காரகஸ், ஆக.3- ரஷ்யாவில் அக்டோபர் 23 முதல் 24 வரை நடைபெற உள்ள பிரிக்ஸ் பிளஸ் பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் வெனிசுலா ஜனாதி பதி நிக்கோலஸ் மதுரோ பங் கேற்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைப்பு விடுத்துள்ளார். வளரும் தெற்கு லக நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்தி அமை தியான பொருளாதார கட்டமைப் பை ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு உரு வாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய கூட்ட மைப்பிற்கு மாற்று அணியாக பிரிக்ஸ் உருவாகி வருகின்றது
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட் டணி நாடுகளால் பொருளாதார தடை மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்ட பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின் றன. இடதுசாரி ஆட்சி நடை பெறும் வெனிசுலாவும், அமெரிக் காவால் 900-க்கும் அதிகமான பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஜன வரி மாதம் பிரிக்ஸ் கூட்டமைப் பில் இணைய விரும்புவதாக வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தெரிவித்திருந்த நிலையில் தற்போது, ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.