தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி'

5 hours before
சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி'

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி'

சென்னை, ஆக 4-சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ளவழக்கறிஞர் சங்க கட்டிடத்தில், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் சட்ட சொற்பொழிவு நிகழ்ச்சிநடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின்செய லாளர் எஸ்.அறிவழகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில்,சென்னையில் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் இயங்கி வருவதால் வழக்கறிஞர்களுக்குப் போக்குவரத்துநெரிசல் உள்ளிட்ட பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, வழக்கறிஞர்க ளின் சிரமங்களை முற்றிலும் தவிர்க்கும் வகையில், சுமார் 160-க்கும் மேற்பட்டநீதிமன்றங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து பிரமாண்டமான ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம்அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இந்த திட்டத்திற்கு தமிழக முதலமைச்சரும் ஒப்புதல்அளித்துள்ளதாகவும், தற்போது இது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் விரைவில்முழுமையாக நிரப்பப்படும் என்றும், இதன் மூலம் வழக்குகள் மேலும் நியாய மாகவும் நேர்மையாகவும் நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், சங்கத்தின் துணைத் தலைவர் சசிகுமார், நூல கர் ரகு, பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர் சங்கநிர்வாகிகளும் உறுப்பி னர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.