“ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும்”
சிவகங்கை, பிப்.28- தேவகோட்டை நகரில் உள்ள சேர்மன் மாணிக்க வாச கம் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தி னார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். எஸ்.எம்.ஏ.ஆர். அறக்கட்டளை நிர்வாகி அரு ணாச்சலம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி சுவாமிநாதன் பேசுகையில், “கல்வியுடன் நல்ல ஒழுக்கமும் அவசியம். பிறர் கஷ்டப் படும் போது உதவி செய்யும் மனப்பான்மை வேண்டும். படித்த பள்ளியை எப்போதும் மறக்கக் கூடாது” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற லேகாஸ்ரீ, நந்தனா, ரித் திகா, யோகின், அஜய் ஆகிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை வள்ளிமயில் நன்றி தெரிவித்தார்.
