articles

img

தமிழ்நாட்டின் மீது வன்மம் கக்கும் பிரதமர் மோடியின் நாக்கு - மதுக்கூர் இராமலிங்கம்

முதல்கட்ட வாக்குப்பதிவு நடை பெற்ற தமிழ்நாட்டை எட்டு முறை சுற்றி வந்த பிரதமர் நரேந்திர மோடி அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் என்றெல்லாம் உருகினார். தமிழ் உலகின் மூத்த  மொழி என்று கூறிய அவர் சில திருக்குறள் களையும் தனது பாணியில் சொல்லத் தவற வில்லை. கடைசிக் கட்டமாக எப்போதும் கூட்ட மிருக்கும் சென்னை பாண்டிபஜாரில் ரோடு ஷோவும் நடத்தினார். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் வேறு மாநிலங்களுக்கு பரப்புரைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டையும், தமிழர்களையும் குறி வைத்து தாக்கி வருகிறார்.  ஒடிசாவில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பூரி ஜெகநாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறை சாவியை கடந்த ஆறாண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர் என்கிறார். நல்ல வேளை அவர்  பூரி ஜெகநாதர் கோயிலையே பெயர்த்து தமிழ்நாட்டுக்கு கொண்டு போய்விட்டதாகக் கூற வில்லை. ரத்தின பண்டா எனப்படும் பொக்கிஷ அறையின் சாவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி யது யார் என்று மோடி கேள்வி எழுப்பி யிருக்கிறார்.

கிசுகிசு பாணியில் பேசுகிறார்

இவரது பொறுப்பில்தானே ஒன்றிய புல னாய்வு அமைப்புகள் அனைத்தும் இருக் கின்றன. இதுதவிர பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள்களும் இவர்களிடம் தானே உள்ளன. பொக்கிஷ  அறையின் சாவியை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார் என்று கண்டறிந்து சொல்ல வேண்டியது தானே. அதை விடுத்து மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என கிசுகிசு பாணியில் ஒரு பிரதமர் பேசுவது முறையா?  ஒடிசா முதல்வரின் தனிப்பட்ட உதவியாள ராக இருந்து, பின் விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தள கட்சியில் இணைந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனை குற்றம் சாட்டும் வகையில்  தான் பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.  பிஜூ ஜனதாதளம் மோடி அரசு கொண்டு  வந்த பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை கைதூக்கி ஆதரித்த கட்சிதான். பிஜூஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன்  பட்நாயக் பாஜகவின் மதவெறி நடவடிக்கை களையோ, சீரழிவு பொருளாதாரக் கொள்கை களையோ வெளிப்படையாக விமர்சிப்பதில்லை. மக்களவைத் தேர்தலு டன் ஒடிசா சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் நிலையில், பாஜக - பிஜேடி கூட்டணி உருவாகா மல் போனதற்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் எனக் கருதி அவரை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார் பிரதமர் மோடி. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மதம், மொழி, இனம் மற்றும்  மாநிலத்தின் பெயரால் இன்னொரு தரப்பு மக்களை தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகை உணர்வைத் தூண்டுவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத, இன, மொழிவெறி கிளப்பும் மோடி - அமித்ஷா வகையறா

அதுமட்டுமில்லாமல் ஒடிசாவில் இரட்டை இன்ஜின் ஆட்சி அமையும் என்றும், அப்படி அமைந்தால் ஒடிசாவை சேர்ந்த ஒருவர் தான்  முதல்வராவார் என்றும், பிரதமர் மோடி பேசி யுள்ளார். பிஜேடி வென்றால் வேறு மாநில த்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கி  விடு வார்கள் என்று ஒடிசா மக்களை  உசுப்பி  விடுகிறார். குஜராத்தைச்  சேர்ந்த நரேந்திர மோடி உ.பி.யில் உள்ள வாரணாசி தொகுதி யில் போட்டியிடுகிறார். அதில் ஒன்றும் தவ றில்லை. ஆனால் தனது ஆட்சியின் சாதனை களாக எதையும் கூற முடியாமல் செல்லும் இடமெல்லாம் மதவெறியை, இனவெறியை, பிரதேச வெறியை மோடி - அமித்ஷா வகை யறா கிளப்பி விடுகிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதே இல்லை. யாரும் கேள்வி கேட்க வழியில்லாத வடிவமான ‘மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலியில் மனம் போன போக்கில் பேசுவார். இந்நிலையில் சில குறிப்பிட்ட பத்திரி கையாளர்களை மட்டும் அழைத்து தனது  பரப்பு ரைக்கு இடையே தரிசனம்  கொடுத்த பிரதமர் மோடி  தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை விமர்சித்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆளில்லை. ஆனால் மாநில அரசுகள் பெண்களுக்கு இல வச பேருந்து சேவை என அறிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது தமிழக அரசு.  இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய தில்லி, கர்நாடகம், தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் பெண் களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அறி விக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மீனவ பெண் களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கிறது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.

விரிவாக்கத்துக்கு நிதி தராமல் வீண்பழி சுமத்தும் மோடி

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “பிரதமர் பேசுவதை கவனித்தால் உண்மை கிலோ என்ன விலை? என்று கேட்பார் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் 2019இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள் 2023இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரி வாக்கத்திற்கு ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர், விடியல் பயணத் திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தியிருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண் களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.  பிரதமர் ஓசியில் விமானத்தில் பயணிக்க லாம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கூடாதா? என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.  தென் மாநிலங்களைச் சாடும் பிரதமர் பிரதமரின் தமிழர் விரோத, தமிழ்நாட்டு விரோதச் சிந்தனை இத்துடன் நிற்கவில்லை.  உ.பி.யில் தமிழ்நாட்டை மட்டுமின்றி, பாஜக வை துடைத்தெறிய காத்திருக்கும் தென்னிந் திய மாநிலங்களையும் வசைபாடியுள்ளார் பிர தமர். தென்னிந்திய மாநிலங்களில் ஏராள மான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்று கிறார்கள். கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு இவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் அல்ல, நம்முடைய விருந்தினர்கள் என்று  கொண்டாடுகிறது. இங்கு வந்து பணியாற்றும்  வட மாநிலத் தொழி லாளர்கள் பாஜக ஆட்சியில் தங்களது மாநில மும், வாழ்வாதாரமும் அழுத்தப்பட்டு கிடப்பதை உணர்கிறார்கள். இந்தத் தேர்தலில் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கோபம் பிரதி பலிக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதை தெரிந்து கொண்ட நரேந்திர மோடி உ.பி. மாநில மக்கள் மத்தியில் தென் மாநிலங்களுக்கு எதிராக விஷ விதைகளை விதைக்க முயல்கிறார். தென்னிந்தியாவில் உ.பி. மக்களையும் மொழியையும் இழிவு படுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகம், தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி, உ.பி.யை அவமானப்படுத்துகிறார்கள் என்று பிரதமர் என்ற உயரிய பொறுப்பில் உள்ள ஒருவர் தாம் வகிக்கும் பதவிக்கு பொருத்தமில்லாத வகையில் பேசியுள்ளார். 

போலி வீடியோ கட்சி

பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஸ்யப் என்ற ஆசாமி தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ ஒன்றை தயாரித்து பீகாரில் பரப்பினார். ஆனால் தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு இது ஒரு சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ என்பதை உடனடியாக அம்பலப்படுத்தி பதற்றத்தை நிறுத்தியது. பொய் பரப்பிய மணீஷ் காஸ்யப் கைது செய்யப்பட்டார். ஆனால் இதற்கு பீகார் மாநில பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்தார். ஒரு படி மேலே சென்று பீகார் மாநில பிராமணர் சங்கம் மாநிலம் முழுவதும் பந்த் போராட்டம் அறிவித்தது. பிறகு மணீஷ் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பாஜக ஆரத்தழுவி தனது கட்சியில் சேர்த்துள்ளது. இதுதான் அவர்களது லட்சணம். பாஜக ஆட்சியில் அனைத்துத் துறைகளி லும் உ.பி.மாநிலம் பின்தங்கியுள்ளது. ஆனால் புல்டோசரை எங்கே விட வேண்டும் என யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி வெறியேற்றுகிறார். மறுபுறத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசரை கொண்டு இடித்து விடுவார்கள் என்று அபாண்டமாகப் பேசுகிறார்.  அம்பானி, அதானி போன்றவர்களிடம் காங்கிரஸ் கண்டெய்னரில் பணம் வாங்கி விட்டது என்று ஒருநாள் பேசுகிறார் பிரதமர். தன்னுடைய நண்பர் அதானியின் ஊழலை மறைக்க ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க விடாமல் நாடாளுமன்றத்தையே முடக்கிய மகானுபாவர் இவர். அதானியை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று நிலக்கரி சுரங்கங்களை வாங்கிக் கொடுத்தவர். அதற்கு கடன் கொடுக்க ஸ்டேட் வங்கி தலைவரையும் கையோடு அழைத்துப் போனவர். கொரோனா காலத்திலும் தன்னுடைய கூட்டாளிகளான அம்பானி, அதானி வகையறாவின் வருமான வளம் குன்றாமல் பார்த்துக் கொண்ட ஏழைப் பங்காளர் இவர்.  அம்பானி, அதானி குறித்து காங்கிரசை கைகாட்டும் இவர் ஜார்க்கண்ட் மாநில பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மாவோயிஸ்ட் மொழியில் பேசுகிறார். அதனால்தான் தொழில்  அதிபர்கள் முதலீடு செய்ய ஐம்பது முறை யோசிக்கிறார்கள் என்று தோசையை மாற்றி போட்டு மசால்  தோசையாக மாற்றுகிறார். 

பாதாள மட்டப் பேச்சு

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி, அமித்ஷா வகையறா எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை விட இஸ்லாமிய மக்களுக்கெதி ராக விஷமவிஷம் கக்கியதுதான் அதிகம். இந்துப் பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை கூட எடுத்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடப் போகிறார்கள் என்று தரைமட்டத்தையும் தாண்டி பாதாள மட்டத்திற்கு போனது பிரதமரின் பேச்சு. இஸ்லாமியர்களை அதிக குழந்தை பெறுபவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் ‘அந்நியன்’ போல வசை பாடிவிட்டு மறுநாளே நான் ஒருபோதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய தில்லை. அப்படி பேசினால் நான் பொது வாழ்வில் இருக்கவே தகுதியற்றவன் என்று பேசி ‘அம்பி’யாக காட்சியளிப்பார்.  இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கிறது. இன்னும் எத்தனை வேடங்க ளை இந்த நாடு பார்க்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் ஒன்றுமட்டும் உறுதி. இந்த நாடகத்திற்கு திரை விழும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


 

;