டிசம்பர் 30, 2024 - இந்திய மாணவர் சங்கம் (SFI) கல்வி உரிமைக்கான போராட்ட பாதையில் தனது 54வது ஆண்டை நிறைவு செய்து 55வது ஆண்டில் அடி யெடுத்து வைக்கிறது. “சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்” என்ற லட்சிய முழக்கங்களுடன், சிவப்பு நட்சத்திரம் பொறித்த வெண்கொடியேந்தி இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப் பாக, இந்திய மாணவர் சங்கம் திகழ்கிறது.
விடுதலைப் போராட்டத்தில் மாணவர் இயக்கம்
1920களில் இந்தியாவில் இடது சிந்தனைகள் மேலோங்கிய காலம். பகத்சிங் உள்ளிட்ட மாவீரர்கள் தங்கள் புரட்சிகர சிந்தனைகளை பிரசுரங்கள் வழியாக இளைஞர்களிடம் பரப்பி னர். அக்காலத்தில்தான் ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கம் உருவானது. “பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவர், வேலை தேடி அலையும் இளைஞர் - இவர்கள் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா” - இந்த வரலாற்று முழக்கத்தை பகத்சிங் முன்வைத்தார். 1931 மார்ச் 23 அன்று பகத்சிங் தூக்கிலிடப் பட்டாலும், அவரது சிந்தனைகள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஆழமாக வேரூன்றின. அவர் விதைத்த விதைகள் இடதுசாரி சிந்தனை யாளர்களையும், தேசிய விடுதலை போராளிக ளையும் ஒன்றிணைத்தது. இதன் விளைவாக 1936-ல் அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம் (AISF) உருவானது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து பாகுபாடுகளையும் கடந்து மாணவர்களை, மாணவர் பெருமன்றம் ஒன்றிணைத்தது. 1947 வரை நடந்த மாபெரும் மாணவர் கிளர்ச்சிகள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்றன.
இந்திய மாணவர் சங்கம் உதயம்
விடுதலைக்குப் பின் பதவியேற்பு அரசு முதலாளித்துவ பாதையை தேர்வு செய்தது. நிலப் பிரபுத்துவ, பண்ணையடிமை முறைகளோடு சம ரசம் செய்துகொண்டது. இதனால் கோடிக்கணக் கான மக்கள் வறுமையிலும், பசியிலும் வாடி னர்.பிரிட்டிஷ் காலத்து ‘அடிமை கல்வி முறை’ நீடித்தது. 1960களில் மாணவர் பெருமன்றத்திற்குள் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின. ஆளும் காங்கிரஸ் ஆதரவு கருத்துக்கள் வலுப்பெற்றன. இதனால் பல மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் பிளவுபட்டன. 1970 டிசம்பர் 27-30 வரை கேரளத்தின் திரு வனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் ‘இந்திய மாணவர் சங்கம் (SFI)’ தோற்றம் பெற்றது. அனைத்து மாணவர்களுக்கும் இலவச, அறி வியல்பூர்வ கட்டாயக் கல்வியை உறுதிசெய்வதே அதன் முதன்மை நோக்கம்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக போராட்டங்கள்
‘எல்லோருக்கும் கல்வி; எல்லோர்க்கும் வேலை’ என்ற முழக்கத்துடன் தனது எழுச்சிப் பய ணத்தைத் துவக்கிய இந்திய மாணவர் சங்கத்தின் வலுவான தளங்களில் ஒன்றாக - திலலி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) எப்போ தும் மாணவர் உரிமைப் போராட்டங்களின் முன்னணியில் நின்றது. அவசரநிலை காலத்தில், அப்போதைய மாணவர் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, இந்திரா காந்தியின் பல் கலைக்கழக வேந்தர் பதவியை எதிர்த்து போராடி னார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ல் ஜேஎன்யு வளாகத்தில், ஆர்எஸ் எஸ் மதவெறி மாணவர் அமைப்பான ஏபிவிபி நடத்திய வன்முறையில் மண்டை பிளக்கப்பட்ட போதும், மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் “ஒரு அடி கூட பின்வாங்க மாட்டோம்” (Not An Inch Back) என்று உறுதியாக நின்றார்.
வீரத்தியாகிகளின் வரிசை
மதுரையில் மாணவர் தலைவர்களான தோழர்கள் சோமு-செம்பு சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு வங் கத்தில் சுதிப்தோ குப்தா, கேரளாவில் அபிமன்யு, தீரஜ், ராஜஸ்தானில் ராஜேஷ் என பல மாண வர்கள், இந்திய மாணவர் சங்கத்தின் லட்சியத் திற்காக - தம் இன்னுயிரைஈந்துள்ளனர். கொல்லப்பட்டனர். ரோஹித் வெமுலா,அனிதா போன் றோரின் தியாகங்கள் இன்றும் நெஞ்சை உலுக்குகின்றன.
தற்கால சவால்கள்
ஒன்றிய பாஜக அரசின் கல்வி விரோத நட வடிக்கைகள்: புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் கல்வி கார்ப்பரேட் மயம்; நீட், கியூட் தேர்வுகளின் திணிப்பு; விஸ்வகர்மா யோஜனா மூலம் குலக் கல்வி; கல்வி நிலையங்களில் காவிமயமாக்கல்; பென்சில் முதல் கல்லூரி கட்டணம் வரை ஜிஎஸ்டி என பாஜக அரசு கல்வியைச் சீரழிக்கிறது. மறுபுறம், தமிழ்நாட்டில் - மகாவிஷ்ணு, கந்தசஷ்டி பிரணாயாமம் போன்ற விரும்பத் தகாத நடவடிக்கைகள்; பாலியல் வன்முறைக ளுக்கு எதிரான சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலை; மாநில கல்விக் கொள்கை உருவாக்கம் தாமதம் என கல்வித்துறை அலட்சியம் நீள்கிறது. இவை உள்ளிட்ட கோரிக்கைகளுடன், தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம் தற்போது பத்து லட்சம் மாணவர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை முன்னெடுக்கிறது. கல்வி வளாக ஜனநாயகத்தை மீட்டெடுப்பதே அதன் முக்கிய நோக்கம். “அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் எங்களால் துவங்கப்படவும் இல்லை, எங்க ளோடு முடியப்போவதும் இல்லை!” என்ற பகத் சிங்கின் வார்த்தைகளையும், “சோசலிசம் அல்லது மரணம்” என்ற காஸ்ட்ரோவின் முழக் கத்தையும் ஏந்தி, சமத்துவ சமுதாயத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து பய ணிக்கிறது.
கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்க திண்டுக்கல் மாவட்டத் தலைவர்