articles

img

அரசு ஊழியர் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா அரசு? - மு.அன்பரசு

நாற்பது வருடங்களைக் கண்டிருக்கிற  தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்  கடந்த இருபது ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட் டத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.  புதிய உரிமைகளைப் போராடிப் பெறுவதற்காக உரு வாக்கப்பட்ட இயக்கம் இன்றைய சூழலில், இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவே வலுவாகப் போராட வேண்டியிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஊதிய முரண்பாட்டை தீர்க்க வேண்டுமென்ற கோரிக்கை ஒரு  தலைமுறையாக நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. 

6 லட்சம் காலிப் பணியிடங்கள்

காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற முறையீடுகள் முற்றாக நிராகரிக்கப்பட்டு இன்று ஆறு லட்சம் காலிப் பணியிடங்கள் அரசுத்துறைகளில் காலி யாக விடப்பட்டுள்ள அவலம் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.  அந்த ஆறுலட்சம் ஊழியர்களின் பணிகளை இப்போது பணியிலுள்ள அரசு ஊழியர்கள் முது கெலும்பு உடைய சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆறு லட்சம் தமிழக இளைஞர்களின் எதிர்காலமும் வாழ்வா தாரமும் இதன்மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் அரசாங்கத்தின் முன் வைத்து போராடுகிறோம். மாறாக, அவுட்சோர்சிங் அரசாணைகளை வெளியிட்டு அரசுத்துறைகளை தனி யார்மயமாக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளவும்தான் ஆட்சி நிர்வாகம் முனைகிறது. அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நியாய மான கோரிக்கைகளில் ஒன்றைக்கூட இந்த அரசாங்கம் நிறைவேற்றாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அரசு ஊதியம் பெறும் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.    வாக்குறுதி அளித்தபடி, புதிய ஓய்வூதியத் திட் டத்தை திரும்பப் பெறாதது, சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்காதது, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயிக்காதது, சாலைப்பணி யாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி வரன்முறை செய்து  41 மாத ஊதிய இழப்பை வழங்கிட வைக்கப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படாமல் இருப்பது, சரண்விடுப்பு ஒப்புவிப்பை நிறுத்தி வைத்துள்ளது, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை இதுவரை வழங்காமல் உள்ளது போன்றவை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தி யில் ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஊழியர்கள் மத்தியில் தொய்வையும், சோர்வை யும், சலிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் போராட்டங்க ளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் கருத்தை மாற்ற வேண்டிய மனநிலைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வந்திருக்கிறார்கள்.  போராட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமும், மாற்றுவழி திட் டங்களை செயல்படுத்தும் போராட்டங்களை முன்னெ டுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது  அரசு ஊழியர் சமுதாயத்திற்கு எழுந்துள்ளது. எவ்வ ளவு நாள் போராடினாலும் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில் இருந்து அரசாங்கங்கள் இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தியே ஆக வேண்டிய கட்டா யத்தை ஏற்படுத்தவல்ல நிர்ப்பந்தத்தை உருவாக்கி டும் போராட்டங்களை அரசு ஊழியர்கள் நடத்தும் கட்டாயம் எழுந்துள்ளது.  

நாளை பேரவை

ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு போராட்டமும் இருப்பை நிலைநிறுத்துவது மட்டுமல்ல; அது ஒவ் வொரு அரசு ஊழியரிடமும் உரிமைக்கான நெருப்பை பற்ற வைப்பது. எவ்வளவு நெருக்கடியான காலகட்டத்தி லும் அரசிற்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள் என்பதை உணர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி, வரவிருக்கிற போராட்டங்கள் அரசு ஊழியர்கள் விரும்பி ஏற்ற போராட்டங்கள் அல்ல, அவை அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள போராட்டங்கள். அந்தப்  போராட்டங்களைத் திட்டமிட அக்டோபர் 7, 2023ல் செங்கல்பட்டில் நடைபெறும் மாநிலப் பிரதிநிதித் துவப் பேரவையில் கூடுகிறார்கள். 

கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்