world

img

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. எவ்வளவு மாதங்கள்/ஆண்டுகள் ஆனாலும் ரஷ்யா வுடன் போரிட உக்ரைனுக்கு அனைத்து உதவிகளை யும் செய்ய தயார் என நேட்டோவின் தலைவர் ஸ்டோல்டன்பர்க் தெரிவித்துள்ளார்.
  2. போர் தொடங்குவதற்கு முன்பு ஜனவரி மாதமே உக்ரை னுக்கு என்னென்ன ஆயுதங்களை எப்போது கொடுக்க வேண்டும் எனும் திட்டம் அமெரிக்கா தீட்டி தயாராக வைத்திருந்தது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
  3. இந்தோனேஷியாவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க புடின், ஜெலன்ஸ்கி ஆகிய இருவருக்கும் அழைப்பிதழ் அனுப் பப்பட்டுள்ளது.
  4. கடன்-ஒத்திகை (Lend-Lease) எனும் திட்டத்தின் கீழ்  உக்ரைனுக்கு அமெரிக்கா தரும் ஆயுத உதவியின் உண்மையான பொருள் என்னவெனில் இன்றைய உக்ரைன் மக்களின் வருங்கால வாரிசுகளின் தலை யிலும் கடன் திணிக்கப்படும் என்பது ஆகும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் ஒரு ஆயு தம் கூட உக்ரைனுக்கு இலவசமாக தரப்படவில்லை.
  5. உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவை கடுமையாக விமர் சிக்கும் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானில் தனது செயல்களுக்காக தர வேண்டிய நட்ட ஈடு தொகையை காலம் கடந்தும் தரவில்லை.
  6. மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலை! ரஷ்யாவிடமிருந்து ரூபிள் மூலம் கொள்முதல் செய்யும் எரிசக்தி வாயுவை ஜெர்மனியும் கிரீசும் போலந்துக்கு தருகின்றன. என்னதான் ரஷ்யாவை கடுமையாக எதிர்த்தாலும் அதன் எரிசக்தி இல்லாமல் ஒரு வாரம் கூட போலந்து தாக்குப் பிடிக்க இயலாது.
  7. ரஷ்யப் படைகள் கைப்பற்றிய உக்ரைன் நகரமான மரியபோலில் மக்களின் வாழ்வு சகஜ நிலைக்கு திரும்புகிறது. பள்ளிகளும் மருத்துவமனைகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. ரஷ்ய - உக்ரைன் போர் குறித்து ஐரோப்பா ஆழமாக சிந்திக்க வேண்டும்; போரினால் லாபம் ஈட்டுவது யார்?
  8. யாரின் ஆயுதத் தொழிற்சாலைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன? யார் பாதிக்கப்படுகின்றனர்? இந்தக் கேள்விகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் சிந்தி த்து சுயேச்சையான நிலைபாடு எடுக்க வேண்டும் என சீனா வற்புறுத்தியுள்ளது. அமெரிக்காவின் போர் வீரர் ஜோசப் கன்சல் உக்ரை னில் போரில் உயிரிழந்துள்ளார்.
  9. அவருக்கு வயது 22 தான்! ஏழு மாத குழந்தை உள்ளது. அவரின் உயிரி ழப்பு யாருக்காக எனும் சோகமான கேள்வி எழுந்துள்ளது. ஒரு அமெரிக்க ராணுவ ஒப்பந்ததாரர் மூலம் உக்ரை னுக்கு வந்து உயிர்விட்டுள்ளார். இப்படி எத்தனை பேரோ?