சிதம்பரம் இரவிச்சந்திரன்
வாய்ப்புக் கிடைத்தால் சிலந்திகளும் கனவு காணும். ஆம். உண்மைதான். சிலந்தி கள் தூக்கத்தில் கனவு காண்கின்றன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு கள் கூறுகின்றன. தாவிக்குதிக்கும் வகை யைச் சேர்ந்த சிலந்திகளின் (jumping spiders) கண்களில் பூனை, நாய்களில் காணப்படுவது போல தூக்கத்தின் போது அசைவுகள் (rapid eye moments REM) கண்டறியப்பட்டுள்ளன. எர்க் யூட்டா (Ercuata) என்றும் அழைக்கப் படும் இவை அப்போது கால் அசைவு கள் (leg curlings) கண் அசைவுகளை வெளிப்படுத்துகின்றன என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கத்தின்போது கெட்ட கனவுகள் வரும் என்ற பயம் இனி மனிதர்களுக்கு மட்டுமில்லை. மனித கண்களின் இத்த கைய அசைவுகளின்போதே கனவு காணுதல் தீவிரமாக நிகழ்கிறது. சிலந்தி களும் கனவு காண்கின்றன. ஜெர்மனி, இத்தாலி மற்றும் யுஎஸ் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வுகளை நடத்தியது. அகச்சிவப்புக்கதிர் புகைப்படக் கருவிகளைக் கொண்டு நடந்த இந்த ஆய்வுகளில் கனவு காணும்போது வழக்கமாக மற்ற உயிரினங்களின் கண்களில் தோன்றும் தீவிர அசைவுகள் இவற்றின் விழித்திரையிலும் குறிப்பிட்ட இடைவேளைகளில் தோன்றுவதை விஞ்ஞானிகள் கண்டனர். அப்போது கால்கள் அடிக்கடி அசைவது, கால் மடிப்புகளை மடித்து விரிப்பது போன்ற செயல்களில் அவை ஈடுபடுவது தெரிந்தது. இந்த ஆய்வு முடிவுகள் சிலந்திகள் மனிதர்கள் போல கனவு காண்கின்றன என்பதை உறுதி செய்யவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கண்களால் காணக்கூடிய கனவு களை எவ்வாறு இவை காண்கின்றன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. நாய்களும் பூனைகளும் கனவு காண்பது போல இவற்றின் கண், கால் அசைவுகளும் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்று ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸ் (Konstanz) பல்கலைக் கழக உயிரியலாளர் டேனியெல்லா ரோஸ்லர் (Daniela RoSler) கூறுகிறார்.
அதிர்வுகளால் உணரும் ஆற்றல்
மனிதர்கள் போலவே இந்த உயிரினங் கள் கண்களால் கனவு காண்கின்றனவா என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று அவர் புகழ்பெற்ற சயிண்டிஃபிக் அமெரிக்கன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனங்களுக்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார். இவை அதிர்வுகள் மூலம் கனவு காணும் அனுபவத்தைப் பெறலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் அறிவியல் நேஷனல் அகாடமி (Procee dings of theAcademy of Sciences) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை கனவுகள் பற்றிய ஆய்வு கள் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் அரிதாக பூச்சிகள் போன்ற தரையில் வாழும் விலங்குகளில் நடைபெற்றுள் ளது. அசையும் தன்மையுடைய கண்கள் இத்தகைய உயிரினங்களில் மட்டுமே பரிணாமரீதியில் உருவாகியுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த வகை சிலந்திகளும் இத்திறனைப் பெற் றுள்ளது இப்போது கண்டறியப்பட் டுள்ளது.
ஒருங்கிணைப்புத் திறன்
இந்த சிலந்திகள் மிகச்சிறந்த உடல் ஒருங்கிணைப்புத் திறனைப் பெற்றுள்ளதால் இவை கனவு காணும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ப்ளோரிடா பல்கலைக்கழக பூச்சியியல் துறை நிபுணர் மற்றும் இவ்வகை சிலந்தி களின் நடத்தை மற்றும் உடல் ஒருங்கிணைப்பு குறித்த ஆராய்ச்சியில் நிபுணர் லிசா டெய்லர் (Lisa Taylor) கூறுகிறார். இவை பகலில் மிக சுறுசுறுப்பாக இயங்குகின்றன. எப்போதும் இடம் விட்டு இடம் நகர்ந்துகொண்டிருக் கின்றன. கண்கள் வழியாக எப்போ தும் தகவல்களைப் பெறுகின்றன. உடலைச் சுற்றிலும் மெல்லிய முடி காணப் படுகிறது. அதிர்வுகளை உணர்கின்றன. கேட்கும் சக்தியும் உள்ளது. இதனால் இவற்றின் மூளையில் ஏராளமான தக வல்கள் துணைப்புலன்கள் (tools) மூலம் எப்போதும் சென்றுகொண்டிருக் கின்றன. இரவில் பட்டு போன்ற நூலிழை கள் கொண்டு உருவாக்கிய வலைக்குள் போய் ஓய்வெடுக்கின்றன. பெற்ற தகவல்களை பகுத்தறிந்து உணர்கின்றன. அதனால் இவை இரவில் கனவு காண்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் வியப்பு ஒன்றும் இல்லை என்று லிசா கூறுகிறார். இவை கனவு காண்பதாக இருந்தால் இவற்றின் கனவு கள் எது பற்றியதாக இருக்கும் என்பது பெரும் வியப்பிற்குரிய வினா. இவை உண்மையிலேயே தூங்குகின்றனவா என்பதை விஞ்ஞானிகள் வலுவாக உறுதி செய்துள்ளனர். இவற்றின் கால் அசைவுகள், மடிக் கும் விதம், கண் அசைவுகள் ஆகியவை ஒவ்வொருமுறையும் வெவ்வேறாக அமைந்துள்ளன. இது கனவில் வெளிப் படுத்தப்படும் வெவ்வேறுவகையான உணர்வுகளை காட்டுவதாக இருக்க லாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்ற னர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பூட்டு வதாக இருந்தாலும் விலங்குகள் குறித்த மனிதனின் புரிதலில் குறிப்பாக சிலந்திகள் பற்றிய ஆய்வில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.