அழகாபுரியில் குடிநீர் தட்டுப்பாடு; கூடுதல் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு
9 hours before

அழகாபுரியில் குடிநீர் தட்டுப்பாடு; கூடுதல் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விருதுநகர், ஆக.3-விருதுநகர் அருகே அழகாபுரி காளியம்மன் கோவில் தெருவில் குடிநீர் தட்டுப் பாடு, சுகாதார சீர்கேடு மற் றும் போதிய பேருந்து வசதிஇல்லாததால் நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் மனு அளித்தனர்.விருதுநகர் அருகே உள்ள அழகாபுரி கிராமத் தின் காளியம்மன் கோவில் தெருவில் சுமார் 100 குடும்பங் கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காகதோண்டப்பட்டபோது குடிநீர் குழாய் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுவரை

குழாய் சீரமைக்கப்படாததால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்

காரணமாக பொதுமக்கள் தனியார் வாகனங்கள் மூலம் விலை கொடுத்து குடிநீர்

வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், ஊராட்சி நிர்வாகம் மூலம் வாரந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வந்த கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யும்பணியும்தற்போதுநடைபெறவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி புழுக் கள் உருவாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்அத்துடன், இப்பகுதிக்கு

போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து சீரான குடிநீர் வழங்கவும், கழிவுநீர் கால்

வாய்களை சுத்தம் செய்து சுகாதாரத்தை மேம்படுத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.