world

உக்ரைன்-ரஷ்ய போர்: தொடர் நிகழ்வுகள்

* போலந்து நாடு ரஷ்யாவின் நிலக்கரிக்கு தடைவிதித்துள்ளது.

* ரஷ்யாவின் எண்ணெய்க்கு ரூபிளில் பணம் தரமுடியாது எனவும் ரஷ்யா தங்களை பயமுறுத்த இயலாது எனவும் இத்தாலி கூறியுள்ளது. அதே சமயம் ஹங்கேரியும் அர்மீனியாவும் ரூபிள் மூலம் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஏற்றுக்கொண்டுள்ளன.

* ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்துவதற்கு பதிலாக போரை நீட்டவே மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா முயல்கிறது என அரசியல் ஆய்வாளர் டைமூர் ஃபொமன்கோ கூறியுள்ளார்.

* உக்ரைனுக்கு ஆதரவாக போரிட வந்த ஹயாத் டாரிர் அல் ஷாம் எனப்படும் அமைப்பின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 4 பேரை கலுகா எனும் இடத்தில் ரஷ்ய ராணுவம் கைது செய்துள்ளது. இவர்களிடமிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

* மஸ்கொவா எனும் தனது போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அதனை தாக்கி அழித்தது தாங்கள்தான் என உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

* உக்ரைனின் மரியபோல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள படைகளிடையே பல மேற்கத்திய ராணுவ அதிகாரிகளும் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.  இவர்களை மீட்க 4 ஹெலிகாப்டர்கள் வந்தன. அவற்றில் மூன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்திவிட்டது. ஒரு கப்பலும் வந்தது. அந்த முயற்சியும் தடுக்கப்பட்டது. இப்பொழுது ரோஜர் கிளவுட்டியர் எனும் அமெரிக்க அதிகாரியை ரஷ்யா சிறைபிடித்துள்ளதாக யு.எஸ்.எஸ்.ஏ. நியூஸ் எனும் அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரஷ்யா பயமுறுத்தி உள்ளது.

* ரஷ்யாவின் எண்ணெய்க்கு ஈடுசெய்ய வேறு எந்த தேசத்தாலும் முடியாது என பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் ஐரோப்பியஒன்றியத்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

* 2015ஆம் ஆண்டில் கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் உள்ள டான்பாஸ் பகுதிக்கு சுயாட்சி தர வேண்டும் என வலியுறுத்திமின்ஸ்க் ஒப்பந்தத்தை உருவாக்கிய காரணத்தால் தன்னை உக்ரைன் தனதுதேசத்திற்குள் வர தடை விதிக்கிறது என ஜெர்மனி ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன்மியர் கூறியுள்ளார்.

* உக்ரைனில் ரஷ்யா குழந்தைகளை கடத்துவதாக ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவிடம் உக்ரைன் புகார் தெரிவித்தது. ஆனால் அதற்கான நிரூபணங்கள் இல்லை என யுனெஸ்கோ இந்த புகாரை நிராகரித்துவிட்டது. உலக அமைப்புகள் அனைத்தும் தனது பொய்களை அங்கீகரிக்க வேண்டும்
என உக்ரைன் எதிர்பார்க்கிறது போலும்.

* 900 மில்லியன் டாலர்களை செலவு செய்து உக்ரைன் வீரர்களுக்கு பல ஆண்டுகளாக கனடா போர் பயிற்சி அளித்தது தெரியவந்துள்ளது. இதில் அசோவ் பட்டாலியன் எனப்படும் நாஜி வீரர்களும் அடங்குவர். ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட நாள் சதியில் மேற்கத்திய நாடுகள் ஈடுபட்டு வந்துள்ளனஎன்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.