articles

img

‘நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’

‘நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதார கோரிக்கை மாநாடு ஜூலை 1 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் பேசியதாவது:  குமரி மாவட்ட ஆட்சியர் மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வருகிறார். அவரை பாராட்டுகிறோம். அதே போல் ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை முன் வைக்கிறோம். மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் சேர்ந்து மக்களுக்கு தேவையான நன்மை களை செய்ய முடியும்.  

காவல்துறைக்கு கண்டனம்  

மாவட்ட காவல்துறை அடாவடிப் போக்கைக் கடைப்பிடிக்கிறது. காவல் துறைக்கு மக்களைப் பாதுகாக்க மட்டுமே உரிமை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு “நானே எல்லாம்” என்கிற முடிவுக்கு வர சட்டத்தில் இடமில்லை. மக்களுக்காக தமி ழக முதல்வர் முதல்கொண்டு அனை வரும் போராட்டம் நடத்திக்கொண்டுதான் உள்ளோம்.  கடந்த மாதம் கன்னியாகுமரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதை விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே காவல்துறைக்கு அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. அதற்கு அனுமதி இல்லை என்று கூறுவது என்ன நியாயம்?  

பாஜக  மீது விமர்சனம்  

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷாவைக் கண்டால், அதிமுக கூட்டணி என்றால், முருகன் மாநாடு என்றால், பாஜக என்றாலே கம்யூனிஸ்ட்டுகள் பயப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். எங்கு என்ன நடக்குமோ, மக்கள் பாதிக்கப்படுவார்களே என்கிற பயம்தான். தனிப்பட்ட பயம் என்பது எங்களுக்கு இல்லை.

 ஊஞ்சல் பாலம்  

குமரி மாவட்டத்தில் சிபிஎம் எம்பியாக ஏ.வி.பெல்லார்மின் இருந்த காலமான 2004-2009 இல் தாமிரபரணி ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் தற் போதும் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் பாஜக ஆட்சியில் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பாலம் கட்டியுள்ளனர். அந்த பாலத்திற்கு பெயர் “ஊஞ்சல் பாலம்”. அங்கும் இங்கும் ஆடும்.  பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட அந்த பாலத்தின் இருபுறமும் கனரக வாகனங்கள் செல்லத் தடை என எழுதி வைக்கப்பட்டுள்ளது.  

கடன் தள்ளுபடி விவகாரம்  

ஜூலை மாதம் என்றால் குமரி மாவட்ட த்தில் போராட்டம் ஒன்றை வழக்கமாக பொன். ராதாகிருஷ்ணன் நடத்துவார். அது என்னவென்றால், “மேரிக்கு ஸ்காலர்ஷிப், மாரிக்கு இல்லையா” என்று போராட்டம் நடத்துவார். தற்போது 11 ஆண்டுகளாக அந்த போராட்டத்தை மறந்துவிட்டார்.  பெரும் முதலாளிகளுக்கு பாஜக அரசு ரூ.56 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியும், ஆண்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடியும் செய்துள்ளது. ஆனால் சாதாரண விவசாயிக்கு இல்லை. அவர்கள் நகையை அடகு வைத்தால் ரூ.2 லட்சம் வரைதான் வைக்கவேண்டும். நகையை வழங்க ஆறுமாதம் என்றெல்லாம் சட்டம்.  

புறக்கணிப்போம்

 இந்திய நாட்டில் அமைதி நிலவ வேண் டும் என்றால் ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்