தமிழகம்

img

மாநகராட்சி தொடர்பு கொண்டால் விடுதிகளை காலி செய்க!

சென்னை:
மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே விடுதி அறைகளைக் காலி செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதிகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றம் செய்வதற்கு சென்னை மாநகராட்சிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.இதுதொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான தும் பல்வேறு மாணவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விடுதிகளை காலி செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பி வந்த நிலையில், பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

அதில் மாநகராட்சி தரப்பில் இருந்து விடுதி அறைகளைக் காலி செய்வது தொடர்பாக ஏதேனும் கேட்டால் மட்டுமே அது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பான பயணத்துக்கு மாநகராட்சி மேற் கொள்ளும் ஏற்பாடுகளில் திருப்தி இல்லையென்றால் விடுதிகளைக் காலி செய்ய ஒப்புக்கொள்ள வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக விடுதிகளில் தங்கி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

;