வியாழன், டிசம்பர் 3, 2020

tamilnadu

img

விமான நிலையம் : இணையதள சேவை முடக்கம்

சென்னை:
சென்னை விமான நிலையத்தில் திங்களன்று காலை 5 மணி அளவில் ஏற்பட்ட இணைய தளசேவை முடக்கம் காரணமாக அங்குள்ள பணிகளில் கடும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விமானங்களின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரிய முடியாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிஉள்ளனர். இந்த விவரங்களை விமான நிலைய அதிகாரிகள் துண்டுச் சீட்டில் எழுதி தந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் உரிய நேரத்திற்கு இயக்க முடியாமல் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

;