தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

3 hours before
சென்னை விரைவு செய்திகள்

திருப்பத்தூரில் விபத்தை ஏற்படுத்தும் பேனர்களால் வாகன ஓட்டிகள் சிரமம்

திருப்பத்தூர், ஆக. 4-திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஓட்டல் ஹில்ஸ் எதிரே, கிருஷ்ணகிரி சாலையில் இருந்து சேலம் மற்றும் திருவண்ணாமலை சாலைக்குச் செல்லும் இணைப்புச் சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தொடர்ந்து சென்று வருவதால், இது எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும், வாகன ஓட்டிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாகவும் திகழ்கிறது.

இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வருவாய்த்துறையினர் இந்த இடத்தில் ஒரு பேனர் வைத்துள்ளனர். குறிப்பாக, பள்ளி குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள், சாலையைக் கடக்கும்போது எதிரே வரும் வாகனங்களைச் சரிவர கவனிக்க முடியாதபடி இந்த பேனர் தடையாக உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்துடன் முதன்மைச் சாலையைக் கடக்க வேண்டிய ஆபத்தான சூழல் நிலவுகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை வருவாய்த்துறையும் நகராட்சி நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை எழும்பூர், கடற்கரை வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம்

சென்னை, ஆக 4-சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ. 842 கோடி மதிப்பில் நடைமேம்பாலம் இணைப்புப் பணிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, புதன்கிழமை முதல் வரும் 20-ம் தேதி வரை உழவன் எக்ஸ்பிரஸ் உட்பட 9 விரைவு ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் வரும் ஆகஸ்ட் 22 முதல் 30 வரை சில மின்சார ரயில்களின் சேவைகளிலும் மாற்றங்கள் மற்றும் ரத்து செய்யப்படுவதாகச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 22 முதல் 30 வரை இரவு நேர மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதோடு, சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே பகுதி நேரமாக இயக்கப்படும். இவற்றுடன் ஆகஸ்ட் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் கூடுதல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் இந்த மாற்றங்களை அறிந்து தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுவாஞ்சேரியில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

கூடுவாஞ்சேரி, ஆக.4-செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ராஜிவ்காந்தி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை என்கிற வவ்வால் (22). இவர் மீது ஏற்கனவே 5 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகக் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜதுரையை எஸ்.ஐ. ஜாகீர் ஹூசைன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

சென்னையில் ரூ.400 கோடியில் வெள்ளத் தணிப்புத் திட்டங்கள்

சென்னை, ஆக.4-சென்னை நகரில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.400 கோடி மதிப்பில் 20 திட்டங்களை நீர் வளத்துறை பரிந்துரைத்துள்ளது.

கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் தடைகளை அகற்றுவது, பாதுகாப்புச் சுவர்கள் கட்டுவது, ஏரிகளைச் சீரமைத்து வெள்ள ஒழுங்குபடுத்திகள் அமைப்பது போன்ற குறுகிய காலப் பணிகள் மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நட்டு கால்வாயில் பாதுகாப்புச் சுவர் அமைப்பது மற்றும் ஆழப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வரவிருக்கும் பட்ஜெட்டில் பரிசீலிக்க வேண்டும் எனப் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூளைமேட்டில் சிறுமி தற்கொலை

சென்னை, ஆக.4-சூளைமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் இவரது தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில், தாய் மறுமணம் செய்துகொண்டார். தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனவேதனையில் இருந்த அவர், சனிக்கிழமை இரவு தனது ஊருக்குச் சென்ற மாமாவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு இந்த விபரீத முடிவெடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்ட இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இம்பெல்லா சிகிச்சையால்உயிர் தப்பிய முதியவர்

சென்னை, ஆக. 4-சென்னை பிரசாந்த் மருத்துவமனையில், நுரையீரலில் நீர் கோர்த்து, இதயம் வெறும் 30% மட்டுமே செயல்பட்ட 62 வயது நீரிழிவு நோயாளிக்கு மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர் அரவிந்த் துருவாசல் குழுவினர் வெற்றிகரமாகச் சிகிச்சை அளித்துள்ளனர்.

நோயாளிக்கு அறியாமலேயே மாரடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாதாரண ஆஞ்சியோபிளாஸ்டி செய்வது ஆபத்தாக இருந்தது. எனவே, சென்னையில் முதல்முறையாக ‘இம்பெல்லா’ கருவி மூலம் ரத்த ஓட்டத்தைச் சீரமைத்து, கடினமான அடைப்பை ‘எக்சைமர் லேசர்’ கொண்டு நீக்கி, ஸ்டென்ட் பொருத்தினர்.

3 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இச்சிகிச்சைக்குப் பின் நோயாளி முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினார். இரு நவீன தொழில்நுட்பங்களை இணைத்துப் பயன்படுத்தியதால் தீவிரமான நிலையிலிருந்த நோயாளியைக் காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர் அரவிந்த் தெரிவித்தார்.

பட்டம் விட்ட இளைஞர்கள் கைது

சென்னை, ஆக.4 —புதிய வண்ணாரப்பேட்டையில் ஆபத்தான மஞ்சா நூலைக் கொண்டு பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த சூர்யா (20)மற்றும் பிரசாந்த் (21) ஆகியஇருவரைப் காவல்துறையினர் கைது செய்தனர். கண்ணாடித் தூள் மற்றும் பசை கலக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் இந்த நூலால் கடுமையான காயங்களும் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம்உள்ளதால், காவல்துறையினர் இவர்களை கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.