ஒரு புறம் விவசாயிகள் தங்கள் வாழ்வா தாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி அவர்களின் அடிப்படை வாழ்வையே கேள்விக்குறியாக்கியது. 2020 நவம்பர் 26 ஆம் நாள் 20 கோடி தொழிலாளர்கள் மோடி அர சின் நாசகர பொருளாதாரக் கொள்கையையும், தொழி லாளர் விரோத சட்டங்களையும் எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்று தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் ஒரு வருட மாக தொடர்கிறது.
கொச்சைப்படுத்திய ஆட்சியாளர்கள்
அமைதியான வழியில் அறப்போரில் ஈடுபட்ட விவசாயிகளை ஆளும் பாஜகவினரும், அவர்களின் கூட்டாளிகளும் கொச்சைப்படுத்தினர். “போராடுபவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை; அவர்கள் இடைத்தரகர்கள்” என்று வசை பாடினார்கள். தில்லியில் போராடுவதற்கென்றே நிர்ணயிக்கப்பட்ட இடங்களான ஜந்தர் மந்தரையோ அல்லது ராம்லீலா மைதானத்தையோ தரமாட்டோம் என்று ஆட்சியாளர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்ட னர். போராடுபவர்களுக்கு எதுவுமே பொருட்டல்ல என்ற வகையில் தில்லி நகரின் மூன்று எல்லை களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை துவக்கினர். அவர்களே கொட்டகை போட்டுக் கொண்டு, அவர்களே சமைத்துக் கொண்டு, சாலையோரத்திலே உண்டு, உறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தங்களை தடி கொண்டு அடக்க வந்த காவலர்களுக்கும் சோறிட்டனர்; ஆண் விவசாயிகள் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான பெண் விவசாயி களும் போராட்டத்தில் பங்கேற்றனர். வெயில், மழை, வெள்ளம், கொரோனா எதுவும் அவர்கள் போராட்ட த்திற்கு தடையாக இல்லை. எல்லாவற்றையும் கடந்து போராட்டம் தொய்வில்லாமல் தொடர்ந்தது.
தோல்வியுற்ற பேச்சுவார்த்தை
போராட்டம் வீறு கொண்டு எழுந்ததை அடுத்து, அமைச்சர் அளவிலான பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். 500 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் “சம்யுக்தா கிசான் மோர்சா” என்ற குடையின் கீழ் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். “இருக்கும் சட்டங்களில் சிலவற்றை ஆங்காங்கே மாற்றலாம்” என்பதே ஒன்றிய அரசின் நிலைபாடாக இருந்தது. அடிப்படையே கோளாறாக உள்ளபோது என்ன மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதனால் பயனில்லை என்று தெளிவாக தங்கள் நிலையை எடுத்துக் கூறிவிட்டனர். “மூன்று வேளாண் சட்டங்களை யும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும்” என்பதே அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக இருந்தது. பேச்சு வார்த்தையின் போது அரசு கொடுத்த உணவு மட்டுமல்ல, தண்ணீரைக் கூட பருக மறுத்துவிட்டனர் விவசாயி சங்கத் தலைவர்கள். பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.
இதற்கிடையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மூவர் குழு அமைக்கப்பட்டு விவசாய சட்டங்களை ஆய்வு செய்த னர். அது தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திற்கு மூடப்பட்ட உறையில் அளித்தது. இவ்வாறு ஏதாவது செய்து போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சி நடை பெற்றது. ஆனால் போராடும் விவசாயிகள் உறுதி யாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அடக்குமுறை
கொரோனாவை காரணம் காட்டி போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்தனர். அடக்குமுறையை பயன் படுத்தி போராட்டத்தை நசுக்கப் பார்த்தனர். தடியடி நடத்தினர். கண்ணீர் புகை வீசினர். தண்ணீர் பீய்ச்சினர். சாலையில் குழி வெட்டினர். ஆணியை நட்டனர். குடி தண்ணீரை தடை செய்தனர். போக்குவரத்துக்கு இடை ஞ்சல் என்று அருகாமையில் குடியிருப்போர் என்ற பெய ரில் குண்டர்களை ஏவி விட்டு தாக்குதல்தொடுத்தனர். சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை அவமானப் படுத்தினார்கள் என்று அவதூறு பிரசாரம்செய்ய முற்பட்டு அவர்களே அம்பலப்பட்டு போனார்கள். அக்டோபர் 3 ஆம் நாள் லக்கிம்பூரில் போராட்டத்தில் பங்கேற்று அமைதியாக வீடு திரும்பிக் கொண்டி ருந்த நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட னர். எதற்கும் அஞ்சவில்லை விவசாயிகள். இதெல்லாம் அவர்களின் மன உறுதியை சற்றும் குலைக்கவில்லை.
போராட்டத்தின் தன்மை மாறியது
துவக்கத்தில் இந்த கோரிக்கைகளை மட்டுமே வைத்து போராடிய விவசாயிகளின் போராட்டத்தின் தன்மை மாறியது. லட்சக்கணக்கான விவசாயி களைக் கூட்டி மக்கள் மகா பஞ்சாயத்து நடத்தினார்கள். 2021 செப்டம்பர் 5ம் நாள் முசாபர்நகரில் 15 மாநிலங்களி லிருந்து ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்ற மகா பஞ்சாயத்தில் “கோரிக்கைகளை தீர்த்து வைக்க ஒன்றிய அரசு முன் வராவிட்டால், அடுத்த வருடம் நடை பெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை தோற்கடிக்க பிரசாரம் மேற்கொள்வோம்” என்று சூளு ரைத்தனர் லட்சக் கணக்கான விவசாயிகள். ”தேவைப் பட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை கூட தங்கள் போராட்டம் தொடரும்” என்று போராட்டக் குழுவினர் எச்சரித்தார்கள்.
மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது என்று வழக்கு தொடுத்து போராட்டத்திற்கு தடை பெற முயற்சித்தார்கள். வன்முறையை தூண்டிவிடவும், கட்ட விழ்த்துவிடவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரவெல்லாம் ஆயிரக்கணக்கான இளம் விவசாயிகள் கண் விழித்து கூடாரத்தை காவல் காத்த னர். ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முன்னால்எதுவும் எடுபடவில்லை.
தொழிற்சங்க ஆதரவு
இடதுசாரிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர் ஆதரவு நல்கினர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பத்து மத்திய தொழிற்சங்கங்களின் அறை கூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கங் களும், தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் தனியார்மயமாக்கலை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு நல்கின.
மகத்தான நாள்
கடந்த ஒரு வருடமாக தில்லியில் போராடி வரும் விவ சாயிகளுக்கு நவம்பர் 19 ஒரு மகத்தான நாள். ஆண வத்துடன் பல சூழ்ச்சிகள் செய்து போராட்டத்தை நசுக்கப் பார்த்த ஒன்றிய பாஜக அரசை அடிபணிய வைத்த நாள். ”மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும்” என்று பிரதமர் மோடி அவர்களே அறி விக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது 500 விவ சாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைமையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் தொய்வில்லா தொடர் போராட்ட த்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த பெரு வெற்றி.
“பிரதமரின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். சட்டப்பூர்வமாக மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும் மின்சார மசோதாவும் ரத்து செய்யப்பட வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் ஓயாது” என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது அவர் களின் மன உறுதியை காட்டுகிறது. உலகிற்கே வழி காட்டியுள்ள விவசாயப் போராளி களுக்கு செவ்வணக்கம். இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி. மக்கள் சக்திக்கு முன்னால் எத்தனை பெரும்பான்மையுள்ள அரசானாலும் அடி பணிந்தே ஆக வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது விவசாயப் போராட்டம்.