articles

img

பிதாவே, இவர்கள் அறிந்தே செய்கிறார்கள் ! - பி.சுகந்தி,

மே 4 அன்று நடந்த பயங்கரம், அன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சி 79 நாட்களுக் குப் பின்பு வெளிவருகிறது. முன்பே அதுபற்றி தெரிந்திருந்தும் வாயே திறக்காத மணிப்பூரின் முதலமைச்சரும், பிரதமர் மோடியும்  இந்த சம்ப வத்தால் கடும் வேதனையும், கோபமும் அடைந் துள்ளதாகவும், இச்செயல் 140 கோடி இந்தியர்களை அவமானப்படுத்துவதாகவும், மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது என்றும், குற்றவாளி கள் தப்பிக்க முடியாது என்றும்,  இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்,  உலக மகா நடிகர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  மணிப்பூரில்  மனசாட்சியே இல்லாத  அயோக்கிய கும்பல் ஒன்று இரண்டு பெண்களை நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக அழைத்து வந்த அந்த வீடியோ காட்சியை பார்த்த மனசாட்சி உள்ள பல கோடி மக்கள்,  தங்கள் ஆதங்கங்களையும், எதிர்ப்பையும்  கொட்டிய பின்பு தான் பிரதமர் வாயிலிருந்து கண்ட னம் என்பது வருகிறது.  இதே 79 நாட்களில் பிரதமர் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். அமெரிக் காவில் இவர் பயணத்தின் போதே,  இந்தியாவில் மணிப்பூரில் மக்கள்  பாதுகாப்பற்று இருக்கிறார்கள்  என்ற பிரச்சாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வலுவாக வந்தது.  இதைவிட இந்திய தேசத்திற்கு வேறு என்ன அவமானம் வேண்டும்.

பெண்களை குறி வைத்து தாக்கும்  இன அடிப்படைவாதம்

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இருந்து மிக அருகிலே நடந்த இக்கொடூர சம்பவத்தில் நாம் வீடியோவில் பார்த்தது இரண்டு பெண்கள். ஆனால் அங்கு மூன்று பெண்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.  மற்ற 2 பெண் களில் ஒருவர் 21 வயது இளம்பெண். அவரை அக் கும்பல் நிர்வாணமாக அழைத்து வந்தபோது அதைத் தடுத்த அவரது 19 வயது சகோதரன் படுகொலை செய் யப்பட்டுள்ளார். அப்பெண்ணைப் பாதுகாப்பதற்குச் சென்ற  56 வயது தந்தையும் படுகொலை செய்யப் பட்டார்.  அப்பெண் எத்தனை பயங்கரமான - துயர மான மனநிலையில் துடித்திருப்பார் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. அப்பெண்கள் இருவரும் பலர் கண்ணெதிரிலே மோசமான கும்பல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கடந்த 79 நாட்களாக அவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றார்கள். ஆனால்  அந்த குற்றவாளிகள் அனைவரும் வீதிகளிலே வீரர்கள் போல நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கெல்லாம் இரு சமூக மக்கள் மத்தியில் இது  போன்ற கலவரங்கள் நடக்கின்றதோ அல்லது இரு நாடுகளுக்கு மத்தியில் போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் கலவரத்தை தூண்டுகின்ற ஆண்கள் எதிர்த் தரப்பினரை தாக்குவதற்கான ஆயுதமாக பாலியல் பலாத்காரத்தை பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்த வர்களாக இருந்தாலும் அவர்கள் அடுத்து இந்த சமூகத்தில் எத்தகைய அவமான உணர்வோடு வாழ் வார்கள் என்பதை இந்திய சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

எத்தகைய மோசமான சமூகச் சூழலில் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வுடனே - அச் சத்துடனே அப்பெண்கள் தங்களுடைய வாழ்நாளை கழிக்க வேண்டிய ஒரு அவலமான நிலை. தங்கள் தேர்தல் லாபத்திற்காக வெறுப்பு அரசி யலை வளர்த்த பாஜகவே இதற்கு மிக முக்கிய கார ணம். இந்தியா முழுவதிலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலை நடத்தி தேர்தல் ஆதாயம் தேடும் பாஜக, மணிப்பூரிலும் பழங்குடி கிறிஸ்தவ சமூ கத்தைச் சார்ந்த குக்கி இனத்திற்கு எதிராக இந்து மதத்தை சார்ந்த மெய்டெய் சமூகத்தை தூண்டிவிட்ட  செயலே இத்தகைய கடுமையான கலவரத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் குக்கி சமூகத்தை சார்ந்தவர்களை மணிப் பூர் முதல்வர் ‘மியான்மரிகள்’ என்று பழித்து, தூற்று கிறார். ‘ வனங்களை பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் குக்கி சமூகத்தினர் வனங்களிலிருந்து வெளியேற் றப்படுகின்றனர். 60,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தா லும் அரசு நிர்வாகம் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்காத பட்சத்தில் அங்கு அமைதி ஏற்பட வாய்ப்பில்லை. மணிப்பூரில் மக்களைச் சந்தித்த தூதுக் குழுக் களைக் கூட  சந்திக்க பிரதமரால் நேரம் ஒதுக்க முடிய வில்லை. ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்று விட்ட தாக பெருமை பேசும் மோடி ஆட்சியில் இப்படி ஒரு அராஜகமான சூழல்.

பாலியல் குற்றவாளிகளை  பாதுகாக்கும் பாஜக

மணிப்பூரில் மட்டுமல்ல; நாட்டின் அனைத்துப் பகுதியிலும் பெண்கள் மீதான வன்முறையை பிர யோகித்த குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசாக மோடி அரசு இருந்து வருகிறது. காஷ்மீரத்தின் கத்துவாவில் ஆசிபா என்ற அழகு ரோஜாவை கசக்கி தூர எறிந்த குற்றவாளிகளை பாது காப்பதற்காக, தேசியக் கொடிகளோடு குற்றவாளி களை கைது செய்யக் கூடாது என ஊர்வலம் வந்த வர்கள் தான் பாஜக எம்எல்ஏக்கள்.   குஜராத் கலவரத்தின் போது தன் கண்ணெதி ரிலேயே தன்னுடைய உறவினர்கள், தன் குழந்தை யின் படுகொலையை கண்ணால் பார்த்ததோடு மட்டுமல்லாமல்,  கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கிலே அம்மாநி லத்தின் பாஜக எம்எல்ஏக்கள், குற்றவாளிகளை ‘நன் னடத்தை’ என்று காரணம் காட்டி சுதந்திர தினத்திலே வெளிவருவதற்கு  தங்களது ஆதரவை தெரிவித்தார் கள் என்பது அவமானகரமான வரலாறு.  

உத்தரப்பிரதேசத்தில் ஒரு தலித் பெண் அங்குள்ள பாஜக எம்எல்ஏவால் பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்ற வாளியை பாதுகாக்கும் நோக்குடனேயே  ஆதித்ய நாத் அரசு செயல்பட்டது. அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தையே படுகொலை செய்து குற்றவாளிகள் அனைவரையும் பாதுகாத்தது அந்த அரசு. மேலும் ஒரு தலித் பெண், அங்குள்ள உயர் சாதியைச் சார்ந்த கயவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக ளைக் கைது செய்யக் கூடாது என பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் போராட்டம் நடத்தியது. இவ்வளவு ஏன்,  இந்திய தேசத்திற்கு பதக்கங்க ளை அள்ளிக் கொடுத்த மகத்தான மல்யுத்த வீராங்க னைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் மோடி அரசால் பாது காக்கப்பட்டு வருகிறாரே!  எனவே, இன்றைக்கு பிரதமர் மோடி மணிப்பூர் மகள்களுக்காக என்று கூறி வடிப்பது முதலைக் கண்ணீர்! போலி வேடம்: அப்பட்டமான நாடகம்!  மத அடிப்படை வாதத்தையும், இன, மொழி அடிப் படை வாதத்தையும் வைத்து இந்த தேசத்தை துண்டா டுகின்ற பாஜகவை, அதன் பிரதமரை மக்கள் ஒற் றுமை என்ற ஆயுதத்தால் தூக்கி எறிய வேண்டிய காலம் இது. இத்தகைய மோசமான நிலைக்கு மணிப் பூரைத் தள்ளிய பாஜக மாநிலஅரசும் முதல்வரும்  உடனடியாக பொறுப்பில் இருந்து வெளியேற வேண்டும்.  உடனடியாக அமைதியை மீட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும், வீடு இழந்தவர்க ளுக்கு வீடுகளையும் கொடுத்து அவர்களது மறுவாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதே இன்றைய முக்கிய கோரிக்கை. இந்தியா முழுவதும் இக் கோரிக்கைகளுக்காக கரம் கோர்த்து போராடு வோம்!

;