குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன்ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
9 hours before
<p><strong>குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன்ஆட்சியர் அலுவலகம் முற்றுகை</strong></p><p>செங்கல்பட்டு, ஆக. 3செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரியப்பாக்கம் கிராம ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால், அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு உடனடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில்திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்குத் தடையின்றி குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். </p>
