பிரிவு
தற்போதைய செய்திகள்
276 ஆவது இலக்கியச் சந்திப்பு
2 hours before • Update
கோவையில் தமுஎகச சார்பில் 276-வது இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. இதில் சம்சுதீன் ஹீராவின் மர்யம் நாவல் மற்றும் சமத்துவனின் கவிதை தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டன. திரளான எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

தாராபுரம் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகளை முடக்குவதா? கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு
2 hours before • Update
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தேர்தல் பணிகளை முடக்கும் முயற்சியாக ஆளும் அரசு செயல்படுவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா
2 hours before • Update
தருமபுரி பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 143வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, மாணவர்களுக்குப் போட்டித் தேர்வு புத்தகங்களை வழங்கினார்.

சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
2 hours before • Update
பள்ளிபாளையத்தில் போலீசார் கரடி பொம்மைகள் மூலம் நூதன முறையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அணிந்து வந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தெப்பக்குளத்தில் குப்பைகள் அகற்றும் பணி
2 hours before • Update
திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்களை தன்னார்வலர்கள் அகற்றினர். 'நம்ம திருச்செங்கோடு' அறக்கட்டளை சார்பில் இந்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் சங்கம விழா
2 hours before • Update
வால்பாறை நடுமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் உடுமலையில் சங்கம விழா நடத்தினர். இதில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கூலித்தொழிலாளி படுகொலை: உறவினர்கள் சாலை மறியல்
2 hours before • Update
ஓமலூர் அருகே கூலித்தொழிலாளி அன்வர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரியும், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 hours before • Update
தீப்பிடித்த லாரி
திருப்பூர், அக்.4-கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் இருந்து கார்பன்டை ஆக்ஸைடுடன் கன்டெய்னர் லாரி, கோவை

தேங்காய் ஓடுகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள்!
2 hours before • Update
கோவையைச் சேர்ந்த சுஜித் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி பயனுள்ள கைவினைப் பொருட்களை உருவாக்கி வருகிறார். இந்தியாவின் அனைத்து மாநிலப் பெயர்களையும் செதுக்கி இவர் படைத்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

கொடி காத்த தியாகி குமரன் பிறந்தநாள் விழா
2 hours before • Update
தியாகி குமரனின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி மற்றும் திருப்பூரில் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு
2 hours before • Update
ஏற்காட்டில் விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படகு இல்லம் மற்றும் பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
2 hours before • Update
திருப்பூர் பொங்கலூரில் தமுஎகச சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

