articles

img

ஆர்எஸ்எஸ் தலைவர் அரற்றுவது ஏனோ?

ர ாஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் அமைப்பி னுடைய சர்சங் சாலக் (அதாவது ஆர்எஸ் எஸ் தலைவர்) மோகன் பகவத், அந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நாளான விஜயதசமி அன்று நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 1925ஆம் ஆண்டு இந்த அமைப்பு கே.பி.ஹெட்கேவர் உள்ளிட்டவர்களால் விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டது. அந்த நாளில் ஆர்எஸ் எஸ் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். 

சங்கர் மகாதேவனின் உருட்டல்

ஒவ்வோராண்டும் யாரையாவது அழைத்து வந்து பேசச் சொல்வார்கள். இந்தாண்டு திரைப்பட பின்னணி பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் நெகிழ்ந்து போய், அகண்ட பாரதம் நம் சித்தாந்தம், நம் பாரம்பரியம் என்று அண்டாவை உருட்டியிருக்கிறார். அவர் நல்ல  பாடகர். அவரையும் எப்படியோ வளைத்திருக்கி றார்கள். 

இந்தக் கூட்டத்தில் மோகன் பகவத் பேசும் போது, ஜி-20 மாநாட்டை தலைமையேற்று இந்தியா நடத்தி யதன் மூலம் நம் விருந்தோம்பல் பெருமையைக் கண்டு பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் வியப்பில் ஆழ்ந்து போனார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் வரும் வழக்கமான ஒன்று. கடந்தாண்டு உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோ னேசியா தலைவராக இருந்தது. வரும் ஆண்டு இடதுசாரிகள் ஆளும் பிரேசில் தலைமை ஏற்றுள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கு வதையொட்டி இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு போல பாஜகவினர் பெரிதுபடுத்தினர். அதைத்தான் ஆர்எஸ்எஸ் தலைவரும் செய்கிறார்.

இந்த மாநாட்டிற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மாநாடுகளின் போது வழக்கமாக கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்; ஆனால் இப்போது அதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார் என்று வியட்நாமுக்குப் போய் பேட்டி கொடுத்தார். இதுவும் கூட விருந்தோம்பலின் ஒரு பகுதிதான் போலும்.

வள்ளலார்  சொன்னதை ஏற்கிறதா?

மோகன் பகவத் தனது உரையில், வடலூர் இராம லிங்க அடிகளின் 200ஆவது பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட்டது என்று குறிப்பிட்டு ஏழைகளுக்கு அன்னசாலை திறந்த துறவி அவர் என்றும், சமத்துவ மின்மையை ஒழிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த வர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளதைப் போல வள்ளலார் சமத்துவ மின்மையை ஒழிக்க தன்னுடைய வாழ்நாளை அர்ப்ப ணித்தவர் தான். ஆனால் சாதிய அடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை மறுத்து விட முடியாது.

வள்ளலார் மூட்டிய அடுப்பு குறித்தும் ஆர்எஸ் எஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார். வடலூரில் எரியும் அடுப்பு மக்களின் பசியை மட்டுமே அறியும்; அதைப் போக்கும். ஆனால் வர்ணாசிரமத்தின் பெயரால் சக  மக்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது கூட மனுநீதியின் பெயரால் தடுக்கப்பட்டது என்பதை ஆர்எஸ்எஸ் தலைவர் அறியாதவர் அல்ல.

‘சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே’ என்று பாடியவர் வள்ளலார். இதை ஆர்எஸ்எஸ் ஏற்கிறதா? 

வர்ணாசிரம தர்மத்தை பாதுகாப்பதுதான் எங்கள் நோக்கம் என்கிறது ஆர்எஸ்எஸ். ஆனால் ‘வேத ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர், வேத ஆக மத்தின் விளைவறியீர்- சூதாகச் சொன்னதல்லால் உண்மைவெளி தோன்ற உரைக்கவில்லை என்ன பயனோ இவை’ என்று பாடியவர் வள்ளலார். ஆனால் அவரையும் தங்களுடைய சித்தாந்தத்துக்குள் இழுத்து செரிக்கப் பார்க்கிறது ஆர்எஸ்எஸ்.

ஆர்எஸ்எஸ்சினால் வழிநடத்தப்படும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து பொதுத்துறைகளையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சில காலத்திற்கு முன்பு சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என்ற அமைப்பைக் கூட வைத்திருந்தது. ஆனால் இப்போது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, நாட்டின் சுயசார்பையும், இறையாண்மை யையும் அழித்து வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் இதையெல்லாம் ஏதோ இந்திர லோகத்தில் வசிப்பவர் போலவும், எதுவும் தெரியாதவர் போலவும் சுதேசி வளர்ச்சிப் பாதையை நாம் பின்பற்றுவது காலத்தின் தேவை என்றும் கதையளக்கிறார்.

மார்க்சிஸ்ட்டுகள் மீது பாய்ச்சல்

இந்தாண்டு தனது உரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மார்க்சிஸ்ட்டுகளையே பிரதானமாக குறி வைத்திருக்கிறார். தங்களது அகண்ட பாரத ஆசைக்கு மார்க்சியம் எனும் மனிதத் தத்துவம் குறுக்கே நிற்ப தால் மார்க்சிஸ்ட்டுகள் மீது பாய்ந்து பிறாண்டி யுள்ளார். 

‘உலகில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை சடங்கு கள் மற்றும் கட்டுப்பாடுகளை அவர்கள் எதிர்க்கின் றனர்’ என்று ஆதங்கப்படுகிறார் பகவத். அவர் சொல்லும் ஒழுங்குமுறை என்பது சாதிய ஒடுக்கு முறையே ஆகும். முன்பு போல மொத்த சமூகத்தை யும் ஆதிக்க சக்திகள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதால்தான் பகவத் இப்படி புலம்பித் தவிக்கிறார். 

‘வெகு சிலர் முழு மனித இனத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் அராஜகத்தையும், குழப்பத்தையும் ஊக்குவிக்கின்றனர். ஊடகங்கள் மற்றும் கல்விக் கூடங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதன் வாயிலாக தேசத்தின் கல்வி, கலாச்சாரம், அரசியல், சமூக குழப்பம் மற்றும் சீர்கேட்டிற்கு வழி வகுப்பதே  அவர்களின் திட்டம். இத்தகைய சூழலில் திரிக்கப் பட்ட மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வாயிலாக பயம், குழப்பம், வெறுப்பு ஆகியவை எளிதில் பரவுகின்றன’ என்று மோகன் பகவத் ஆர்எஸ்எஸ் பரிவாரம் எதையெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் மார்க்சிஸ்ட்டுகள் மீது பழியாக சுமத்தியுள்ளார். இந்த உரையை அவர் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு படித்தால் அப்படியே பொருந்தும்.

புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாட்டை குருகுல, குலக்கல்வி முறைக்கு கொண்டு செலுத்த முயல்வது யார்? ஒன்றிய ஆட்சியதி காரத்தை பயன்படுத்தி அனைத்து ஊடகங்களையும் வளைத்துப் போட முயல்வது யார்? ஜனநாயகத்திற் காக துணிந்துநிற்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்க முயல்வது யார்? வாழ்க்கையோடு மல்லுக் கட்ட முடியாமல் தவிக்கும் மக்களை மதத்தின் பெயரா லும், பழமையின் பெயராலும் திசை திருப்ப முயல்ப வர் யார்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் ஆர்எஸ்எஸ் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும்.

ஆர்எஸ்எஸ்சின்  கலாச்சார தேசியம் எது?

மார்க்சிஸ்ட்டுகள் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் பன்முக பண்பாட்டை முன்வைக்கி றார்கள். நம்நாட்டின் உயரிய பன்முகப் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என போராடுகின்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ் முன்வைக்கும் கலாச்சார தேசி யம் என்பது அனைத்தையும் ஒற்றைத் தன்மைக்குள் அடைக்கத் துடிப்பது, மனிதர்களிடையே பேதம் கற்பிப்பது, பல மொழிகள் பேசும் இந்தியாவில் பன் மைத்தன்மையை நிராகரித்து சமஸ்கிருத மேலா திக்கத்தை நிறுவத் துடிப்பதுதான் ஆர்எஸ்எஸ் கருத்தி யல். மாறுதல் ஒன்றே மாறாதது என்பதே மார்க்சியம். ஆனால் வர்ணாசிரம அதர்மத்தால் உருவாக்கப்பட்ட அநீதிகள் எதுவும் மாற்ற முடியாதவை, மாற்றப்பட கூடாதவை என்பதே இவர்களது நிலைபாடு.

ஆர்எஸ்எஸ் தன்னுடைய முதன்மையான எதிரிக ளாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூ னிஸ்ட்டுகளையே வரையறுக்கிறது. ஏற்கெனவே இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்து வரும் அந்த அமைப்பு தற்போது தங்களது நோக்கங்களுக்கு இடையூறாக உள்ள மார்க்சியத்தின் மீது அதிகமான தாக்குதலை தொடுக்க முனைந்துள்ளது. பாசிசத் தன்மை கொண்ட வர்கள் மார்க்சியத்தை வெறுப்பது இயல்பான ஒன்றே.

மார்க்சிஸ்ட்டுகள் மீது இவ்வாறு சேற்றை வாரி வீசும் போது மணிப்பூர் நிலைமைக்கு யார் காரணம் என்ற கேள்வி எழும் அல்லவா? அந்தக் கேள்வி எழு மானால் இரட்டை என்ஜின் அரசுகளால் உருவாக் கப்பட்ட இன, மத பகைமைக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழும் அல்லவா? இதை புரிந்து கொண்ட மோகன் பகவத் வெளிநாட்டு சக்திகளின் மீது பழியைத் தூக்கிப் போட்டிருக்கிறார். 

வழக்கமாக ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்றும், ஓட்டு அரசியலில் ஈடுபடாத அமைப்பு என்றும் கம்பி கட்டும். இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ள பதற்றத்தால் மோகன் பகவத் வெளிப்படையாகவே இறங்கி ‘நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் முன்னேற்றம் குறித்து சிந்தித்து நாம் ஓட்டளிக்க வேண்டும்’ என்று விஜயதசமி உரையை நிறைவு செய்திருக்கிறார். பொதுவாக சிந்தித்து வாக்களித்தாலே யாரும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதிலும் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகி யவை குறித்து சிந்தித்தால் இவற்றுக்கெதிராக இருக்கிற பாஜகவுக்கு வாக்களிக்கவே மாட்டார்கள்.