தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து: 13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்

5 hours before
அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து:  13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்

அரசு ஊழியர்கள் பேருந்து விபத்து: 13 பேர் காயம் ஆட்சியர் நேரில் ஆறுதல்

செங்கல்பட்டு,ஆக.4 -கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சுமார் 30 பேர், சென்னையில் நடை

பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காகப் பேருந்தில் திங்கள்கிழமை (ஆக.3) சென்னைக்குப் புறப்பட்டனர்.

செவ்வாயன்று அதி காலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்றபோது, அரசு ஊழி

யர்கள் பயணம் செய்த பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 13 அரசு

ஊழியர்கள் காயமடைந்த னர். காயம் அடைந்த அனை வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ

மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

தகவலறிந்த செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் மு. வீரப்பன், மேல்மருவத்தூர் மருத்து

வமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று

வருபவர்களிடம் நலம்

விசாரித்து ஆறுதல் கூறி னார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, உரிய உயர் சிகிச்சைகளை வழங்க உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணை பொதுச் செயலாளர் சி.முகமது உசேன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் விக்டர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் சே. வசந்தகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகி களும் உடனிருந்து காயமடைந்த வர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.