சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த சுமைப்பணித் தொழில் தலைச்சுமையாக துவங்கி, தள்ளுவண்டி, மாட்டுவண்டி, கைரிக்சா, லாரி, வேன், குட்டியானை, மீன்பாடி என பரி வர்த்தனையில் பல வடிவமெடுத்து உள்ளூரில் வளர்ந்து வந்தது. ஆனால், இன்று இரயில், கப்பல், விமானம் என உலகளவில் சரக்குப் பறக்கிறது. பரி வர்த்தனை உலகமயமாகிப்போன நிலையில் சரக்கு கள் எளிதாக பயணிக்க கன்டைனர்களில் அடைக்கலம் புகுந்தது. அறிவியல் துணையுடன் பரிவர்த்தனை பல மடங்கு மாறி விட்டது. ஆனால் சுமைதூக்குபவன் வாழ்க்கை மட்டும் மாறாமல் அதல பாதாளத்தில் அப்படியே கிடக்கிறது. இது லாஜிஸ்டிக் என அழைக்கப்படுகிறது. லாஜிஸ்டிக் தொழில் வேகமாக வளர்ந்து வருவது. இது விவசாயம்,தொழில்துறை, சேவை துறை அனைத்தை யும் இணைக்கிறது. இது பொருளாதாரத் துறையின் முதுகெலும்பு என்கிறது. இந்தியாவில் லாஜிஸ்டிக் வரு டாந்திர வளர்ச்சி 10 சதவீதம். 2020ஆம் ஆண்டில்200 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. 2025இல் 320 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்யும். ( ஒரு பில்லி யன் என்பது நூறு கோடி) இது இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 14.4 விழுக்காடு என்கிறது மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் .
மேலும் இத் தொழிலில் 80 விழுக்காடு சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன. 22 மில்லியன் தொழிலாளர்கள் இதில் உள்ளனர். இத் தொழில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதை நவீனப் படுத்த கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க இந்த ஆய்வு நிறுவனம் ஆலோசனை சொன்னது. மோடி சும்மா இருப்பாரா? இத் தொழிலை 2017இல் சட்டமியற்றி் வர்த்தகத் துறைக்குள் கொண்டுவந்து விட்டார். கதி சக்தி நேசனல் மாஸ்டர் பிளான் என ஒரு திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் அனைத்து சிறப்பு பொருளா தார மண்டலங்களையும் இணைப்பதோடு இரயில் சரக்கு போக்குவரத்தை முழுமையாக தனியாரிடம் வழங்குகிறது. கான்கர், சென்ட்ரல் வேர் அவுஸ் போன்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான மற்றும் பொ துத்துறை குடவுன்களையும் முழுமையாக தனியாரி டம் வழங்குகிறது. அரசு விவசாயிகளிடம் கொள் முதலை கைவிட்டு தனியார் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. தற்போது இத்துறை அம்பானி- அதானி கைகளுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த லாஜிஸ்டிக் என்கிற கன்டெய்னர் டெர்மினல் வளாகத்தில் மிகப்பெரிய கிரேன் மற்றும் கனரக இயந்திரங்களுடன் உயிருக்கு ஆபத்தான சூழலில் வேலை நடக்கிறது. இதுபெரும் தொழிற்சாலை. இது வர்த்தக நிறுவன சட்டத்திற்குள் கொண்டுவந்துள்ள தால் கனரக ஓட்டுநர்கள் உள்ளிட்டு சுமைப்பணி தொழி லாளர்களுக்கும் மிகக் குறைந்த கூலியே வழங்கப்படு கிறது. நீதி மன்றங்களுக்கு சென்றால் கூட சட்டத்தை காட்டி ஒப்பந்ததாரர்கள் தப்பிவிடுகின்றனர். கன்டெய் னர் முதலாளி தனக்கும் தொழிலாளிக்கும் தொடர் பில்லை என்கிறார். எல்லாம் அவுட் சோர்சிங். எந்தச் சட்டமும் இங்கில்லை. பல நேரங்களில் உயிரிழப்பு நேரிடுகிறது. அங்க அவயங்களை தொழிலாளர்கள் இழக்கின்றனர். இதை எதிர்த்து கேட்டால் வேலை யில்லை. அங்கே பீகாரி வந்து விடுவான். இங்கு யார் என்பது பொருட்டல்ல. யாருக்கு வேலை என்பதை குறைந்த கூலி தான் தீர்மானிக்கிறது. கேரள அரசைப் போல் யார்செய்தாலும் ஒரே கூலி என்பது இங்கு இல்லை.
நிறுவனங்களில் தான் இப்படி என்றால், மார்க்கெட் மற்றும் ஊரில் மக்களுக்கு தேவையான பணிகளை செய்வது என்ற சுமைப்பணி வேலையில் கூட முதலா ளித்துவம் மாற்றத்தை கொண்டு வந்து விட்டது. இன்டீட், குயிக்கர், இன்டியா மார்ட் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் வந்து விட்டன. இவர்கள் ஆன்லைன் ஆப் உருவாக்கி வைத்துக் கொண்டு மக்களிடம் ஆர்டர் பெற்று மிகக் குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகின்றனர். இது மட்டுமல்லாது உணவு முதல் வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் சுமந்து செல்கிற பணியை வேலையற்ற இளை ஞர்களை வைத்து அமேசான், பிளிப்கார்ட், உபேர், ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்க ளும் பகல் கொள்ளையடிக்கின்றன. இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள இவர்கள் தொழிலாளர் இல்லை. எங்கள் டெலிவரி பார்ட்னர் என்கின்றனர். இதனால் தாங்கள் ஏமாற்றப் படுகிறோம் என பல நேரங்களில் இவர்கள் வெடித்துக் கிளம்புகிறார்கள். இவர்களை நமது ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதேயில்லை. இந்த இணையதள வர்த்தக நிறுவனங்களின் கீழ் 2.5 கோடி இளைஞர்கள் வேலை செய்வதாக “செயலி அடிப்படையிலான போக்குவ ரத்துத் தொழிலா ளர்களின் இந்திய கூட்டமைப்பு” கூறுகிறது. மேலும் இவ்வமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சோமாட்டோ, பண்டல் டெக்னாலஜிஸ் (ஸ்விக்கி), ஏஎன்ஐ டெக்னா லஜிஸ் (ஓலா) மற்றும் உபேர் இந்தியா சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆப் அடிப்படையிலான தொழிலாளர்க ளை ‘தொழிலாளர்கள்’ என்று அறிவிக்க வேண்டும். சமூக பாதுகாப்பு சட்டங்களின் கீழ் ‘அமைப்புசாரா தொழிலாளர்கள்’ என அங்கீகரிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிடக்கோரி இம்மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என வாக்குறுதி அளித்து ஏமாற்றி “ சமோசா விற்பதும் வேலைதான்” என வாய்ச்சவடால் அடித்த நரேந்திர மோடி இந்த இளம் தொழிலாளர்களைப் பற்றி எதுவும் கண்டு கொள்ள வில்லை.
ஏன் இந்த அவல நிலை? ஆட்சியாளர்கள் கடைப் பிடிக்கும் நவீன தாராளமய கொள்கையின் விளைவு இது. நாம் ஒன்றுபடாமல் இருக்க மதவெறியைத் தூண்டி வெறுப்பை விதைத்து சமூகத்தையே நஞ்சாக் கும் ஆர்எஸ்எஸ் செயல் திட்டத்தை மோடி அமல்படுத்து கிறார். கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க சேவகம் செய்கிறார். ஒன்றிய, மாநில அரசு (வேர் அவுஸ்) குடவுன்க ளை தனியாருக்கு விடாதே!. கன்டெய்னர் யார்டுகளை தொழிற்சாலை சட்டத்திற்குள் கொண்டுவா!. இணைய தள ஆப் நிறுவனங்களை கட்டுப்படுத்து. பார்ட்னர் என்ற மோசடியை நீக்கி தொழிலாளர் சட்டத்தைஅமலாக்கு. கேரளாவைப் போல முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய். சுமைப் பணி தொழிலாளிக்கு தனி நலவாரியம் ஏற்படுத்து என சுமைப்பணி 9 ஆவது மாநில மாநாட்டில் சூளுரைப் போம். மாநாடு வெல்லட்டும்.
கட்டுரையாளர்: சிஐடியு மாநிலச் செயலாளர்