கொரோனா தொற்று நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.இதனால் நமது பொது சுகாதார துறை தாங்கமுடியாத நிலைக்கு வந்திருக்கிறது
அரசு மற்றும் உள்ளாட்சி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களும் மருந்துகளும் போதவில்லை என கூறுகிறார்கள்.
பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிநாளர்(வார்டு பாய்) ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை ஒட்டிஅவர் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டார்.
இது இணை மருத்துவத் துறை ஊழியர்களின் அவல நிலையை வெளிப்படுத்தி இருக்கிறது.
பலபேர் மழைக்கு அணிந்துகொள்ளும் கோட்டை பாதுகாப்பு கவசமாக அணிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள்.
முன்னணியில் நின்று பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களும் பரிசோதனை பெட்டகங்களும் வென்டிலேட்டர் களும் அவசியம். அவை இருந்தால் தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
மத்திய அரசும் மாநில அரசும் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.தனியார் துறையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நேரம் இது.
தனியார் துறையிலிருந்து உதவிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. டாட்டா குழுமம் ரூபாய் ஆயிரத்து 500 கோடி தருவதாக உறுதி அளித்து இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்களையும் பரிசோதனை கருவிகளையும் வாங்குவதற்கு இந்த பணத்தை உறுதியளித்திருக்கிறார்கள்.
ஐடிசி ரூபாய் ஆயிரத்து 500 கோடி தருவதாக வாக்களித்து இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரதமரின் பிஎம் கேர் நிதிக்கு ரூபாய் 500 கோடிகொடுப்பதாக அறிவித்திருக்கிறது
ஆனால் தனியார் நிறுவனங்கள் இதுவரை கொடுத்திருக்கும் தொகை 2700 கோடி ரூபாய் மட்டுமே. எதிர்கொள்ள வேண்டிய பணிகளோடு ஒப்பிட்டால் இது மிக மிக சிறிய தொகை.
தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். உற்பத்தி நின்று போனாலும் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த வகையில் எல் அண்ட் டி நிறுவனம் தினக் கூலி தொழிலாளிகளுக்கு சம்பளம் தருவதற்காக ரூபாய் 500 கோடியை ஒதுக்கி இருப்பது பாராட்டத்தக்கது.
கொரானா வைரசை எதிர்கொள்வதற்கு போதுமான நிதி இல்லை என்பது சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதிக் குறைவை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்தே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் அளவிற்கே கடந்த சில வருடங்களாக ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச சராசரி 7.4 சதவீதமாகும். இதோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இது மிக மிகக் குறைவு.
கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு கூடுதலாக ஒதுக்குவதை உத்தரவாதப்படுத்த லாம்.
கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பல சர்வதேச நிறுவனங்கள் நேரடியாக மருத்துவ உபகரணங்கள் விநியோகிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன .
அலிபாபா ஆப்பிரிக்காவிற்கு 11 லட்சம் பரிசோதனை பெட்டகங்களையும் 60 லட்சம் முக கவசங்களையும் 60000 பாதுகாப்பு உடைகளையும் அனுப்பி வைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள மிகப்பெரிய மருந்து கம்பெனியான ரோஜ் நாலு லட்சம் பரிசோதனை பெட்டகங்களை ஒரு வாரத்திற்குள் உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
லூயிஸ் உய்ட்டன் என்கிற படாடோப நாகரீக வடிவமைப்பு நிறுவனம் சானிடைசர் உற்பத்திக்கு மாறிருக்கிறது. பிற நாடுகளில் உள்ள தங்களைப் போன்ற நிறுவனங்கள் செய்வதை கணக்கில்கொண்டு இந்திய நிறுவனங்கள் தங்களுடைய சக்திகளை அத்தியாவசிய மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முனைய வேண்டும்