தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருதம் சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

3 hours before
மருதம் சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மருதம் சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்உத்திரமேரூர், ஆக. 4 -காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் வட்டத்தில் மருதம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாயன்று காஞ்சிபுரம் காவலான் கேட்ஆட்சியர் அலுவலகம் அருகில் விவசாயிகள் சங்கத்தின சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சாரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, சிஐடியு துணைப்பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார், விச.மாநிலசெயலாளர் சாமிநாதன், துணைத்தலைவர் நேரு, மாவட்ட நிர்வாகிகள் என்.நந்தகோபால், கே.செல்வம் உள்படபலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சினேகாவை சந்தித்து தலைவர்கள் மனு அளித்துமுறையிட்டனர். அந்த மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம்உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள மருதம், திருப்புலிவனம், புலிவாய் மற்றும் கருவேப்பம்பூண்டி ஆகிய 4 கிராமங்களில் சுமார் 503ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் திட்டத்தை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசும், காஞ்சிபுரம் மாவட்டநிர்வாகமும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 24 கிராமங்களில் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அழித்துச் சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் விவகுடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.மேலும், ஏரிகள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளும், அரசு நிலங்களும் கையகப்படுத்தப்படுவதால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அழியும் அபாயம்ஏற்பட்டுள்ளது. இதனால் பால்வளம், காய்கறி, கரும்பு மற்றும் நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உற்பத்தியும்கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

எனவே, இந்த 4 கிராமவிவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவு உற்பத்தி மற்றும் ஏரி,குளம், கிணறுகள் உள்ளிட்ட நீர்வளத்தைப் பேணவும் தமிழக அரசும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நிர்வாக

மருதம் சிப்காட் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள்

சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.