பொதுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா போராட்டம்
9 hours before

பொதுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா போராட்டம்

செங்கல்பட்டு, ஆக 3-செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட வையாவூர் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில்தெருவை, 1976-ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பள்ளிக்குச் செல்வது, இறந்த வர்களின் உடல்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துத் தேவைகளுக்கும் இந்தச் சாலையையே பயன்படுத்தி வரு கின்றனர்.இந்நிலையில், தனியார் ஒருவர் சாலை இருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, கடந்த 9 மாதங்களுக்குமுன்பு சாலையின் குறுக்கே மூன்று மதில் சுவர்களை எழுப்பியுள்ளார்.

பொதுச்சாலையைப் பாதுகாக்கவும், தெருவின் நடுவே இடையூறாக உள்ள இந்த ஆக்கிரமிப்புச் சுவரை அகற்றக்கோரியும் பொது மக்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து படவேட்டம்மன் கோவில் தெரு பொதுமக்கள் கடந்த மாதம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் கூட, ஆக்கிரமிப்புச் சுவர் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் முன்பு தரையில் அமர்ந்து, பொதுச்சாலையில் உள்ள ஆக்கிர மிப்பை உடனடியாக அகற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்க ளிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இரண்டு நாட்களில் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ். ராஜா, வட்டக்குழு உறுப்பினர் வனிதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.