articles

img

பொதுத்துறையை அழிக்கும் பாஜக டேன் டீயை எப்படி காப்பாற்றும்? - அ.அன்வர் உசேன்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக ஊழியர்களின் பிரச்சனை குறித்து பேசிய பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை முழு பூசணிக்காயை அல்ல ஒரு குன்றையே சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். டேன் டீ எனப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை மாநில அரசாங்கம் நடத்த முடியவில்லை என எழுத்து மூலம் கொடுத் தால் அதனை ஒன்றிய அரசாங்கம் ஏற்று நடத்த பா.ஜ.க. உறுதியளிக்கும் என கூறியுள்ளார். பா.ஜ.க. தலைவர்கள் இரட்டை நாக்கில் பேசவும் பொய்களை அள்ளி வீசவும் அசாத்திய திறமை படைத்தவர்கள் என்பது நாடறிந்த ரகசியம். தமிழ்நாடு மக்கள் இவரது பொய்யை நம்பிவிடுவர் என மனப்பால் குடிக்கிறார் போலும். இந்தியாவின் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறைகளை ஏலம் விடும் பா.ஜ.க. ஒன்றிய அரசாங்கம் மாநிலம் கைவிடும் பொதுத்துறையை தான் ஏற்றுக்கொள்ளும் என  அண்ணாமலை கூறுவது கேலிக்கூத்தான ஒன்று!

டேன் டீ நிறுவனம் பிரச்சனை

தப்பட்ட துறை 03.10.2022 அன்று ஒரு அரசா ணையை வெளியிட்டது. அதன்படி டேன் டீ நிறுவனம் பல்வேறு காரணங்களால் நட்டத்தில் இயங்குவதா கவும் அதனை லாபகரமாக மாற்ற சுமார் 2152 ஹெக்டேர் தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு மாற்றுவதா கவும் இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5.98 கோடி நட்டம்  குறையும் எனவும் கூறப்பட்டது. இந்த தோட்டங்கள் வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளில் உள்ளன. இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது இலங்கையிலி ருந்து இங்கு குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்க ளுக்காகவே ஆகும். சாஸ்திரி-சிரிமாவோ மற்றும் இந்திரா காந்தி- சிரிமாவோ ஆகிய தலைவர்களி டையே உருவான ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக இவர்கள் உட்பட பலர் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக டேன் டீ உருவாக்கப்பட்டது. இங்கு பணியில் அமர்த்தப்பட்ட வர்களுக்கு அங்கேயே வீடுகளும் வழங்கப்பட்டன. எனவே தமிழக அரசாங்கத்தின் ஆணையின் விளை வாக இந்த மக்கள் பாதிக்கப்படுவார்களா எனவும் வீடு களையும் இழப்பார்களா எனவும் அச்சம் எழுந்தது.  எந்த ஒரு தொழிலாளியும் வேலை இழக்க மாட்டார் கள் எனவும் மாற்றுப் பணி தரப்படும் எனவும் தமிழக அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. அவ்வாறு மாற்றுப் பணி வேறொரு இடத்தில் செல்ல விரும்பாத தொழிலா ளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் வழங்கப்படும் எனவும் எந்த ஒரு தொழிலாளியும் தான் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும் உறுதி தரப்பட்டது. மேலும் வனத்துறையிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட தேயிலை தோட்டம் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பயிரிடப்படாவிட்டால் அதனை வனத்துறைக்கே திருப்பித் தர வேண்டும் என விதி இருப்பதால் கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி யில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை பயிரி டப்படாததால் இந்த முடிவு எனவும் தமிழக அர சாங்கம் கூறியுள்ளது.

திசை திருப்பும் அண்ணாமலை

டேன் டீ உருவாக்கப்பட்ட பொழுது 12,000 ஊழி யர்கள் இருந்தனர். இப்பொழுது 3800பேர் மட்டுமே உள்ளனர். தென்னிந்திய தேயிலை தோட்ட அமைப்பு மதிப்பீடுகள்படி ஒரு ஹெக்டேர்  தோட்டத்துக்கு 1.7 ஊழியர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் டேன் டீ நிறுவனத்திடம் 0.7 ஊழியர்கள்தான் உள்ளனர் எனவும் மாநில அரசாங்கம் கூறுகிறது. ஏன் தேவை யான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி அமர்த்த இயலவில்லை என்பதை தமிழக அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. வனத்துறைக்கு மடைமாற்றா மலேயே இந்த தேயிலை தோட்டங்களை லாபகரமாக நிர்வகிக்க முடியுமா என்பதை தமிழக அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்கள்/ தொழிற் சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அனைவரிடமும் கலந்தாலோசித்தால் ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் உருவாகும். வனத்துறைக்கு தோட்டங்களை மாற்றுவ தால் தேயிலை உற்பத்தியும் வணிகமும் நின்று போகும். இது உதகை மற்றும் வால்பாறை பகுதி களுக்கு எவ்வித நன்மையும் தராது.

பொருத்தமான உற்பத்தி அணுகுமுறைகளை உருவாக்கினால் தனி யாரைவிட டேன் டீ விலை குறைவாக தர இயலும். டேன் டீ சுவைக்கென ஒரு பகுதி மக்கள் உள்ளனர் என்ப தையும் தமிழக அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். டேன் டீ கடுமையாக நட்டத்தில் இயங்கி வந்தாலும் ஓய்வு பெற்ற 1063 பேரின் ஓய்வூதியப் பணப்பலன்க ளுக்காக ரூ. 29.38 கோடி தமிழக அரசாங்கம் அளித்தது. மேலும் 677 தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் வீடுகளை காலி செய்யவில்லை. இலங்கையில் உள்ள சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பல தரப்பிலிருந்து வேண்டுகோள் வந்த அடிப்படை யில் 677 தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்குவதுடன் பயனாளிகளின் பங்களிப்பை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் 17.11.2022 அறிக்கையில் தெளிவுபடுத்தினார். இத்தனைக்கும் பின்னர்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூடலூரில் ஆர்ப் பாட்டம் நடத்தி அந்த நிறுவனத்தை பா.ஜ.க. ஒன்றிய அரசாங்கத்திடம் தருமாறு சவால் விடுகிறார்.  இந்த நிறுவனத்தை லாபகரமாக நடத்த தேவை யான ஆலோசனைகளை அவர் முன்வைக்கவில்லை. ஆனால் தமிழக அரசாங்கத்தால் நடத்த முடிய வில்லை எனில் ஒன்றிய அரசாங்கம் இந்த நிறுவ னத்தை ஏற்கும் என கூறுவது தமிழக மக்களை முட்டாள்களாக்க எத்தனிக்கும் செயல் ஆகும். கொள்கை அடிப்படையிலும் நடைமுறையிலும் வெறி கொண்டு ஒன்றிய பொதுத்துறைகளை தனியாரிடம் அதுவும் அம்பானி-அதானிகளிடம் தாரை வார்ப்பது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தனியார்மயம்-  மோடி அரசின் சாதனை

தனியார்மயம் 1991ஆம் ஆண்டிலிருந்து நடந்தா லும் 2014ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் பதவி ஏற்றபின்னர்தான் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை கள் தனியாருக்கு வெறிகொண்டு தாரைவார்க்கப் பட்டன. இதனை கீழ்க்கண்ட விவரங்கள் தெளி வாக்கும்:

ஆண்டு         பதவியிலிருந்த அரசாங்கம்       பொதுத்துறை 
                                                                               விற்பனை ரூ கோடி
1991- 1999         காங்கிரஸ் அரசாங்கம்             98,000
1999-2004         வாஜ்பாய் அரசாங்கம்                93,300
2004-2009         ஐக்கியமுற்போக்கு கூட்டணி
                        (இடதுசாரிகள் ஆதரவுடன்)         32,000
2009-2014         ஐக்கியமுற்போக்கு கூட்டணி
         (இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல்)        2,40,000
2014-2019         முதல் மோடி அரசாங்கம்           4,70,000
2019-2024 

இது வரை         இரண்டாவது மோடி

                                                      அரசாங்கம்         1,48,000

-(இன்றைய விலை மதிப்பு)

தனியார்மயம் செயல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் பதவியிலிருந்த 8 ஆண்டுகளில் மட்டும் சுமார் 60 விழுக்காடு மதிப்புள்ள பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. மேலும் பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் மோடி அரசாங்கத்தின் தனியார்மய இலக்குகள்:

 1.     400 ரயில்வே நிலையங்கள்
 2.     90 பயணி ரயில்கள்
 3.     1400 கி.மீ. இருப்புப்பாதை
 4.     741 கி.மீ கொங்கன் ரயில்வே பாதை
 5.     15 ரயில்வே மைதானங்கள்
 6.     4 மலைப்பாதை ரயில்கள்
 7.     265 ரயில்வே சரக்கு முனையங்கள்
 8.     25 விமான நிலையங்கள்
 9.     160 நிலக்கரி சுரங்கங்கள்
 10.     9 துறைமுகங்கள்
 11.     உணவுக் கழகத்தின் கிடங்குகள்
 12.     விமான நிலையங்கள்
 13.     கல்வி நிலையங்கள் மூடல்
 14.     அரசு மருத்துவமனைகள் தனியாருக்கு

என சுமார் ரூ. 6,00,000 கோடி ரூபாய்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தியாவின் லாபம் ஈட்டும் பொதுத்துறைகளான எல்ஐசி/ ஓஎன்ஜிசி/ஆக்ஸீஸ் வங்கி/தேசிய கனிமவள நிறுவனம்/ இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்/ஐ.ஆர்.சி.டி.சி/தேசிய அனல் மின்நிலைய கழகம்/ கெயில் போன்ற லாபமீட்டும் நிறுவனங்களின் பங்குகள் கடந்த இரு வருடங்களில் விற்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி தரும் அதே விலையை தர முன்வந்தும் கேரளா அரசாங்கத்துக்கு தர மறுத்தது மோடி அரசாங்கம். அதே போல் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தில் கோவிட் தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசாங்கம் அனுமதி கேட்டும் மறுத்தது ஒன்றிய அரசாங்கம்.  கேரளாவில் தேசிய காகித ஆலையை மோடி அரசாங்கம் தனியாருக்கு விற்க முனைந்த பொழுது அந்த டெண்டரில் போட்டியிட்டு பினராயி அரசாங்கம் அதனை ஏலத்தில் எடுத்து புனரமைத்துள்ளது. மோடி அரசாங்கம் ஒன்றிய நிறுவனங்களை தாரை வார்க்கும் பொழுது, மாநில அரசாங்கங்கள் அவற்றை வாங்குகின்றனவே தவிர இதுவரை மாநில அரசாங்கம் விற்க முன்வரும் எந்த ஒரு நிறுவனத்தையும் மோடி அரசாங்கம் வாங்கியதாக உதாரணமே இல்லை.  உண்மை இவ்வாறிருக்க அண்ணாமலை டேன் டீ நிறுவனத்தை ஒன்றிய அரசாங்கம் ஏற்கும் எனக் கூறுவது பொய் அல்ல; மிகப்பெரிய மோசடி.


 

;