திருப்பூர், அக். 9 - திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி குண்டு வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள் ளது. விபத்து நடைபெற்ற செவ்வா யன்று ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த நிலை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை புதனன்று உயிரிழந்தார். செவ்வாய் அன்று நடைபெற்ற வெடி விபத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைக ளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டிருந்த 6 வயது குழந்தை நிரஞ்சனா உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் வெடிக் காமல் சிதறி கிடந்த 50 கிலோவிற்கு மேல் இருந்த வெடிபொருட்கள், வெடிப்பொருட்கள் தயாரிக்க தேவையான அலுமினியம் டை ஆக்சைடு, பொட்டாசியம் அயோ டைடு, சாக்கோள் என 100 கிலோ வுக்கு மேலான ரசாயனங்கள் உள் ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றி சென்றனர். போலிசாரின் விசாரணையில் சரவணக்குமார் நம்பியூரில் வைத் துள்ள கடை மற்றும் வெடிப்பொ ருட்களின் குடோனுக்கு 2023 டிசம் பர் மாதத்துடன் உரிமம் காலாவதி யான நிலையில் அதனை புதுப் பிக்க மீண்டும் விண்ணப்பித்துள் ளார் என்று தெரியவந்துள்ளது. ஆனால் பாண்டியன் நகர் பகுதியில் வெடி உற்பத்தி செய்வதற்கான எந்த அனுமதியும் பெறவில்லை. நம்பியூர் இருகாலூரில் உள்ள சர வணக்குமாருக்கு சொந்தமான குடோனை நம்பியூர் வருவாய் வட் டாட்சியர் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கெளசல்யா ஆய்வு மேற்கொண்டு வருகின் றனர். இருவர் கைது திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீசார் வெடிபொருள் சட்டம் பிரிவு 3 (உயிர் அல்லது உட மைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிவைத்தல்), 5ஏ (சந்தேகத்திற்கு இடமான சூழ்நி லையில் வெடிபொருட்களை தயா ரித்தல் அல்லது வைத்திருந்த குற்றம்) 9பி (உரிமம் இல்லாமல் வெடிபொருள் வைத்திருப்பது, அல்லது ஏற்றுமதி, இறக்குமதி செய்வது) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கட்டிட உரி மையாளர் கார்த்திக் மற்றும் நம்பியூ ரில் நாட்டு வெடி குண்டு தயாரிப்பு கடை வைத்துள்ள சரவணக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பாஜக உறுப்பினர்? வெடி விபத்து நடந்த வீட்டின் உரிமையாளரான கார்த்திக் வீட் டில், பாரதிய ஜனதா கட்சியின் கார்த்திக் பெயரிடப்பட்ட வடக்கு ஒன்றிய அணி மாநாடு என அடை யாள அட்டை ஒன்று இருந்துள் ளது. இதன் அடிப்படையில் இவர் பாஜகவில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. விபத்து நடந்த சமயத்தில் வெடி மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சம்பவத்திற்கு பின்பு தலைமுறை வான ராமசாமி மற்றும் சம்பூர்ணம் ஆகிய இரண்டு பேரையும் நம்பியூ ரிலிருந்து திருப்பூர் போலீசார் அழைத்து வந்து திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்பு அவர்களிடமும் விசா ரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். வெடி விபத்து நடந்த பாண்டி யன் நகர் பொன்னம்மாள் வீதியில் அருகில் உள்ளப் குடியிருப்புகள் மற்றும் பனியன் கம்பெனியில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத் தப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இரண்டாவது நாளா கியும் வெடி விபத்து நடந்த போது வெடிப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தபோது உடல் சிதறி உயிரிழந்த விஜயாவின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தது. தூய் மைப் பணியாளர்கள் உடல் பாகங் களை அப்ப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வெடிவிபத்து நடைபெற்ற வீட் டிற்கு அருகில் வசித்து வந்த சுப்பு லட்சுமி கூறுகையில் நேற்று வெடி விபத்து நடந்த போது முடியாமல் படுத்திருந்த கணவரை ஸ்ட்ரெச் சரில் வைத்து வெளியே தள்ளி வந் தேன். அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தெருமுனைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். பின்னர் வந்து பார்த்தபோது இச்சம்பவம் நடந்தது தெரிந்தது. இரண்டு நாட்களாகியும் இன் னும் மின் இணைப்பு வழங்க வில்லை. அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளோம். வீடு பழுத டைந்துள்ளது, அதனை சரி செய்து தர வேண்டும் எனவும் தெரிவித் தார். வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மளிகை கடை நடத்தி வந்த லட்சுமி கூறுகையில் , வழக் கம் போல கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன் திடீரென பயங் கர வெடி சத்தம் கேட்டது. சுதாகரிப் பதற்குள் சுவர் என் மீது விழுந்து என்னை அழுத்தி விட்டது. அப் போது மளிகை கடையில் பொருட் கள் வாங்க குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண் தள்ளி சென்று விட்டார் என நினைத்தேன் ஆனால் குழந்தை உயிர் இழந் தது இன்று தான் தெரியும். கடைக் குப் பின்னால் என்ன நடக்கிறது என எனக்கு தெரியாது. மளிகை கடைக்கும் வீட்டிற்கும் தனித்தனி வாசல்கள் உள்ளன அதனால் பின்புறம் செல்ல வேண்டிய அவசி யம் இல்லை. அதனால் பின்னால் என்ன செய்து கொண்டிருக்கிறார் கள் என எனக்கு தெரியவில்லை என்றார்.