world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. ஜெர்மனி ஜனாதிபதி ஒலாஃப் ஷோல்ஸ் குறித்து உக்ரைன் தூதர் இழிவான விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளிக்க மறுத்த ஷோல்ஸ், ஏனைய மேற்கத்திய தலைவர்கள் சென்றது போல உக்ரைனுக்கு செல்லும் திட்டம் இல்லை என கூறியுள்ளார்.
  2. பின்லாந்து அமைச்சரவை நேட்டோவில் இணைவது  என முடிவு செய்துள்ளது. ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் திட்டம் இல்லை என செர்பியா மீண்டும் தெரிவித்துள்ளது.
  3. ரஷ்யா மீதான தடைகள் காரணமாக பிரிட்டனில் மருந்துகள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
  4. ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் “மருந்து சுவாசம் செய்யும் இன்ஹேலர்” எனப்படும் கருவியின் விலை உயர்வு காரணமாக பலர் அதனை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என ரெபாக்கா ஷியரர் எனும் மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
  5. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தனக்கு ரூ.56 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எகிப்து மதிப்பிட்டுள்ளது.
  6. “பாம்பு தீவு” எனப்படும் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்ற திரும்பத் திரும்ப உக்ரைன் படைகள் முயல்கின்றன. ஆனால் தோல்வி அடைவது மட்டு மல்ல; ஏராளமான ஆயுதங்களையும் வீரர்களையும் இழக்கின்றனர்.
  7. புதியதாக நேட்டோவில் இணையும் நாடுகளுக்கு ராணுவ ஆதரவு தரத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. நேட்டோவை விரிவாக்கம் செய்ய முனைபவர் களுக்கு சமாதானமும் அமைதியும் நோக்கம் இல்லை  என ஜான் ஓபர்க் எனும் ராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
  8. ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதித்திருப்பதால் ஐரோப்பாவில் எண்ணெய் விலை வரும் குளிர் காலத்தில் மூன்று மடங்கு உயரும் ஆபத்து உள்ளது என ரிஸ்டாட் எரிசக்தி நிறுவனம் அபாய மணி அடித்துள்ளது.
  9. மரியபோல் நகரை கைப்பற்றிய ரஷ்யா, போரில் உருக்குலைந்த அந்த நகரை மறுகட்டமைப்பு செய்ய  அதிவேக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
;