கடந்த ஜூன் 8 அன்று “சமரச தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக் கான செயல் திட்டம்” (Framework for Com promise settlements and Technical Write-offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத வர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாரபட்சமின்றி தள்ளுபடிகள் மற்றும் சமரசத் தீர்வு களை வங்கிகள் மேற்கொள்ளலாம் என வழிகாட்டப் பட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, “வங்கி கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் அல்லது மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வங்கியுடன் சமரசத் தீர்வு ஏற்படுத்திக் கொண்ட தேதியில் இருந்து 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புதிதாக கடன் பெற லாம்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தா தவர்களிடமிருந்து கடனை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, “தொழில்நுட்ப ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டது” என்று அறிவித்து, முற்றாகத் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், கடன் வாங்கியவ ரின் பெயரில் கடன்கணக்கு இருக்கும்; ஆனால் வசூல் செய்ய வேண்டிய தொகை என்ற பட்டியலில் இருக்காது. கடந்த சில வருடங்களாக பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் ‘செயல்படாத சொத்துக்கள்’ என்று பெயரிட்டு அழைக்கப்படும் ‘வராக் கடன்கள்’ குறைந்து வருவது போல வெளிக்காட்டுவதற்கான முக்கிய அறிவிப்பாகவும், வராக்கடன்களை இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து மறையச் செய்யும் மந்திரக் கோல் போலவும் ரிசர்வ் வங்கி அறிக்கை உள்ளது. இந்த சர்ச்சை அறிக்கை குறித்து ரிசர்வ் வங்கி க்கு எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில், வேண்டு மென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுடன் சமரசத் தீர்வுகளில் ஈடுபடுவதற்கான அனுமதி புதியதல்ல என்று கூறியுள்ளது.
ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல!
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின், நிலுவைக் கடன் தொகைகளை வசூலிப்பதற்கான திட்டத்தில் ரிசர்வ் வங்கியோ அல்லது அரசாங்கமோ இருப்பதாகத் தெரியவில்லை. 2018 இல் பிரதமர் நரேந்திர மோடி,”தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறிய நபர்களுக்கு மீண்டும் கடன் வழங்கவில்லை” என்று பெருமையாகக் கூறினார். மேலும், “காங்கி ரஸ் ஆட்சியாளர்கள் விருப்பத்தின் பேரில் கொடுக்கப் பட்ட கடன்களில் ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும்” என காங்கிரஸைப் பற்றி கிண்டல் செய்யும் நோக்கில் பேசினார். ஏழாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி, “வேண்டு மென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல், பெரு நிறுவனக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், வெளி நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நபர்களுக்கு சட்டத்தின் கடுமையை எடுத்துக்காட்டுவேன்” என்றும், “நரேந்திர மோடியால்தான் இதை செய்ய முடியும் என்று பொதுமக்கள் உறுதியாக நம்புகிறார்கள், ஆகவே நான் நிச்சயமாக அதை செய்வேன்” என்றும் கூறினார். ஆனால் உண்மையில் மோடி அரசு என்ன செய்தது?
எல்லாம் வாய்ஜாலம்!
கடந்த 10 ஆண்டுகளில் பொது மற்றும் தனியார் வங்கிகளின் தள்ளுபடிகள் ஒரு அபரிதமான அதிகரிப்பை வெளிப்படுத்துகின்றன. பொதுத்துறை வங்கிகளின் கடன் தள்ளுபடிகள் 2013 இல் ரூ.7,187 கோடியிலிருந்து 2022ல் ரூ.1,19,713 கோடியாக அதிக ரித்தது. பொதுத்துறை வங்கிகளில், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,97,196 கோடி அளவில் தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.92,511 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.75,429 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.53,961 கோடியும் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. தனியார் துறை வங்கிகளுக்கு மொத்த கடன் தள்ளுபடிகள் 2013 இல் ரூ. 4,115 கோடியிலிருந்து மார்ச் 2022இல் ரூ.53,087 கோடியாக அதிகரித்தது. ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி ஆகியவை அதிக கடன்களை தள்ளுபடி செய்த முதல் மூன்று தனியார் துறை வங்கிகளாகும். கடந்த 10 ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கி ரூ.71,198 கோடியும், ஆக்சிஸ் வங்கி ரூ.60,764 கோடியும், எச்டிஎப்சி ரூ.43,633 கோடியும் கடனை தள்ளுபடி செய்துள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குறித்த ஒன்றிய அரசாங்கத்தின் முழுப் பட்டியலில் நடப் பாண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் கடனைத் திருப்பிச் செலுத்தாத தரப்பினரின் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 26,086 என்ற நிலையில், அவற்றின் மொத்த நிலுவைத் தொகை ரூ.6,01,834 கோடியாக உள்ளது. பொ துத்துறை வங்கிகள் ரூ.4,10,758 கோடி கடனுக்காக 16,420 வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. 1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட கடன்களை செலுத்தாத தரப்பினர் மீது தனியார் வங்கிகள் 8,194 வழக்குகளை தாக்கல் செய்தன.
மோடி ஆட்சியில்தான் மோசடிகள் டாப்
வங்கி மோசடிகள் தொடர்பான போக்கு வெளிப் படையாகவே நடந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 2005-14 காலகட்டத்தில் ரூ.34,993 கோடியாக இருந்த வங்கி மோசடிகள் 2015-23 காலகட்டத்தில் ரூ.5.89 லட்சம் கோடியாக- கிட்டத்தட்ட 17 மடங்காக உயர்ந் துள்ளது.
திண்டாடும் சமூகத் துறைகள்
ஒடிஷாவின் பாலசோர் ரயில் விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ரயில் பாது காப்பிற்கான செலவு பற்றிய கேள்வியே அதிகம் எழுந்தது. 2022இல் நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 23-ஆவது அறிக்கையில் பழைய ரயில் தடங்களை மாற்றுவதற்கு செலவிடப்பட்ட நிதி போதுமானதாக இல்லை எனவும், தண்ட வாளங்களைப் புதுப்பிக்கத் தேவையான பணத்தில் ஒட்டுமொத்த பற்றாக்குறை ரூ.1,03,395 கோடியாக உள்ளது எனவும் கூறப்பட்டது. ஆனால் அறிக்கை வெளியான அதே ஆண்டில் பொதுத்துறை வங்கி கள் மட்டும் பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த கடன் தொகை ரூ.1,33,945 கோடியாகும். 2021-22 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளின் மொத்த தள்ளு படிகள் ரூ.1,72,800 கோடியாக உள்ளது. 100 நாள் வேலை திட்டம் (ரூ.60,000 கோடி), மருத்துவம் (ரூ.89,155 கோடி), கல்வி (ரூ.1,12,898கோடி) ஆகிய மூன்று முக்கிய சமூக நலத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட பெரு முதலாளிகளுக்கான வங்கிகளின் கடன் தள்ளு படி தொகை மிக அதிகமாகும். இதனால் 2023-24 நிதியாண்டில் சமூக நலத் துறைகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் நிலை யில், சமீபத்திய மாற்றங்களுடன் தள்ளுபடிகளை அதிகரிக்கவே ரிசர்வ் வங்கி மூலமாக மோடி அரசு பல்வேறு சிறப்பு வழிகளை உருவாக்கி வருகிறது.
கட்டுரையாளர்கள் : நிதித்துறை ஆய்வாளர்கள் நன்றி: ஸ்க்ரால்.இன் இணைய இதழ் தமிழில் சுருக்கம்: எம்.சதீஷ்குமார்