முந்தய பக்கம்

தங்க டாலரை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

9 hours before
தங்க டாலரை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

தங்க டாலரை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

சென்னை, ஆக. 3-சென்னை தண்டையார் பேட்டை நேதாஜி நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த செய்யது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரிஸ்வானா. இவர்களது மகள் ஆக்கியா,வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 4 கிராம் எடையுள்ள தங்க டாலர் ஒன்றைக்கண்டெடுத்தார்.

இதுகுறித்து உடனடியாக தனது தந்தையிடம் ஆக்கியா தெரிவித்தார். அதன் பின்னர், ஆக்கியா தனது தந்தையுடன்ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் தங்க டாலரை ஒப்படைத்தார்.சிறுமியின் நேர்மையையும் பொறுப்புணர்வையும் பாராட்டிய போலீசார், அவரை வாழ்த்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram