articles

img

உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி பன்னீர்செல்வம் - ஜி.சம்பத்,

25ஆம் ஆண்டு நினைவுநாள்

திருப்பூரில் 1998ஆம் ஆண்டு மார்ச் 17 இரவு சுமார் 7.30 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் கொலைவெறிக் கூட்டத் தால் பன்னீர்செல்வம் படுகொலை செய்யப் பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராக பணியாற்றிய ஒரு பனியன் தொழி லாளி கொலை செய்யப்பட்டது ஏன்? எதற்காக? என்ற கேள்விக்கு விடை தேடிய தோழர்கள் ஊன், உறக்கமின்றி தூக்கம் தொலைத்த இரவுகள் பல. இந்தக் கேள்விக் கான பதில் தெரிந்த போது திருப்பூர் அதிர்ந் தது. சங்கம் வைப்பதும், கோரிக்கை வைப்ப தும் தொழிலாளிகள் உரிமை, அந்த உரிமை யைக் கேட்பது  கொலை செய்வதற்குரிய குற்றமா? என்ற ஆவேசத்தோடு திருப்பூர் தொழிலாளி வர்க்கம் திரண்டு எழுந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, எந்த கம்பெனி தொழிலாளர்களை அணி திரட்டுவ தற்காக தோழர் பன்னீர்செல்வம் உயிர் நீத்தாரோ, அதே கம்பெனியின் நிர்வாகத்தி னர் கைது செய்யப்பட்டனர்

கொலையாளியை  சேர்த்துக் கொண்ட பாஜக

கொலைக் குற்றவாளிகள் பிணையிலே வந்தபோது மாலை மரியாதையுடன் வர வேற்று, பாரதிய ஜனதா கட்சியில் இணை த்துக் கொண்டனர். கொலையாளி தேச பக்த னாக அவதாரம் எடுத்த அவலத்தை திருப்பூர் நகரம் பார்த்தது. தோழர் பன்னீர்செல்வத்தின் கொலை தனித்த சம்பவம் அல்ல. சுரண்டலு க்குத் தடையாக இருக்கும் எதுவொன்றும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற முதலாளித்துவ கருத்தோட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்க  வேண்டும். பன்னீர்செல்வம் கொலைக்கு பிந்தைய 25 ஆண்டுகளில் நடைபெற்றிருக் கும் மாற்றங்கள் அனைத்தும்  லாபம் மற்றும் சுரண்டலை மையப்படுத்தியதாகவே நடை பெற்று இருக்கிறது.

மாறிய நிலையில்  அதிகரித்த சுரண்டல்

1990 ஆம் ஆண்டுகளில் உலகமயமாக் கல் கொள்கை அமலாக்கப்பட்டதற்கு பின் பெருமளவு ஏற்றுமதி அதிகரித்தது. நவீன தொழில்நுட்பங்கள் மிகப் பெருமளவு அதிக ரித்தது. உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. நவீன இயந்திரங்களுக்கு இணையாக போட்டிபோட்டு உழைப்பைச்  செலுத்தக்கூடிய இளம் தொழிலாளர்கள் தேவை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் 45 - 50 வயதுக்கு மேல் பனியன் தொழிலில் திறன் வாய்ந்த வேலை களை செய்ய முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. எனவே தமிழகத்தின் பல மாவட் டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூர் வந்து தங்கி பணி செய்வது அதிகரித்தது. பலர் இங் கேயே நிரந்தரமாக குடியேறினர். அன்றும் உள்ளூர் தொழிலாளர்கள் சோம்பேறிகள் என்றுதான் திருப்பூர் முதலாளிகள் கூறி னார்கள்.  ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின் திருப்பூர் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம் பீஸ் ரேட், சட்ட விரோதமான காண்ட் ராக்ட் முறை அதிகரிப்பு, கண்ணியமற்ற பணிச் சூழல் போன்ற காரணங்களால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வரு வது சரிந்தது. அதே காலகட்டத்தில் தற் கொலைகளின் தலைநகரம் திருப்பூர் என நாடு முழுவதும் செய்தித்தாள்களின் முக்கிய செய்தியாக மாறியிருந்தது. முதலாளி, தொழிலாளி என்ற உறவு நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.  இந்நிலைமைகளில் மாற்றம் கொண்டு வர முன்வராமல்  கடந்து சென்றதன் விளைவு, தமிழக தொழிலாளர்கள் திருப்பூர் வருவது குறைந்தது மட்டுமல்ல, ஒரு பகுதி தொழிலா ளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதும் தற்செயலான நிகழ்ச்சிப் போக்கல்ல. இவையெல்லாம் மென்மேலும் சுரண்டல் அதிகரித்ததன் விளைவுகளே.

புலம் பெயர் தொழிலாளர் வருகை

இத்தகைய நிலைமையில்தான் முன்னர் குறிப்பிட்டது போல் இளம் தொழிலாளர்க ளின் தேவை அதிகரித்தது. தமிழகத்தில் 30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் சுமார் 80 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்தி ருக்கும் போதும், திருப்பூர் பனியன் தொழிலா ளியாக வருவதற்கு விரும்புவதில்லை. அதற் குரிய சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிச்சூழலை ஏற்படுத்த பனியன் நிர்வாகங்களும் தயாராக இல்லை. எனவே தொழில் வளர்ச்சி இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய வட மாநி லங்களிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டது.  இவர்கள் எந்தவித சட்ட, சமூக பாது காப்பும் இல்லாத, நவீன அடிமைகளைப் போல் வேலை வாங்கப்படுகிறார்கள். கடந்த  சில வருடங்களில் ஒன்றிய பாஜக அரசு அமலாக்கிய பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிராபேக் குறைப்பு, கொரோனா பாதிப்பு, நூல் விலையேற்றம் போன்ற காரணங்களால் தொழில் பாதித்து வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் ஏற்படும் அதிருப்தியை சில சுயநல சக்திகள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக, வதந்தியை கிளப்பி மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இத்தகைய நிலை மைகள் ஏற்பட, எவ்வித சட்ட வரைமுறை யும் இல்லாமல் தொடரும் சுரண்டல் முறை தான் முக்கியக் காரணம்.

தொடரும் உரிமைப் போராட்டம்

பனியன் தொழிலாளர்களின் உரிமைக் கான போராட்டத்தில் எந்தவிதமான ஊச லாட்டமும் இல்லாமல் தொழிலாளர் ஒற்று மைக்கான போராட்டத்தை சிஐடியு நடத்துகி றது. சாதி, மதம், மொழி எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெ டுப்பதன் மூலம் மட்டுமே பன்னீர்செல்வம் எந்த வர்க்கத்திற்காக போராடி உயிர் நீத்தாரோ, அந்த வர்க்கப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க முடியும். அந்த உறுதியுடன் நாம் முன்னேறுவோம்!

 

;