கெட்டதனம் என்று சுட்டிக்காட்டிய பிறகு, திரு மணத்திற்கு அந்த இளைஞனுடன் செல்கிறார். அந்தப் பெண்ணும் மகிழ்ந்து புத்தாடைகள் எடுத்து தந்து மகிழ்விக்கிறார். திருமண நாளன்று மாப்பிள்ளைக்கும், பெண்ணிற் கும் தகராறு ஏற்பட்டு திருமணம் நின்று விடுகிறது. அப்பொழுது ஏற்பட்ட அடிதடியில் மோகன்லாலின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, இரண்டு வாரம் தங்கிச் செல்ல வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் தங்குகிறார். திருமணமாகாத மோகன்லால், இதயம் தானம் தந்திருக்கும் மகள் வயதிருக்கும் கதாநாயகியின் அன்பால் ஈர்க்கப்படுகிறார். மனதில் சலனம் ஏற்படு கிறது. அவளோ தந்தையின் இதயம் இருப்பதால் தந்தையாகவே அன்பு செலுத்துகிறாள். ஆனால் மோகன்லாலோ காதல் மனநிலைக்கு ஆட்படுகிறார். இதயம் கெடுத்தவரின் மனைவியும் மோகன்லால் மீது ஈர்ப்புக் கொள்கிறார். மிகவும் சிக்கலான திரைக்கதை கொஞ்சம் தவறினாலும் மிகத் தவ றாகப் போய்விடும். இயக்குநர் அதை மிக லாவக மாகக் கையாளுகிறார். மாற்று இதயம் பொருத்தியவர்களுக்கும், அந்தக் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், ஏற்படக் கூடிய பந்தத்தை நகைச்சுவையான காட்சிகள் மூல மாக நகர்த்திச் செல்கிறார். ராணுவ வீரரான தனது தந்தையை நேசிக்கும் மகள், ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது தகப்பன் இடத்தை மோகன்லாலுக்கு தந்து ஆசிர்வதிக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நூலிழையில் மனம் தடு மாறிய மோகன்லால் மீண்டெழுந்து, தந்தையின் ஸ்தானத்தை காப்பாற்றிக் கொள்கிறார். உடன் உதவிக்கு இருக்கும் இளைஞனின் குறும்புத்தன மான பேச்சுகள் மிகவும் ஈர்க்கின்றன. நீண்ட நாள்களுக்கு பிறகு சங்கீதாவை திரையில் காண முடிகிறது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி யிருக்கிறார். மோகன்லால் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். அவரின் உடல் மொழி, அங்கத உணர்ச்சி, பேச்சு மொழி யாவும் மிக வசீகரமானவராக மாற்றி யிருக்கிறது. திரைக்கதையின் உத்தி படத்தை மேலும் விறு விறுப்பாக நகர்த்திச் செல்ல உதவுகிறது. மிக அழகிய லான ஒளிப்பதிவு, காதைக் கிழிக்காத பின்னணி இசை, கோர்வையான படத்தொகுப்பு யாவற்றை யும் மிகச் சரியாக கையாண்டு திரை வடிவம் கொடுத்தி ருக்கிறார் இயக்குநர் சத்தியன் அந்திக்காடு. மோகன்லால் திரைப்படப் பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் எனலாம். தரமான படம் யாவரும் பார்க்கலாம். - செ.தமிழ்ராஜ்
