கோடை விடுமுறை விட்டாச்சு-மனம்
குதிக்கும் இன்பம் தொட்டாச்சு!
ஆடை முழுதும் நனஞ்சாச்சு-உடல்
ஆறாய் வியர்க்கத் திரிஞ்சாச்சு!
மாமா வீடு வந்தாச்சு-அங்கே
மாமா பிள்ளைகள் ஒன்றாச்சு!
தேமா புளிமா தின்றாச்சு-உடல்
தேடிய ஆட்டம் நன்றாச்சு!
உள்ளே வெளியே ஆடியாச்சு-எங்கள்
ஒற்றுமை காட்டக் கூடியாச்சு!
பள்ளம் மேடு மறைந்தாச்சு-நாங்கள்
பதுங்கும் இடங்கள் அவையாச்சு!
கோடை மழையில் நனைந்தாச்சு-வெயில்
கொடிய வெப்பம் தணிச்சாச்சு!
ஓடை தொரவில் குளிச்சாச்சு -மனம்
ஓங்கிட ஊக்கம் பெற்றாச்சு!
பசியும் உறக்கமும் பறந்தாச்சு-இன்பப்
பற்றிடும் விளையாட்டில் மறந்தாச்சு!
வசிக்கும் தோட்டம் வந்தாச்சு -மரம்
வழங்கும் கனிகள் சுவைச்சாச்சு!
பள்ளி திறப்பது நெருங்கியாச்சு -எங்கள்
பதட்டம் கொஞ்சம் அதிகமாச்சு!
கல்வியின் அவசியம் புரிஞ்சாச்சு -அதால்
கவலைப் போக்க முடிந்தாச்சி!