தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காத மத்தியஅரசு கொள்முதல் நிலையம்விவசாயிகள் சாலை மறியல்

9 hours before
கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காத  மத்தியஅரசு கொள்முதல் நிலையம்விவசாயிகள் சாலை மறியல்
<p><strong>கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காத மத்தியஅரசு கொள்முதல் நிலையம்விவசாயிகள் சாலை மறியல்</strong></p><p>அச்சிறுப்பாக்கம், ஆக.3-செங்கல்பட்டு மாவட் டம், அச்சிறுப்பாக்கம் அருகேமின்னல் சித்தாமூர் ஊராட்சி யில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்,கடந்த நான்கு மாதத்துகு்கு முன்பு மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டது. இந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவ சாயிகளிடம் இருந்து சுமார் ரூ.3 கோடி மதிப்பி லான நெல் கொள் முதல்செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு 4 மாத காலம் ஆகியும் வங்கி கணக்கில் பணம் வர வில்லை. இதனால்,ஆத்திர மடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்கக்கோரி தொழுப்பேடு-ஒரத்தி செல்லும் பிரதான சாலை யில் அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்த ஒரத்தி போலீஸார், விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவிவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், வேளாண்துறை அதிகாரி கள் நேரில் வந்து, மாலைக்குள் பணம் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.