செவ்வாய், டிசம்பர் 1, 2020

tamilnadu

img

அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்ததை ஒட்டி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் சென்ற வேளாண்மைத்துறை அமைச்சர்துரைக்கண்ணு, விழுப்புரத்தை நெருங்கியபோதுதிடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 13ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு, எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தது.இதையடுத்து, (அக். 25) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டு நலம் விசாரித்தார்.

அமைச்சரின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து, தற்போது அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர்.அமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில் மூத்த அமைச்சர்கள்  தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் மருத்துவமனைக்கு,  சென்று மருத்துவர்களிடம் நலம் விசாரித்தனர்.

;