தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எடப்பாளையம் - லாலாபேட்டை ஏரி தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தம்நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

9 hours before
எடப்பாளையம் - லாலாபேட்டை ஏரி தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தம்நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
<p><strong>எடப்பாளையம் - லாலாபேட்டை ஏரி தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தம்நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை!</strong>ராணிப்பேட்டை, ஆக. 3 – வாலாஜா வட்டம், வாணாபாடி பஞ்சா யத்திற்குட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் உள்ள தார் சாலைப் பணிபாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளதால், கிராம மக்களும் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.எடப்பாளையம் துர்கையம்மன் கோவில் முதல் லாலாபேட்டை ஏரி வரை சுமார் 1,300 மீட்டர் தூரத்திற்கு தார் சாலைஅமைக்கும் பணி கடந்த ஜனவரி 2026-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது. ஆனால், பணி தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படாமல் அரைகுறையாகவே போட்டு வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, இந்தச் சாலைதான் கிராம விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும்கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் மக்களுக்கு ஒரே முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. விவசாய நிலங்களுக்கு டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஏனைய விவசாய வாகனங்கள் செல்ல இந்தச் சாலையே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.</p><p>தற்போது சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால், டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி, சாலையில் பயணிக்கவேமுடியாத அவலநிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோர் இச்சாலையில் பாதுகாப்பாகச் செல்ல முடியாமல் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.</p><p>கிராம மக்களின் நலன் மற்றும் விவசாயி களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, எடப்பாளையம் துர்கையம்மன் கோவில் முதல் லாலாபேட்டை ஏரி வரையிலான 1,300 மீட்டர் தார் சாலைப் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எடப்பாளையம் கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.