பிரிவு
பிற செய்திகள்
கல்லூரி விடுதி உணவில் புழுக்கள்
1 hour before • Update
நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி உணவில் புழுக்கள் இருந்ததைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். தரமான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

குடிநீர் விநியோகம் சீராகாததால் சோலூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!
1 hour before • Update
சோலூர் பேரூராட்சியில் 5 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு - மறியல்
1 hour before • Update
பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குப்பை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பணி நிரந்தரம் கோரி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்
1 hour before • Update
தமிழகம் முழுவதும் பணி நிரந்தரம் மற்றும் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
1 hour before • Update
ரூ.150 கோடி ஃபாரக்ஸ் டிரேடிங் மோசடி புகார்
சேலம், அக்.5-சேலத்தில் ரூ.150 கோடி ஃபாரக்ஸ் டிரேடிங் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து, பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர்.

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
1 hour before • Update
உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 100 நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து தொடங்கியுள்ளது. குருமலை பகுதியில் பெய்த மழையால் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து

கிராமப்புற சாலையோர ஆபத்தான தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை
1 hour before • Update
உடுமலை கிராமப்புற சாலைகளில் சாய்ந்த நிலையில் உள்ள தென்னை மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் மரங்கள் முறிந்து விழும் முன் அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி
1 hour before • Update
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி கல்கத்தா ஆர்.பெரியசாமியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் அனுசரிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன் பணம் பெற்றுக்கொண்டு கிரைய ஒப்பந்தப்படி மனை வழங்காமல் ஏமாற்றுவதாக ஆட்சியரிடம் புகார்
1 hour before • Update
திருப்பூர் முதலிபாளையத்தில் முன்பணம் பெற்றுக்கொண்டு வீட்டுமனை வழங்காமல் ஏமாற்றுவதாக 39 குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். கூடுதல் பணம் கேட்பதாக உரிமையாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்
1 hour before • Update
திருப்பூர் இந்திரா நகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி, 6 நகராட்சிகளில் இடையூறுகளை மீறி சிஐடியு ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
1 hour before • Update
திருப்பூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகளில் பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஒப்பந்த ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மடத்துக்குளம்–கணியூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்: சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை!
1 hour before • Update
மடத்துக்குளம்-கணியூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

