முந்தய பக்கம்

திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

9 hours before
திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் கூட்டுறவு சார் பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகனுக்கு கூடுதல் பதிவாளர் எந்தவொரு அறிவிப்பும் வழங்காமல் திடீரென ஆய்வு மேற்கொண்டு அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை என்று கூறி வேல்முருகனை தற்காலிக பணிநீக்கம் செய்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் அருள்மொழிவர்மன், மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமால், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்ட தலைவர் பிரேம்குமார், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram