articles

img

போர்க்குணமிக்க தலைவர் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதால் மட்டும் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆகி விடுவதில்லை. கம்யூனிஸ்ட் என்றால் தொடர்ந்து போராட வேண்டும். ஒருவர் தனது கொள்கை, கோட்பாடுகளையும், மக்களிடையே அர்ப்பணிப்போடு உழைப்பதையும், ஒன்றி ணைத்து போராட வேண்டும். அத்தகைய ஒரு கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்தவர் தான் தோழர் ஏ. நல்லசிவன் என தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் புகழாரம் சூட்டினார். தனது வாழ்நாள் முழுவதும் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் ஏ.என்.  அவரது நூற்றாண்டு விழா கொண்டாடுவது மிகவும் பெருமைக்குரியது. இந்நிகழ்வை யொட்டி ஒரு சிறப்பு மலர் கொண்டு வருவது தோழர் ஏ.என். அவர்களின் அர்ப்பணிப்புகள் நிறைந்த பணிகளை புரிந்து கொள்வதற்கும், அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து இளைய தலைமுறையினர் படிப்பினைகளை பெற்றுக் கொள்வதற்கும் பேருதவியாக அமையும்.

நான் உள்ளிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மாண வர்கள் ஒருமுறை சந்தித்து அவரோடு சில மணி நேரம் உரை யாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாணவர் தோழர்களாகிய நாங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் கேட்ட போது நிதானமாக விடையளித்தார். அன்றைய சூழலில் மாணவர்கள் மத்தியில் நிலவிய இடது அதிதீவிர கண்ணோட்டங்களை போக்கி, மார்க்சிய வழியில் செயல்பட அந்த உரையாடல் பேரு தவியாக இருந்தது. இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் மாணவர் தோழர்கள் எழுப்பிய தாறுமாறான கேள்விகள் மற்றும் பல குறுக்கீடுகள் இருந்த போதிலும் கொஞ்சமும் கோபப்படாமல் மாணவர்களிடம் அவர் நடத்திய கலந்து ரையாடல் மற்றும் சந்தேகங்களை தெளிவுபடுத்த அவர் கடை பிடித்த அணுகுமுறை பெரும் அனுபவமாக இருந்தது.  1982ம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற கட்சியின் 11வது மாநில மாநாட்டில் தோழர் ஏ. நல்லசிவன் முறைப்படி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதே மாநாட்டில் மாநி லக்குழு உறுப்பினராக நானும் தேர்வு செய்யப்பட்டேன். அப்போது முதல் தோழர் ஏ.என். அவர்கள் மறையும் வரை மிக நெருக்கமாக அவரிடமிருந்து பல படிப்பினைகளை  பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் பல அனுபவங்களும் எனக்கு கிடைத்தன. 

1940ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளிகள், இதர பகுதி தொழிலாளிகள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்து பகுதி மக்களின் உரிமைப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்கொடுமைகள், சித்ரவதைகளை அனுபவித்தவர். தனது இளம் வயதிலேயே கொலை வழக்கு மற்றும் நெல்லை சதி வழக்கு போன்றவற்றைச் சந்தித்தவர். எத்தனை அடக்கு முறைகள், மிரட்டல்கள் ஏவி விடப்பட்டபோதும் நெஞ்சுறுதி யுடன் எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். தமிழக அளவில் நடை பெற்ற எண்ணற்ற தொழிலாளர்கள் போராட்டங்களில் தலைமை தாங்கி தமிழக தொழிற்சங்க தலைவராக - சிஐடியுவின் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தவர். 

திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டத்தில்

நாடு விடுதலையடைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி கடை பிடித்த இடது அதிதீவிர அணுகுமுறையினால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளால் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டடிகளில் சித்ரவதை செய்யப்பட்ட னர். 1949ம் ஆண்டு நடந்த ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தையொட்டி 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர் களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். மதுரை, சென்னை, விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி, கோவை, சேலம், திருச்சி, வேலூர், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதியிலிருந்து தொழி லாளர்களும், விவசாயிகளும், மாணவர் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலூர் சிறை உட்பட எல்லா சிறைகளும் நிரம்பி வழிந்தன. தமிழகத்தில் தொழிற்சங்க காங்கிரஸ் உட்பட 19 தொழிற்சங்க அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டன. சேலம் சிறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். கடலூர் சிறையில் 7 பேர் கொல்லப்பட்டனர். வேலூர், மதுரை சிறைகளில் கடுமையான தடியடி நடத்தி பலர் மண்டைகள் உடைக்கப்பட்டன. தஞ்சையில் இரணியன், சிவராமன், ஆறு முகம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். களப்பால் குப்பு சிறை யில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். இத்தகைய அடக்கு முறை கொடுமைகளில் சிறையில் அடைக்கப்பட்டு நெஞ்சுறுதி யோடு போராடிய பலநூறு கம்யூனிஸ்ட்டுகளில் தோழர் ஏ. நல்லசிவன் முக்கியமானவர். 

இதனைத் தொடர்ந்து ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத் தில் எழுந்த வலது திருத்தல்வாதத்தை எதிர்த்து உறுதிமிக்க தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்திய தோழர்களோடு இணைந்து பணியாற்றியவர். கட்சியின் நான்காவது மாநாடு துவங்கி 6வது மாநாடு வரை கட்சிக்குள் காங்கிரஸ் கட்சியோடு அரசியல் உறவு கொள்ளுகிற திருத்தல்வாத அணுகுமுறையினால் பெரும் பின்னடைவை கட்சி சந்திக்க வேண்டியிருந்தது. இதுகுறித்து “இக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் தமிழ்நாட்டி லும், இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் உரிமை காக்கும் போராட்டங்கள் உறுதியான போராட்டங்கள் நடைபெற வில்லை. தொழிற்சங்க இயக்கம் வர்க்கப் போராட்டத்தின் கரு வியாக விளங்குவதற்கு பதில், வர்க்க சமரசத்தின் கருவி யாக செயல்பட ஆரம்பித்ததன் விளைவு இது. இந்திய பெரு முதலாளிகளைப் பற்றியும், அவர்களது அரசியல் கட்சிகளான காங்கிரசைப்பற்றியும் செய்த தவறான கணிப்பின் விளைவு இது” என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக சிங்கம்புணரியில் அமைந்த வி.வி. மில் தொழிலாளர்களை திரட்டாமல் நிர்வாகத்துடன் நேச உறவு கொண்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் ஆட்சேபகரமான போக்குகளை எதிர்த்து தோழர் ஏ. நல்லசிவன் தொழிற்சங்க அலுவலகத்திற்கு முன்னாலேயே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் என்றால் நிலைமையின் தன்மையை புரிந்து கொள்ள முடி யும். இத்தகைய சர்ச்சை நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் இந்திய - சீன எல்லை தகராறு ஏற்பட்டதை காரணம் காட்டி, சீன ஆதரவு கோஷ்டிகள் என முத்திரைக் குத்தி அரசு பலரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்களில் ஏ. நல்லசிவனும் கைது செய்யப்பட்டார். 

இத்திருத்தல்வாத அணுகுமுறையினை எதிர்த்து நடந்த போராட்டத்தின் உச்சத்தில் 1964ம் ஆண்டு கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் சிபிஐ(எம்) உருவாக்கப்பட்டது. அகில இந்திய மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற 7வது மாநில மாநாட்டில் தோழர் ஏ.என். மாநிலக்குழு உறுப்பினராகவும், 1969ல் நடந்த 8வது மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்குள் எழும்பிய திருத்தல்வாத போராட்டத்தில் எத்தகைய உறுதிமிக்க பங்கினை ஆற்றினார் என்பதை புரிந்து கொள்ள முடியும். கல்கத்தாவில் மாநாடு முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிய முக்கியமான தலைவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து காங்கிரஸ் அரசு சிறையில் அடைத்தது. இவ்வாறு கைது செய்வதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முடக்கி விடலாம் என கருதியது. இதில் தோழர் ஏ. நல்லசிவன் அவர்களும் கைது செய்யப்பட்டார். 

மாநிலச் செயலாளராக

தோழர் ஏ.என். மாநிலச் செயலாளராக 12 ஆண்டுகள் பணி யாற்றினார். தமிழ்நாட்டில் கட்சி வர்க்க, வெகுஜன அமைப்புக ளில் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அதனை செயல் படுத்துவதிலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டார். இக்காலத்தில் கட்சி சந்தித்த ஏராளமான அரசியல் பிரச்ச னைகளில் மார்க்சிய - லெனினிய கண்ணோட்டத்தில் மிகச் சரி யான நிலைபாடுகளை மேற்கொள்ளவும் அவைகள் குறித்து உள்கட்சியில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்று கருத்தொற்றுமை ஏற்படவும் மகத்தான பங்காற்றினார்.  குறிப்பாக, கட்சி 11வது மாநில மாநாட்டில் மாநிலக்குழு தயா ரித்திருந்த அரசியல் - ஸ்தாபன வேலை அறிக்கையை அவர் முன்மொழிந்தார். அன்றைய கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற விவசாயி கள் போராட்டம் தமிழகத்தை உலுக்கியது. பல்லாயிரக்கணக் கானோர் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் பல விவசாயி கள் கொல்லப்பட்டனர். இத்தகைய போராட்டம் தொடர்பாக கட்சி யின் மாநிலக்குழுவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பலமுறை விவாதித்தது. இந்த விவசாயிகள் போராட்டம் ‘நிலப் பிரபுக்களின் போராட்டம்’ என அறிவித்து இப்போராட்டத்தில் பங்கேற்காமல் எதிர்நிலை மேற்கொண்டோம்.

மேற்கண்ட மாநாட்டில் இந்த தவறை திருத்தும் வகையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சிறை சென்ற போது, பலர் துப்பாக்கிச் சூட்டில் உயிர்த்தியாகம் செய்த போது, சாதி வித்தியாசமின்றி விவசாயத் தொழிலாளர்கள் முதல் பணக்கார  விவசாயிகள் வரை பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத்த போதும் இவையனைத்தையும் தலைமை தாங்கியவர்கள் நிலப்பிரபுக்கள் என்ற நிலையிலிருந்து தான் நாம் பார்த்துள் ளோம். இதில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் சாரம், பங்கெ டுத்து கொண்ட பகுதியினர் ஆகியவற்றை நாம் பார்க்கவில்லை. இவ்வாறு நமது விவசாய இயக்கத்தில் விலை, கடன், மின் கட்டணம், பணக்கார விவசாயி, கூட்டியக்கம் இவைகள் பற்றி நமக்கிருந்த தவறான கருத்துக்களும் சேர்ந்து தான் விவசாய இயக்கத்தில் முன்னேற முடியவில்லை என ஆணித்தரமாக மாநாட்டில் தோழர் ஏ.என். விளக்கினார். இதன் மீது நடை பெற்ற விவாதத்தின் போது, அணுகுமுறையில் உள்ள குறை பாடுகளை ஏற்றுக் கொண்ட அதேநேரத்தில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு விளக்கங்களுக்கு பளீச்சென பதில் கூறினார். உதாரணமாக, விவாதத்தில் பேசிய ஒரு தோழர், இப்போது நீங்கள் கூறியதை நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம். ஆனால், அப்போதெல்லாம் விவசாய சங்க தலைவராக இருந்த தோழர் ஆர். ராமராஜ் அதை ஏற்க மறுத்து விட்டார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த, தோழர் ஏ.என்., அன்றைய நிலை யில் கட்சி நிலைபாட்டை தோழர் ஆர். ராமராஜ் சரியாகத் தான் விளக்கியுள்ளார். ஒருவேளை அவர் மாற்றிச் சொல்லி யிருந்தால் அவர் மீது அப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் என கூறினார். இம்மா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை விவசாயப் பிரச்ச னைகள் தொடர்பான ஒரு புதிய வெளிச்சத்தை கட்சிக்குள் ஏற்படுத்தியது. 

இலங்கை தமிழர் பிரச்சனை

1983 ஜூலையில் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட் டில் பெரும் புயலாக வீசியது. இலங்கையில் தமிழர்களும், இந்திய வம்சாவளி தமிழர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் ; படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டில் சகோதர உணர்வுடன் இப்பிரச்சனையில் மக்கள் கோபத்துடன் கொந்தளித்தார்கள். மாநகரங்கள், நகரங்கள், பட்டித் தொட்டிகள் எல்லாம் கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வீச்சான போராட்டங்கள், தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பின. இதனை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒரு இனவெறி பிரச்சாரமாக மாற்றியதுடன் ‘தனி ஈழம்’ அமைத்திடவும், இந்திய அரசு ராணுவத்தை அனுப்பிட வேண்டுமென குரல் ஆவேசமாக எழுப்பப்பட்டன. ஏறக்குறைய அடுத்த பல ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சனை தமிழக அரசியல் மையமான பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்ந் தது. இப்பிரச்சனையில் கட்சிக்குள்ளும், அனைத்து மட்டங்க ளிலும் வாத, பிரதிவாதங்கள் தீவிரமாக நடந்து வந்தன. இப் பிரச்சனையில் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின் போது மேற்கொண்ட நிலையினையே இலங்கை பிரச்சனையி லும் மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இத்த கைய பதற்றமான நிலையில் மேற்கண்ட வாத, பிரதிவாதங்க ளை நிராகரித்து இலங்கை தமிழர் பிரச்சனையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிலையினை நீண்ட விவாதத்திற்கு பின்னர் மாநிலக்குழு தீர்மானித்தது. ஒன்றுபட்ட இலங்கையில், தமிழ் பேசும் பிரதேசங்களுக்கு விரிவான மாநில சுயாட்சி வழங்கிட வேண்டும். இப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் எழும் இனவெறியில் நமது கட்சி மூழ்கிவிடக் கூடாது. அதேநேரத் தில் இனவெறியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாம் தனிமைப்படவும் கூடாது. ஜெயவர்த்தன அரசின் கொடுங்கோன் மையை வன்மையாக கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து கொண்டே நமது நிலையினை வற்புறுத்த வேண்டு மென தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு மேற்கொண்ட நமது நிலையினை பல அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தது டன் சிபிஐ (எம்) சிங்களர்களின் வாரிசு என்றெல்லாம் கூட புழுதி வாரி தூற்றப்பட்டது. ஆனால், கடந்த 50 ஆண்டு கால இலங்கை தமிழர் பிரச்சனையினுடைய வரலாற்றினை ஆய்வு செய்யும் எவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலையே சரியானது என்ற முடிவுக்கே வர முடியும். கட்சிக்குள் இந்த நிலையை உருவாக்குவதற்கும், இதனை விளக்கி தமிழகம் முழுவதும் கட்சி அணிகளை ஒருநிலைபடுத்துவதிலும் தோழர் ஏ.என். பங்களிப்பு அளப்பரியதாகும். 
மாநாடுகளிலும், மாநிலக்குழு கூட்டங்களிலும் எழுப்பப் படும் அனைத்து விவாதங்களுக்கும் விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதில ளிக்கும் திறன் கொண்டவர். விவாதங்களின் போது எழுப்பப் படும் தவறான கருத்தாக்கங்களை தயவு-தாட்சண்யமின்றி சுட்டிக்காட்டுவதில் வல்லவர்.  கட்சிக்குள் தனி நபர்கள் விருப்பு - வெறுப்புகள், கோஷ்டிப்போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிந்து கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்குவதில் உறுதி மிக்கவராக செயல்பட்டார். தவறு இழைக்கப்படும் போது, இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் முக தாட்சண்ய மில்லாமல் கடும் கோபத்துடன் அதனை எதிர்த்து குரல் கொடுப்பார்.

மாநாடுகளிலும், மாநிலக்குழு கூட்டங்களிலும் எழுப்பப் படும் அனைத்து விவாதங்களுக்கும் விமர்சன, சுயவிமர்சன அடிப்படையில் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பதில ளிக்கும் திறன் கொண்டவர். விவாதங்களின் போது எழுப்பப் படும் தவறான கருத்தாக்கங்களை தயவு-தாட்சண்யமின்றி சுட்டிக்காட்டுவதில் வல்லவர்.  கட்சிக்குள் தனி நபர்கள் விருப்பு - வெறுப்புகள், கோஷ்டிப்போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிந்து கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்குவதில் உறுதி மிக்கவராக செயல்பட்டார். தவறு இழைக்கப்படும் போது, இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் முக தாட்சண்ய மில்லாமல் கடும் கோபத்துடன் அதனை எதிர்த்து குரல் கொடுப்பார்.

மனித உரிமை போராட்டங்களில்

கடலூர் மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டுகளில் காவல் நிலைய கொடுமைகளை எதிர்த்து தொடர்ச்சியான போராட் டங்கள் நடைபெற்றன. அண்ணாமலை நகர் காவல்நிலை யத்தில் நந்தகுமார் கொடூரமாக தாக்கி கொலை செய்யப் பட்டதுடன் அவருடைய மனைவி கும்பல் பாலியல் வன்முறை க்கு உள்ளாக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்திய துடன் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் நடத்தி குற்ற மிழைத்த காவலர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜெய்பீம் திரைப்படத்தின் கருப்பொருளான கம்மாபுரம் காவல்நிலை யத்தில் பழங்குடி வகுப்பைச் சார்ந்த ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தொலைதூரத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. ராஜாக்கண்ணுவின் குடும்பத்தினர் பெண்கள் உட்பட கொடும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலையிட்டு பலகட்ட போ ராட்டங்களை நடத்தியதுடன் நீண்ட நெடிய சட்டப் போராட் டத்தை நடத்தியதால் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. காவல்நிலையத்தில் படுகொலை செய்யப் பட்ட புலியூர் செல்வம், முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத் தில் வசந்தா பாலியல் வல்லுறவு , படுகொலை போன்ற பல காவல்நிலைய கொடுமைகளை எதிர்த்து பலகட்ட போராட்டங் கள் நடைபெற்றன. நடைபெற்ற இப்போராட்டங்களில் குற்றம் இழைத்த காவலர்கள் தப்பித்துக் கொள்வதற்கு வழக்குகளை இழுத்தடிப்பது, சாட்சிகளை மிரட்டுவது, கட்சியின் முன்னணி தோழர்களை மிரட்டுவது போன்ற இவர்களின் முயற்சிகளை எதிர்த்து நடைபெற்ற தொடர்ச்சியான போராட்டங்களையும், நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும் நடத்துவதற்கு ஒவ்வொரு நேரத்திலேயும் தலையிட்டு வழிகாட்டி இப்போராட் டங்களை தொய்வின்றி நடத்திட பெரும்பணியாற்றியவர் தோழர் ஏ.என். அவர்கள்.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த வாச்சாத்தி பழங்குடி பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு முன் கை எடுத்து செயல்பட்டதோடு இறுதி வரை வழிகாட்டியவர் தோழர் ஏ.என்.   நீண்ட போராட்டத்தின் விளைவாக வரலாறு காணாத அளவிற்கு 200க்கும் மேற்பட்ட வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. கோவை அருகில் சின்னாம்பதி கிராமத்தில் மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவை எதிர்த்தும், மக்கள் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறை அநியாயத்தை எதிர்த்து கட்சி யின் சார்பில் நடைபெற்ற போராட்டத்திலும் இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நாலுமூலைக்கிணறு கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக் கிச்சூடு மற்றும் தடியடியை கண்டித்தும், அம்மக்களது வீடுகள் சூறையாடியதை எதிர்த்தும் கட்சியின் சார்பில் உறுதிமிக்க போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி இம்மக்களுக்கு நிவாரணமும் பெற்றுத் தரப்பட்டது. இக்காலத்தில் நடைபெற்ற இதுபோன்ற எண்ணற்ற மனித உரிமைப் பறிப்பு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, காவல்துறையின் அடக்குமுறை உள்ளிட்டவைகளை எதிர்த்து களத்தில் இறங்கி போராடியது மட்டுமல்ல, பலகட்ட சட்டப் போராட்டங்களை நடத்தியதின் மூலம் தமிழகத்தில் கட்சிக்கு செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது. இப்போராட்டங்கள் அனை த்திற்கும் அப்போது மாநில செயலாளராக பணியாற்றிய தோழர் ஏ.நல்லசிவன் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய அடுக்கடுக்கான போராட் டங்கள் நடந்த போது கட்சி தோழர்கள் மீது காவல்துறை மற்றும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் தாக்குதல் தொடுக்கும் நேரங்களில் சிங்கமென சீறி எழுந்து அவைகளை தவிடுபொடி யாக்குவதில் வல்லவராக திகழ்ந்தார். 

மாநிலக்குழு அலுவலகம்

கட்சி செயல்பாட்டில் அலுவலகங்கள் மையமான பங்கு வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவல கம் மதுரையிலிருந்து செயல்பட்டதை மாற்றி சென்னையில் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வட சென்னை மாவட்டக்குழு அலுவலகத்திலும், ஒரு குறிப்பிட்ட காலம்வரை சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் செயல்பட்டது. ஒரு நிரந்தர அலுவலகம் வேண்டும் என்ற அடிப்படையில் மாநி லம் முழுவதும் நிதி திரட்டி முதல்முறையாக திருவல்லிக்கேணி யில் கட்டிடம் வாங்கி அலுவலகம் திறக்கப்பட்டது. நாளடைவில் அது செயல்பாட்டிற்கு போதுமானதல்ல  என்ற சூழ்நிலையில் தற்போது தி.நகரில் உள்ள அலுவலகம் கட்டிடத்துடன் கூடிய இடத்தை விலைக்கு வாங்கி முழுமையான கட்டமைப்புகள் உரு வாக்கப்பட்டது. இம்மகத்தான பணியை நிறைவேற்றுவதில் விடாப் பிடியாக செயல்பட்டு சாதித்தவர் தோழர் ஏ.என். என்றால் மிகை யாகாது. தமிழகத்தில் கட்சிக்கு வலுவான கட்டமைப்பையும், மக்கள் மத்தியில் பரவலான முகத்தோற்றத்தையும் உருவாக்கிய காலம் தோழர் ஏ.என். மாநிலச் செயலாளராக பணியாற்றிய காலமே. தோழர் ஏ.என். அவர்களது பங்களிப்பினை எழுதிட பக்கங்கள் போதாது. மார்க்சிய - லெனினிய தத்துவார்த்த தெளிவு, மக்கள் இயக்கப்போராட்டங்களை கட்டமைப்பது, அமைப்பு ரீதியாக செயல்பாட்டை முன்னெடுப்பது, அனைத்து மட்டத்திலும் கூட்டுத் தலைமையை உருவாக்குவது, அடக்கு முறை காலங்களில் போர்க்குணத்துடன் செயல்படுவது போன்ற பல முத்திரைப் பதிக்கும் பண்புகளைக் கொண்டவர். தோழர்களின் தவறுகளை அழுத்தமாக சில சமயங்களில் வெகுண்டெழுந்து கோபத்தோடு சுட்டிக்காட்டும் அதேநேரத்தில் தோழர்களுக்கு ஏற்படும் சிறு துயரச் சம்பவங்களைக் கூட கேள்விப்பட்டவுடன் கசிந்துருகும் மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார் தோழர் ஏ.என்.