தமிழகம்

img

சென்ற ஆண்டு சிந்திய ரத்தத்தால் மேலும் சிவந்து கிடக்கிறது தேரிக்காடு -ஆர்.பாலகிருஷ்ணன்

சென்ற ஆண்டு

சிந்திய ரத்தத்தால்

மேலும் 

சிவந்து கிடக்கிறது 

தேரிக்காடு.

வரலாற்றின் எச்சமாய்

கொற்கையில் கொஞ்சம்

மிச்சம் இருக்கிறது.

ஆதிச்சநல்லூரில்

தாமிரம் வெட்டிய

பழந்தாதுக் குழிகள்.

முதுமக்கள் தாழிகளில்

ஏதோ முணுமுணுப்பு

கேட்கிறது.

நமக்குத் தான்

குறைந்திருக்கிறது

கேட்கும் திறன்.

தூத்துக்குடியில்

'முத்து' முத்தாக

தாமிரக்கண்ணீர்...

ரத்தச் சகதியில்...

கொற்கை இன்னும்

சாகவில்லை‌.

வரலாற்றின்

கருவறையில்...

பொய்இருட்டை மறுக்கும்

சுடர் முத்தாய்...

ஆர்.பாலகிருஷ்ணன்

;