வியாழன், டிசம்பர் 3, 2020

tamilnadu

img

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு  வீட்டிலேயே பராமரிப்பு சேவை

சென்னை:
 பெருநகரங்களில் தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

இந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சுகாதார செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது உள்ளது. மேலும் வைரஸ் தொற்று மக்களிடையே அதிவேகமாக பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவ கட்டமைப்புகள் என்பது நமது நாட்டில் பெரும் சவாலாக உள்ளது.இதை கருத்தில் கொண்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 70 முதல் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளே உள்ள நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல், அவர்களுக்கு வீட்டிலேயே தேவையான மருத்துவ, சுகாதார பராமரிப்பு சேவை தேவைப்படுகிறது. இதற்கான `கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு சேவை` திட்டத்தை கிளெனீகிள்ஸ் குளோபல் மருத்துவமனையும் கான்டினென்டல் மருத்துவமனை இணைந்து அறிமுகம் செய்துள்ளதாக மருத்துவமனையின் திட்ட இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

;